Posts

Showing posts from January, 2008

காணாமல்போன ஒரு சிறுபத்திரிகையாளன்

-தேவகாந்தன் ஒன்று எந்த ஒரு சிறுபத்திரிகையும் , கனதி சார்ந்து அது அற்பமோ உன்னதமோ , மிகுந்த சிரமத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது. அதற்கான முயற்சிகள் அவரவர் வாழ்க்கைப் போராட்டத்துக்கானதை விடவும் மகா உக்ரமானவை என்பதை , நானே 'இலக்கு ' என்ற கலாண்டிதழ் ஒன்றின் ஆசிரியனாய் மூன்றாண்டுகளில் ஒன்பது இதழ்களைக் கொண்டுவர முடிந்த அனுபவத்தில் புரிந்துகொண்டிருக்கிறேன். ஓர் ஆசிரியனின் ரத்தமும் சதையும் நரம்புகளாலுமான அவன் ஆசையின் பிம்பமே அவனது சிற்றிதழ் என்பது மிகையான கூற்றல்ல. மணிக்கொடி, சரஸ்வதி, வானம்பாடிகள் போன்ற , ஈழத்தில் மறுமலர்ச்சி போன்ற, சிறுபத்திரிகைகள் தமிழிலக்கியத் தடத்தை தமது காலத்தில் மாற்றியமைக்கும் விசையின் துணைச் சக்திகளாய் இயங்கியிருக்கின்றன. எழுத்து, (முந்திய)கணையாழி, பரிமாணம், நிகழ், (முந்திய )தாமரை, நிறப்பிரிகை போன்றவற்றை தமக்கான தனித் தடங்களை முன்னெடுத்து நிறுவியனவாய்ச் சொல்லலாம். தீபம், சுபமங்களா, ஈழத்தில் சுதந்திரன், மல்லிகை, நந்தலாலா, சரிநிகர் போன்றன வாசக ரசனையை அதிகரித்தவேளையில் படைப்பாளிகளையும் உருவாக்கி வளர்த்தெடுத்தன. சிற்றிதழ்கள் அவரவர் சுய ஆற்றல்களை வெளிப்