Posts

Showing posts from October, 2008

எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை:

எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை: இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதை நூலை  முன்வைத்து… சமீபத்தில் வெளிவந்த இளம் கவிஞர்களின் ஆக்கங்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைத் துறையின், எதிர்காலச் செல்நெறியைச் சுட்டிக்காட்டும் கூறுகள் புலப்பட ஆரம்பித்திருப்பதை ஒரு தீவிர வாசகர் எதிர்கண்டிருக்க முடியும். அவ்வாறான ஆக்கங்களில் இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தொகுப்பை ஒரு முக்கிய வரவாக நான் காண்கிறேன். ‘நாடற்றவனின் குறிப்புகள்’ எல்லா கவிதைத் தொகுப்புகளையும் போலவே மோசமானது, சுமாரானது, நல்லது, மிகநல்லது என்ற பகுப்புகளுள் அடங்கக்கூடிய விதமாக அமைந்து, 53 கவிதைகளைக் கொண்டிருக்கிற நூல்தான். ஆனாலும் இது அழுத்தமாகக் காட்டிச் செல்லும் புதிய செல்நெறியால் கவனம் மிகப்பெறுகிறது. புலம்பெயர்ந்தோர் கவிதை தன் மரபோடு, தன் புதிய புலத்தின் கவிதைத் தன்மையை உணர்கிறதும், உள்வாங்குகிறதுமான காலகட்டமொன்று இயல்பில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறதை இத் தொகுப்பில் முக்கியமாகக் காணக்கிடந்தது. சென்ற நூற்றாண்டின் அந்திமம் வரை ஈழத்துப் புலம்பெயர்ந்த கவிஞர்களின் பாடுபொருள் பெரும்ப

தான் பயிலாத கவசதாரிகள்

தான் பயிலாத கவசதாரிகள் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலக மகா யுத்தங்கள் இரண்டும் முடிவுற்ற காலங்கள், சமூக அக்றையுள்ள படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் மீது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டு மறைந்துபோயிருந்தன. ஏர்னெஸ்ட் ஹேமிங்வே, வேர்ஜீனியா வூல்ஃப் போன்றோர் தற்கொலையே செய்துகொண்டார்கள். உலகமளாவி விரிந்திருந்த மனஅவலத்தின் பதியப்பட்டுள்ள சாட்சியங்கள் மட்டுமே இவை. பதியப்படாத அவலங்கள் இன்னும் எத்தனை எத்தனையோவாக இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு படைப்பு இயலில் மனமீடுபட்டிருந்தவர்களும் சாதாரண மக்ளைப்போல தம் கையறுநிலைக் காலங்களில் இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பது யோசிக்க சற்று வியப்பாக இருக்கலாம் நமக்கு. ஆனால், தம் உலகமளாவ விரிந்துள்ள எதிர்பார்ப்புக்களும், மனித சமுதாயம்மீதான அக்கறைகளும் தம் கண்முன்னால் சரிந்துகொண்டிருப்பதைக் காணச் சகிக்க முடியாத இவர்களால் இப்படித்தான் நடந்துகொள்ள முடிந்திருக்கிறது. அரசுகள் ஒன்றைச் சொல்லிக்கொண்டு வேறொன்றைச் செய்துகொண்டிருந்தன. சுதந்திரம் என்பது தமக்கானது மட்டுமே என்பதான அர்த்தமாக குறுக்கிக்  காணப்பட்டது. அழிவுகளில் தமக்கு மட்டுமானவையே கணக்கி