Posts

Showing posts from August, 2008

சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம்

சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம் கடந்த இரண்டாயிரமாண்டுச் சரித்திரம் பல்வேறு புதைபொருள் ஆய்வுகள், மற்றும் நவீன அறிவியல் ரீதியிலான அறிமுறைகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து எமக்கு இக்காலகட்டத்திய அண்ணளவான வரலாறு கிடைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இதன் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கு உரியதாயினும், சொல்லப்பட்ட அந்த வரலாற்றினடியாகவே இச் சந்தேகங்கள் தோற்றமெடுக்கின்றன என்பதும் கவனம் கொள்ளப்படவேண்டும். உண்மையின் தவிர்க்கவியலா அழுத்தம் காரணமாய் இவ்வரலாறுகள் மாற்றியெழுதப்பட்டும் வருகின்றன. இல்லையெனில் மாற்றுவரலாறாய் விஸ்வரூபமெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரலாறு முழுக்க அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிற நன்மைகளும், நல்லவர்களும் அழிக்கப்பட்ட சோகங்கள்தான் விரவிக்கிடக்கின்றன. வரலாறு அறிந்துள்ள முதல் புரட்சியாளன் யேசுநாதர்தான். அந்த மரிப்பு – கொலைப்பாடு – தாங்கொணாத் துக்கம். கொடுமையின் உச்சம். அதைச் சினிமா மொழியில் வெளிக்கொண்டுவந்தது ‘THE PASSION OF CHRIST’. மனித இனம் இன்றும் யேசுநாதர் சிலுவையையே கடவுளாய் வணங்கி ஆன்ம வேதனை தணிகிறது. அன்றைய கத்தோலிக்க மதத்துக்க