Posts

Showing posts from January, 2009

பொறியில் அகப்பட்ட தேசம்’

‘பொறியில் அகப்பட்ட தேசம்’ மு.பொ.வின் கவிதை நூல் மூலம் சர்வதேசியமாய் விரிந்த தமிழ்க் கவிதைப் பரப்பு 2002 இல் வெளிவந்த மு.பொ.வின் நீண்ட கவிதை நூலான ‘பொறியிலகப்பட்ட தேசம்’, அது வெளிவந்த காலத்திலேயே பலத்த எதிரும்   சார்புமான  விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்காவின் வர்த்தக வலயமான இரட்டைக் கோபுரங்களின் தகர்வின் உடனடிப் பின்னாக வெளிவந்த நூல் என்ற வகையில் இதன் வரவும், இது முன்வைத்த கருத்துக்களும் மிகமுக்கியமானவையாக இருந்தன. அந்த இரட்டைக் கோபுரங்களின் தகர்வின் பின் கடந்தோடிய இத்தனை ஆண்டுகளில் தகர்ப்பு விளைத்த அரசியலின் பயங்கரவாதங்களையே உலகத்தின் மய்ய அரசியல் நிகழ்வுகளாக இந்த உலகம் கண்டுவந்துகொண்டிருந்தது. 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியை இந்தக் கலம்பகங்களின் ஒட்டுமொத்தமான விளைச்சல் எனலாம். இதன் சார்புநிலை நாடுகள்கூட இந்தப் பொருளாதாரச் சிக்கலில் ஆழமாகச் சிக்குண்டுபோயுள்ளதை நிதர்சனம் தெரிவிக்கிறது. இப்போது ‘பொறியிலகப்பட்ட தேசம்’ காலகாலத்துக்கும் தமிழ்க் கவிதையுலகில் நினைக்கப்பெறும் தகவுடையதாகியிருக்கிறது. நியூயோர்க் உலக வர்த்தக மய்யமான இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட