Posts

Showing posts from March, 2009

தேவதைக் கதைபோல

இந்தியக் களத்தில் ஒரு சினிமா: ஸ்லம்டோக் மில்லியனெர் (Slumdog Millionaire) குறித்து…  கடந்த ஓரிரு மாதங்களாகவே ‘ஸ்லம்டோக் மில்லியனர்’ சினிமாபற்றி பத்திரிகை, சஞ்சிகை, இணைய தளங்கள் மூலமாக சிற்சில கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருந்தும், சினிமாவைப் பார்க்கும்வரை எந்தவோர் அபிப்பிராயத்தையும் கொள்வதில்லையென்று பிடிவாதத்தோடிருந்தேன். எல்லா நல்ல சினிமாக்கள் குறித்தும் இதுவே என் வழிமுறையாக இருப்பினும், இந்தச் சினிமாவைப் பார்ப்பதற்கான ஆவல் ஓர் அவதியாக என் மனத்தில் அலைந்துகொண்டிருந்தது. ஆனாலும் ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நல்ல பிரதியொன்று கிடைத்து இதைப் பார்க்க முடிந்திருந்தது. இது என்னுள் எழுப்பிய கேள்விகள், உணர்வுகளையே தாய்வீடு வாசகர்களோடு இங்கு பகிரந்துகொள்ளப் போகின்றேன். ஒரு சிறந்த சினிமாவைப் பார்த்த முழு அனுபவமாய் அது இருந்தது. ஆனாலும் சினிமா முடிந்த பின்னர் மனத்தில் அடங்க மறுத்து அலையலையாய் எழுந்த உணர்வுகள், இன்னும் உள்ளத்தில் கிளர்ந்து மனத்தை பரவசநிலையடைய வைத்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் நல்ல சினிமா குறித்து உரையாடுவதற்கு அரிதாகவேனும் சில நல்ல படைப்பார்த்தமான