Posts

Showing posts from February, 2010

கலாபன் கதை: 8

கப்பலைத் தூக்கி அப்பால் இறக்கிவிட்ட விந்தை மூன்றாவது கப்பல் பொறியாளராக கலாபன் வேலைசெய்ய ஏறிய ஆ.ஏ.ளுநுயு டீஐசுனு என்ற அந்தக் கப்பல் அவனது வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தைக் கொடுத்திருந்தது. உலகத்தின் முக்கியமான இரண்டு கால்வாய்களினூடான பயணம் மறக்க முடியாததுதான். இவையெல்லாம் திட்டமிட்டோ, எதிர்பார்த்தோ நடப்பதில்லை. எங்கேயும் இதுவே நிலைமையெனினும், கப்பல் வர்த்தகத் துறையில் இது சத்தியமான வார்த்தை. எல்லா பயண அனுபவங்களையும் விழுங்கிவிடுகிற மாதிரி ஓர் அற்புதம் எதிர்பாராததும், திட்டமிட்டுமிராத ஒரு தருணத்தில் நடக்கச் செய்கிறது. அப்போது அதை அனுபவிப்பதுதான் விவேகம். கலாபன் அதை நன்குணர்ந்திருந்ததாகவே தெரிந்தது. சுயஸ் வழியைக் கடந்து கப்பல் மத்தியதரைக் கடலுள் பிரவேசிதுக்கொண்டிருந்த பொழுதில்தான் இரவு 12-04 வேலையை முடித்துக்கொண்டு தூங்கச் சென்ற கலாபன் எழுந்து மறுபடி வேலைக்குத் தயாராக வெளியே வந்திருந்தான். சுயஸ் கால்வாயின் மேற்புறமுள்ள நைல்நதி தீரத்து அழகில் எகிப்திய அழகுராணி கிளியோபாத்திரா அன்னப்படகில் ஏறி நிலவெறிக்கும் இரவுகளில் ஓரிரு சேடிகளுடன் மட்டும் மிதந்து களித்த அழகை, தன் மெல்லிய போத

கலாபன் கதை: 7

ஒரு பெருவிபத்து தவிர்ந்த விதம் எண்பதுகளின் ஆரம்பம் அது. M.V.SEA BIRD என்ற கிரேக்க கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தான் கலாபன். கப்பலின் புதிய கட்டுமானம் அவனை எண்ணும்போதெல்லாம் வியக்கவைத்துக்கொண்டிருந்தது. எந்தப் பனிப் பாளத்தையும் தன் மூக்கினால் குத்தி உடைத்துக்கொண்டு முன்சென்று விடக்கூடியதாய் அதன் முன்முனை கட்டமைப்புக் கொண்டிருந்தது. ஒரு பிரமாண்டம் தன் எஃகு வடிவத்தின் வார்ப்பில் அலைகளில் அலைந்து திரிந்தது இறுமாந்து. அலைகள் தழுவவும், ஒருபோது அவையே சீறிச் சினந்து முட்டிமோதவும் செய்தபோது தழுவலைப்போலவே மோதல்களையும் தன் புன்சிரிப்பு மாறாமல் அது அநாயாசமாக ஏற்றுக்கொண்டிருந்ததாய்ப் பட்டது கலாபனுக்கு. அப்போது அதன் பயணம் சிங்கப்பூரிலிருந்து சுயஸ் கால்வாயினூடாக ஸ்பெயினை அடைவதாக இருந்தது. ஒரு நீண்ட விடுமுறையின் பின் துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலில் அவன் வந்து சேர்ந்துகொண்ட தருணம் அற்புதமானது. முதன்முதலாக ஒரு மூன்றாம் நிலை கப்பல் பொறியியலாளனாக அவன் நியமனம் பெற்றிருந்தான் அந்தக் கொம்பனியிலே. சம்பளமும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. கொழும்பு விமானநிலையத்திலிருந்து புறப்பட்