Posts

Showing posts from July, 2010

‘மூன்றாம் சிலுவை’

ஒரு பாவி அறையப்படுவதிலிருந்து விலகி ஓடிவிட்ட சிலுவை ‘மூன்றாம் சிலுவை’ நூல் குறித்து சில விமர்சனக் குறிப்புகள் நாவல் என்ற முத்திரையோடு வெளிவந்திருப்பினும் நாவல், குறுநாவல் என்ற எந்தவித வகைமைப்பாடுகளுக்குள்ளும் அடங்காது, சில சம்பவங்களின் சேர்த்தியான ஒரு நீண்ட கதையென்பதே சரியான இதன் அடையாளமாகும். ‘மூன்றாம் சிலுவை’ சொல்லுகின்ற செய்தி, அந்தச் செய்தியின் பின்னணியான நிகழ்வுகளைவிடவும், நூல் கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்பின் விஷயங்களே முக்கியமானவை. இதன் கட்டமைப்பு பலஹீனமானது என்பதோடு, இதிலுள்ள கவிதைகளின் சேர்த்தியும், நாட்குறிப்பின் மூலமான நிகழ்வுகளின் தெரிவிப்பும்கூட எதுவித நன்மையையும் செய்துவிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இதை ஒரு நாவலாக்கும் அத்தனை முயற்சிகளும் இதில் தகர்ந்தே கிடக்கின்றன. பாலியல் சார்ந்த விஷயங்களையும், பாலியல் நிகழ்வுகளையும் எழுதக்கூடாதென்பதில்லை. தமிழிலக்கியத்தின் இறுகிப்போயுள்ள மரபார்ந்த ஒவ்வொரு முறிப்பையும் கரகோஷத்தோடு வரவேற்க தீவிர வாசக உலகம் தயாராகவே இருக்கின்றது. எஸ்.பொ.வின் ‘தீ’ அப்படித்தான் வரவேற்புப் பெற்றது. ஆனால், அது ஒரு தேவையின் அளவுக்கே தொடர்ச்சியைக்

கலாபன் கதை:13

கைவிடப்பட்ட கப்பல் வழக்கு காலம் எதனையும், எவரையும் மாற்றுகின்றது. கலாபனும் மாறியிருந்தான் என்பதை அவன் போனதடவை வந்திருந்தபோது நான் கண்டிருந்தேன். வீட்டு நிலைமை குறித்த அவனது கவனம் அதிகமும் என்னைக் காண திருமலை வந்திருந்த அவனது பேச்சில் இழையோடிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், தான் கூடவிருந்தால்தான் கல்விச் சிரத்தையும், ஒழுக்க மேம்பாடும் ஏற்படுமென்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அதிசயமாகவிருந்தது. ஆனாலும் ஆச்சரியப்படவில்லை. காலம் எவரையும் மாற்றுகின்றதுதான். ‘கொழும்பு செல்கிறேன், கப்பல் வேலையெடுப்பதொன்றும் முன்புபோல் சுலபமானதாக இல்லை, கடலிலே மிகப் பெரும் நவீன கப்பல்களின் வருகை, ஓடிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சிறிய சிறிய பழைய கப்பல்களை இரும்பு விலைக்கு விற்கும்படியாக ஆக்கிவிட்டது, கன காலமில்லை, கொழும்பில் ஒரு மாதம்வரை தங்கி முயற்சித்துப் பார்ப்பேன், முடியாவிட்டால் பம்பாய் போய்விடுவேன், அங்கேயும் என்ஜினியர் வேலைதான் வேண்டுமென்று காத்திருக்க மாட்டேன், என்ஜின் றூம் வேலை எதுவானாலும் சேர்ந்துவிடுவதே எனது எண்ணம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன், ஒரு மாதத்திலேயே பம