Posts

Showing posts from October, 2014

மரணித்த பின்னும்

Image
1971 ஆவணி 31இல் பிறந்த நிர்மலதா என்கிற ஒரு பெண்ணின் மரணம், செப்டெம்பர் 10, 2014இல் நிகழ்ந்தது. எல்லோர்வரையிலும் நாள்தோறும் யுத்தங்களினாலும், பட்டினியாலும், நோயினாலும் சம்பவிக்கும் லட்சோப லட்சம் மரணங்கள்;போல் இதுவும் ஒன்றாயினும், அவளது தந்தைக்கு அது அவனது சொந்த மரணமேபோல் சுயத்தின்; இழப்பாயிற்று. தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரங்கள், மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடையேகூட இவ்வளவு பாதிப்போடு ஒரு மரணம் நிகழ்ந்திருக்க முடியும். அன்பினது ஆழமான வேரூன்றல் என்பதிலிருந்து இந்தப் பாதிப்பு கூடியும் குறைந்துமாய் விளைகிறது. ஒரு நெருங்கிய உறவின் மரணத்தில் கண்ணீரே சிந்தாமல், ஒரு வாய்ச் சொல் அரற்றிப் புலம்பாமல் நொருங்கிப்போனவர்கள் இருக்கிறார்கள். போலவே, அழுது விழுந்து புரண்டு கதறிய பின், சுடலையிலிருந்து அல்லது மின்தகன ‘தோட்ட’த்தினின்று திரும்பிய நாளின் பொழுது விடிந்ததிலிருந்து காதலும் காமமும் இலௌகீகத் தேடல்களுமாய் பிரிவுகளை மறந்துபோனவர்களும் நிறையவே யதார்த்தத்தில் உண்டு.  தந்தையானவன் உடைந்து நொறுங்கியது பெற்ற மகளென்ற பாசத்தில் மட்டும் உருவானதில்லை. தான் தவறவிட்ட அடைவுகளை அவளே தன் சுய