Posts

Showing posts from March, 2015

சிறுகதை:: கறுப்புப் பூனை

கறுப்புப் பூனை வெளியையும், வெளிச்சத்தையும், மனித நடமாட்டத்தின் அசைவையும், சத்தத்தையும்  தேடுபவர்போல் தன்னின் பெருமளவு நேரத்தையும் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்னர் தன் தேடலின் ஏமாற்றத்தில் ஓடும் வாகனங்களைப் பார்த்துவிட்டு ஒரு வெறுமையான மனநிலையுடன் வீட்டுக்குள் திரும்புகிறார். கனடாவுக்கு வதிவுரிமைபெற்று வந்த கடந்த ஆறு மாத காலத்தையும் குருசாமி அவ்வாறுதான் அல்லாடிக் கழித்துக்கொண்டிருக்கிறார்.  அந்த வீட்டின்மேல் மௌனமாயும், தனிமையாயும் தொங்கிக்கொண்டிருந்த இருண்மைகள் பகலிலுமே நிலைத்துக் கிடப்பனவாய்ப்பட்டது அவருக்கு. அங்கிங்கொன்றாக இருந்த வீடுகளும், ரொறன்ரோ ஏரியில் கலக்கவோடிய செந்நதியுடன் சேர விரைந்த சிற்றாற்றினையொட்டிக் கிடந்த செடிகளும், மரங்களும் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்தினவா அல்லது அந்த வீடே இயல்பில் மௌனத்துக்கும் தனிமைக்குமாய் விதிக்கப்பட்டதாவென யோசித்தவேளைகளிலும் அவருக்குப் புரிபடாதிருந்தது. ஒரேயொரு முனைச் சிந்திப்பில் அதற்கான பதிலை அவர் கண்டடைந்திருக்க முடியும். அவர் விட்டுவந்த புலம் ஜன சத்தங்களாலும், அசைவுகளாலும் நள்ளிரவு வரையிலும்கூட உ

எனது கவிதை - இழப்பில்லை

இழப்பில்லை   எங்களைச் சுற்றி நீர் இருந்தது எங்களைச் சுற்றி பெருவெளி  இருந்தது அவை மௌனத்தை எம்மீது திணித்துக்கொண்டிருந்தன நாம் சுவாரஸ்யம் குலையாத பேச்சு சுகத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டினது கண்டோம் நிலா சிரித்தது பார்த்தோம் காற்று உரசியது உணர்ந்தோம் நிசியும் மறந்திருந்தோம் காலம் பொசுங்கிப்போனதாய் இன்று கழிவிரக்கமில்லை பதினான்கு பதினைந்து வயதுகளில் இழப்பதெதுவும் அதனதன் அர்த்தத்தில் இழக்கப்படுவதேயில்லை நட்சத்திரம்… நிலா… தென்றல்… இன்றுமிருக்கிறதை அன்றைய காலங்களினூடாகவே தெரியமுடிகிறது. -தேவகாந்தன் சுந்தரசுகன், ஜனவரி 1999