Posts

Showing posts from September, 2015

உண்மையைத் தேடுதல்\ சாளரம்:3

தேசாந்திரி பக்கத்து வீட்டிலிருந்து லீசாவோடு வெளியே வந்த ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் லீசாவின் இழுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டு வழக்கம்போல் சற்றுநேரம் அதிலேயே தாமதித்து நின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நாய் என்னை நன்கு அறி ந்திருந்தது. மாலையில் உலாத்துகைக்காக அழைத்துச் செல்லும்போது வந்து ஒரு முறை என் கால்களை மணந்து பார்த்தும், என் முகத்தில் முகர என்மீது தாவ முயன்றும், தன் காலை என் கையில் போட்டு குசலம் விசாரித்தும்விட்டு அப்பால் செல்லுகிற நாய் அது. லப்ராடர்  இனம். மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இரண்டடி உயரத்தில் மிக அழகாக இருந்த ஆண் நாய். சிலநாட்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரத்தில் உலாத்துகை வெளிக்கிட்ட ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் நின்றது. சற்று இருட்டாக  இருந்ததால் என்னைக் காணாமல்தான் தேடுகிறதோவென நினைத்து அசைவைக் காட்டினேன். உள்ளுக்குள்ளாய் என்னோடு தன் நாய்க்கிருக்கும் நட்பை விரும்பாத லீசா முடிந்தவரை முயன்று ரோனியை அப்பால் இழுத்துச்செல்லவே அப்போதும் முயன்றுகொண்டிருந்தாள். ஆனால் என் அசைவைக் கண்டுகொண்ட நாய் வழக்கம்போல குழைந்துகொண்டு வில்லங்கம

கலாபன் கதை:2-9

கடத்தல் கப்பல் அதற்கொரு நீண்ட காலம் பிடித்திருந்தது. நினைப்பை மறக்க நினைக்கிறபோதே அது தீர்க்கமாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு மேலே மேலே வந்துகொண்டிருந்தது. இலங்கையில் இனக்கலவரம் நடந்து அப்போது எட்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. வீடு போகிற எண்ணம் கலாபனின் மனத்துக்குள்ளிருந்து துடித்துக்கொண்டிருந்தது. புதிதாகக் கட்டி குடிபுகுந்திருந்த வீட்டைப்  பார்க்கக்கூட அவனுக்குப் போக இயலாதிருந்தது. பிள்ளைகளைப் பார்க்கிற தவனம் ஒருபக்கம். ஆனாலும் நாட்டைவிட்டு பெருவாரியான மக்கள் இந்தியாவுக்கும், ஜேர்மனிக்கும் பிரான்ஷுக்கும் தப்பி ஓடிக்கொண்டிருக்கையில், நிறைந்த வருமானமுள்ள ஒரு வேலையையும் விட்டுவிட்டு அந்த மண் பிறந்த மண்ணாகவே இருக்கும்போதிலும் திரும்பியோடிச் சென்றுவிட சுலபத்தில் மனம் உந்திவிடுவது இல்லை. ஒவ்வொரு முறையும் பம்பாய் திரும்புகிற வேளைகளில்போலன்றி ஏனோ இப்போதெல்லாம் மனம் உவகையும், உடல் வீறும்கொள்ள பின்வாங்கிக்கொண்டிருந்தன. ஜெஸ்மினின் தொடர்பு ஒரு விலங்காக இறுகுவதற்கிருந்த கடைசி நிமி~ங்களில்தான் அதை அவனால் உணர முடிந்திருந்தது. அது அவளது எந்தத் திட்டமிடலில் விழுந்திருக்காதபோதும், அதை அவசரமாய்க் கழ