Posts

Showing posts from July, 2016

காற்றின் தீராத பக்கங்கள்:

கருமையத்தின் அழகிய நிகழ்வு  கருமையத்தின் நான்காவது அரங்காடல் நிகழ்வு இம்மாதம் ( மே, 2008 ) 24 ஆம் மற்றும் 25 ஆம் தேதிகளில் யோர்க் வுட் தியேட்டரில் நடந்தேறியிருக்கிறது. ஒரு சூறைத்தனம் நிறைந்ததாய் குளிர் கொட்டி முடிந்த பனிக்காலத்தின் பின் வழக்கமாய் அரங்கேறும் நாடக அளிக்கைகளில் இவ்வாண்டு முதலாவதாக பார்வையாளர்களை ஒன்றுகூட வைத்தது இது. ‘வானவில்லின் விளிம்பில்’, ‘காற்றின் தீராத பக்கங்கள்’, ‘நத்தையும் ஆமையும்’ ஆகிய மூன்று நிகழ்வுகள் இதே அளிக்கை முறையில் வழங்கப்பட்டன. முந்தைய மூன்று ஆண்டுகளில் மிகவும் வலுக் குறைந்த பிரதிகளுடனும், பேசக்கூடிய விதமாக அமையாத தொழில்சார் திறமைகளுடனும் அரங்கம் வந்த பெண்கள் பட்டறையினர், இவ்வாண்டு ஒரு நல்ல பிரதியுடனும் கூடுதலான அரங்க திறமைகளுடனும் தம்மை வெளிப்படுத்தியிருந்தார்கள். அமெரிக்க கறுப்பினப் பெண்களின் வாழ்வியல் நிலைமையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்ததாகவும், எழுச்சி கொண்டதாகவும் அமைந்த நாடகம்தான் ‘For  Cloured  Girls Who have Considered Suicide\ When the Rainbow is Enuf. 1974 இல் இது அமெரிக்கா பிராட்வேயில் மேடையேற்றப்பட்டபொழுதே மிகவும் பேசப்பட்ட அரங்