Posts

Showing posts from September, 2016

சமகால தமிழிலக்கியத்தில்ஜெயகாந்தனின் நாவல்களது வகிபாகம்

ஜெயகாந்தனின் எழுத்துக்களில் கட்டுரை, சிறுகதைகள் தவிர்ந்த நாவல்கள், குறுநாவல்கள் குறித்து தீர்க்கமான பகுப்பேதும் செய்துவிட முடியாதே இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வகுக்கப்பட்ட அவற்றுக்கான இலக்கணங்களே இன்றளவும் கல்விப்புலத்தில் அளவைகளாக இருக்கின்றன. நவீன இலக்கிய விமர்சனம் தன் அளவைகளை இப்போது சொல்லிக்கொண்டிருப்பினும், அவை கல்விப்புலத்தில் இன்னும் உள்வாங்கிக்கொள்ளப்படவில்;லை. இருந்தாலும் அது இங்கே முக்கியமில்லை. எப்போதும் ஒரு அளவை இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு மேலே செல்லலாம். அளவைகளென்பது அனைவருக்கும் ஒப்ப முடிந்திருப்பினும், அவரவரின் அளவைகளால் ஒன்றுபோல் முடிவுகள் ஆகிவிடவில்லை. ஒருவரது கையால் அளக்கப்பட்டது மற்றவரின் கையளவுக்கு சமமாக இருக்கவில்லையென்பது அளவின் பிழையல்ல, அளவுகோலின் பிழையே. இது பிழைகூட இல்லை. ஒரு வித்தியாசமென்றும் இதனைக் கூறலாம். இலக்கியம் கலை சார்ந்த விஷயத்தில் மட்டுமே அளவைகள் ஒன்றாக இருந்தாலும் அளப்பவர் வேறாக இருக்கிறவரையில் முடிவுகள் வேறாக வருகின்றன. ஒருவகையில் இந்தப் பிழையோடும் கூடியதுதான் இங்கே சாத்தியமாகவும் இருக்கிறது. கம்பன் கவிச்சக்கர