Posts

Showing posts from May, 2018

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

Image
விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.) கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற்றியும் குறிப்பாக உங்களது முக்கியமான நாவல்கள்பற்றியுமே இந்நேர்காணலில் முக்கியப்படுத்த எண்ணியிருக்கிறோம். உங்களது முக்கியமான நாவல்கள்பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் முதல் நாவல்பற்றிய எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? பதில்: இந்த வித்தியாசமான ஆரம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது. பள்ளியில் வினாக்களுக்கான விடையெழுதுதல், தமிழ்ப் பாடத்தில் கட்டுரை மற்றும் சுருக்கம் எழுதுதல

கனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…

பிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்கிறது. தான் அலைவுற்ற வழிநெடுகிலும் கண்ட துன்ப துயரங்களின் வடிகாலாக அது எழுத்தையே கதியென நினைக்கிறது. பிறந்த நாட்டில் இனவழிப்பு மூர்க்கமாகச் செயற்படுத்தப்படும்போது உயிரபயம் கேட்டுவரும் அச் சமூகம், குடிபுகுந்த மண்ணில் தம் வாழ்விருப்பை உறுதிப்படுத்தும் அவசியம் நேர்கிறபோது அது தனக்கான ஒரு அரசியலையும், அதற்கான கருத்துநிலைகளையும், சமூக கட்டமைப்புக்கான வழிமுறைகளையும் எழுத்தின்மூலமே வகுத்துக்கொள்வதுதான் காலகாலமாக புலம்பெயர் சமூகங்களின் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. அது தன்னை உரசிப் பார்க்க ஒரு தளம் வேண்டியிருக்கிறது. அது எழுத்தூடகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளாக இருக்கிறது. அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் தம்மிருப்பை எழுத்தூடகமான பத்திரிகை சஞ்சிகைகளில் அது பயில்வு செய்யும்போது, பத்திரிகை சஞ்சிகைகளுக்கு  சொந்த மண்ணிலிருந்த பொறுப்பையும் தேவையையும்விட மிகக்கூடுதலான பங்காற்றுவது தவிர்க்கமுடியாதது. இலங்கைத் தமிழ் மக்களின் புலப்பெயர்வு 1983இன் பின