Posts

Showing posts from May, 2019

துக்கத்தின் வடிவம் - கவிதை

எனினும் இருந்துகொண்டுதான்   இருக்கிறது இன்னும்   ஓர்   எதிர்பார்ப்பும்   நம்பிக்கையும் எங்கோ   ஓர்   மூலையில் வாழ்வு   குறித்து . கொஞ்சம்   அமைதிக்கும் கொஞ்சம்   நிம்மதிக்கும் கொஞ்சம்   உணர்விறுக்கம்   தளர்ந்து   வாழ்வதற்கும் ஆசைகளின்   பெருந்தவிப்பு . ஆனாலும் மீறி   எழுகிறது மனவெளியில்   பய   நிழல்களின் கருமூட்டம் . முந்திய   காலங்களில் மரணம்   புதைந்திருந்த   குழிகள் எங்கே   இருந்தன   என்றாவது   தெரிந்திருந்தது . ஆனால்   இப்போது ...? அதிர்வுகள்   பரபரப்புக்கள்   கூக்குரல்கள் எதுவுமற்ற   இந்தப்   போரின் மவுனமும்   நிச்சலனமுமே பயங்கரம்   விளைக்கின்றன . எங்கே   வெடித்துச்   சிதறும் எங்கே   அவலம்   குலைந்தெழும்   என்று தெரியாதிருப்பதே   பெரும்   பதைப்பாய்   இருக்கிறது . மரணத்தின்   திசைவழி   தெரிந்திருத்தல் மரண   பயத்தின்   பாதியைத்   தின்றுவிடுகிறது . இப்போதெல்லாம் தூக்கம்   அறுந்த   இரவுகளும் ஏக்கம்   நிறைந்த   பகல்களுமாயே காலத்தின்   நகர்கிறது . அதிர்வுகள்   பரபரப்புக்கள்   கூக்குரல்கள் எதுவுமற்ற   இந்தப்   போரின்

இமையத்தின் படைப்புகள் குறித்து...

Image
விளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து... புனைவுசார்ந்த எழுத்துக்களில் நாவல், குறுநாவல், நெடுங்கதை, சிறுகதை ஆகிய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால பகுப்புகள் இன்று அவ்வளவு வீச்சான ப ரிசோதனையில் இல்லை. நாவல், சிறுகதை என்கிற இரண்டு கூறுகளில்   இன்றைய வாசிப்பின் தளம் இவற்றை பொதுவாக உள்ளடக்கிவிடுகிறது. ஆக, ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை விமர்சிக்க வரும் இன்றைய ஒரு விமர்சகனுக்கு நிச்சயமாக இவற்றின் பகுப்புபற்றி ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இமையத்தின் படைப்புகள்பற்றிய ஒரு அறிமுக வியாசம்கூட   இச் சிக்கலை எதிர்கொண்டே தீரும். பதிப்பக பகுப்புகளின் ஊடாகவன்றி தனியான ஒரு பகுப்பில் தன் பயணத்தை   மேற்கொள்வது இந்தவகையில்   சிரமமாகுமென்ற புரிதலுடன்தான் இவ்வாண்டு (2019) கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் இமையத்தின் படைப்புகள்பற்றி ஒரு அறிமுக வியாசத்தை இங்கு பதிவாக்க    முனைகிறேன். இமையத்தின் கோவேறு கழுதைகள் ( நாவல்-1994), ஆறுமுகம் (நாவல்- 1999), மண்