Posts

Showing posts from August, 2020

நினைவேற்றம்: நாணயமூர்த்தியின் கடன்

  நான் உயர்கல்வி பயின்ற டிறிபேர்க் கல்லூரியை எப்போதாவது நினைக்கிற தருணங்களில் தானும் அதனோடு ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது சாவகச்சேரி பஸ் நிலையம். அத்தனைக்கு   நெடுஞ்சாலையின் ஒடுங்கிய அவ்விடத்தில் கல்லூரி வாசலுக்கு நேரெதிரில் மிக அணுக்கமாக இருந்திருந்தது அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் காலில் கல்லூரி ஸ்தாபிதமாகியிருந்ததால், அதற்குப் பிறகுதான் பஸ் நிலையத்தை அந்த இடத்திலே அமைத்திருப்பார்களென்றாலும், அந்த இடத்தில் அதன் அமைவு ஏட்டிக்குப் போட்டியானதுபோல் நீண்டகாலமாய் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. பஸ் நிலையத்தின் ஓர் ஓரத்தில் கைவாளிக் கிணறு ஒன்று இருந்தது. மறுவோரத்தில் ஒரு பயணிகள் தங்குமிடம், தள்ளி ஒரு மலசலகூடம் ஆதியனவும். அருகிலே சந்தைக் கட்டிடம் இருந்தது. கட்டிடமென்பது திறந்தவெளியில் அமைந்த சில கூடங்களும் இரண்டு பக்க ஓரங்களிலுமிருந்த பலசரக்குக் கடைகளும்தான். எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்   கட்டிட கூடத்தில் பிரபலமாயிருந்தவை உடுப்பு மற்றும் துணிக் கடைகளும், ‘மணிக் கடை’களும்தான். அங்கே பெண்கள் அதிகமாகக் கூடியதனாலேயே ஆண்களின் தொகையும் அதிகமாக இருந்ததுபோல் தெரிந்தது. சண்டியர்களின்  

கதை: புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்

Image
  நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால்,   புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது. இல்லாவிட்டால் மனைவி அஞ்சனாதேவியின் விருப்பத்தை மீறுகிறவரல்ல நல்லதம்பி. அவரறிந்தவரையில் புற்றுச் சாமியைத் தேடிக் கண்டுபிடித்ததொன்றும்   யாருக்கும் சுலபத்தில் இருந்துவிடவில்லை. மதியத்தில் தேடத் தொடங்கினால்தான் மாலைக்குள்ளாகவாவது அந்த அடர் பனங்கூடற் பற்றைக்குள் அவரைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் நிச்சயமில்லாதது. தியானம் கூடும்வரை   மனித சஞ்சாரமற்ற அப் பனங்கூடலுள் அங்கிங்காய் நடந்து திரியும் புற்றுச் சாமி, எந்த அயற் கிராமத்தையும் எது தேவைக்காகவும் அணுகுபவரில்லை.   தன் காரியமாய் அவர் வெளியே செல்வதற்கு ஒரேயொரு நாள்தான் உண்டு. பூமியை இருள் கவியும்   மாதத்தின் அந்த ஒரேயொரு   நாளான அமாவாசையாகவே அது இருந்தது. சாமி அன்று தன் விருப்ப தரிசனம் கொடுப்பதும் அவிநாசிக்கு மட்டுமாகவே இருந்ததென்பதும் பலரறிந்த ரகசியம். அது இரண்டு சக்திகளின் சங்கம காலமாகவன்றி வேறல்லவெனவே அறிந்தவர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சாமிபோலவே அவிநாசி. சாமி