Posts

Showing posts from November, 2008

மக்கள் கவிஞன்

இப்போதெல்லாம் கார்களில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகியிருக்கிறது இசை. வானொலியில், குறுந் தகட்டிலென்று பலவாறாக அவை. சிலவற்றை அவற்றின் அர்த்தத்துக்காக, சிலவற்றை அவற்றின் இசைக்காகவென்று ரசிக்கவும் முடிகிறதுதான். ஆனாலும் இவற்றின் சமூகப் பொறுப்புப்பற்றி யோசிக்கையில் வெறுமைதான் எஞ்சுகிறது. பழையனவெல்லாம் நல்லனவுமல்ல, புதியனவெல்லாம் கெட்டனவுமல்ல என்ற புரிதல் எனக்கிருக்கிறது. ஆயினும் சில பழைய ஆளுமைகள்போல் புதியனவான ஆளுமைகள் தோன்றவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டும். தம் கொள்கைகளைக் கடைசிவரை காத்திருந்து, அவற்றோடு தம் வாழ்வை இணைத்துக்கொண்டவர்கள்தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில், திரைப்படப் பாடலாசிரியர்களைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் முதன்மையானது. அவருக்குப் பின் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படத் துறையிலே தோன்றியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் பட்டுக்கோட்டையாரின் இடம் வெறுமையாகவே இருக்கிறது. இளையராஜாவுக்கு இருக்கும் சிறப்புகளில் ஒன்று அவர் கிராமிய இசையை திரைப்படத் துறைக்குள் அதிகமாகவும் புகுத்தியவ

கனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்னடைவுகளும்

பரந்தவெளித் தேசமான கனடாவில் தமிழ்ப் பட உலகத்துக்கான வெளி மிக விசாலமானது. ஒரு நிலைமாற்றுக் கால தமிழ்த் தலைமுறையினரின் சமூக, பொருளாதார, உளவியல் நிலைப்பாட்டுத் தளங்களிலிருந்து பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட முடியும். அதன் புலப்பெயர்வும், மண்ணின் ஞாபகங்களும், மனவடுக்களும், உறவுகளின் தொடர்பாடலும், அவர்களது துன்ப துயரங்களும் பல பெருங்கதையாடல்களுக்கான ஊற்றுக்களைக் கொண்டவை. ஆனால் அது ஒரு வரட்சியில் கிடப்பதே காணக்கூடியதாக உள்ளது. இதன் முக்கிய காரணிகளை மேலெழுந்தவாரியாகவேனும் அலசுவதே இக் கட்டுரையின் நோக்கம். அரங்க ஆட்டத்திலிருந்து ஒரு பாய்ச்சலாக சினிமா உருவெடுத்து வந்திருப்பினும், அதன் பல கூறுகளைச் சினிமாக் கலை நிராகரித்துவிட்டே தன் பாதையில் தொடர்ந்திருக்கிறது. 1885இல் பிரான்ஸிலும், ஜேர்மனியிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சினிமாவுக்கான கமெரா, புரொஜெக்டர் ஆகிய உபகரணங்கள் இருபதாம் நூற்றாண்டுக்கான பாய்ச்சலைத் தொடங்க அன்றே வழியைத் திறந்துவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் தமிழில் விரிந்தெழுந்ததுதான் திரைப்படத் துறை. அது இந்தியச் சினிமாவாக ம

புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

தமிழ்ப் புனைகதைப் பரப்பில் புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள் இரு கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து  தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிக்க எதிர்ப்பார்ப்போடும் நம்பிக்கையோடும் கவனிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற கருதுபொருள், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின்னரான இக் காலகட்டக் கணிப்பில் எந்தத் தளநிலையை அடைந்திருக்கிறது என்பதை ஒரு வரைகோட்டு விழுத்தலாக அமைத்துப் பார்க்கிறபோது, முன்பிருந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் சறுக்கலடைந்து இருப்பதையே ஒருவரால் காணமுடியும். அதன் காரணங்களையும், காரணங்களின் பின்னணிகளையும் சுருக்கமாகவேனும் அலசுகின்ற தேவையிருக்கிறது. தொண்ணூறுகளில் ஒரு நூலைத் தயாரிப்பதற்கான செலவை இந்திய ரூபாயில் வெளிநாட்டுப் பண மாற்றாகக் கணித்த நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது மிகவும் குறைவாகத் தென்பட்டதாயே கொள்ளக்கிடக்கிறது. ஒரு நூலை எவராவது எழுதிவிட்டிருந்தால் அதன் அச்சாக்கத்துக்கு பெரிய தடையேதும் ஏற்பட வாய்ப்பிருக்கவில்லை. அச்சாக்கமல்ல, எழுதுவதுதான் தேவையானதாக இருந்தது அன்றைய நிலையில். அதன்படி சிலபல நூல்களும் வெளிவந்தன. அவை வந்த சுவடுமில்லாமல் மறைந்தன. ஆக நம்பிக்கை அளிப்ப