Posts

Showing posts from 2016

சமகால தமிழிலக்கியத்தில்ஜெயகாந்தனின் நாவல்களது வகிபாகம்

ஜெயகாந்தனின் எழுத்துக்களில் கட்டுரை, சிறுகதைகள் தவிர்ந்த நாவல்கள், குறுநாவல்கள் குறித்து தீர்க்கமான பகுப்பேதும் செய்துவிட முடியாதே இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வகுக்கப்பட்ட அவற்றுக்கான இலக்கணங்களே இன்றளவும் கல்விப்புலத்தில் அளவைகளாக இருக்கின்றன. நவீன இலக்கிய விமர்சனம் தன் அளவைகளை இப்போது சொல்லிக்கொண்டிருப்பினும், அவை கல்விப்புலத்தில் இன்னும் உள்வாங்கிக்கொள்ளப்படவில்;லை. இருந்தாலும் அது இங்கே முக்கியமில்லை. எப்போதும் ஒரு அளவை இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு மேலே செல்லலாம். அளவைகளென்பது அனைவருக்கும் ஒப்ப முடிந்திருப்பினும், அவரவரின் அளவைகளால் ஒன்றுபோல் முடிவுகள் ஆகிவிடவில்லை. ஒருவரது கையால் அளக்கப்பட்டது மற்றவரின் கையளவுக்கு சமமாக இருக்கவில்லையென்பது அளவின் பிழையல்ல, அளவுகோலின் பிழையே. இது பிழைகூட இல்லை. ஒரு வித்தியாசமென்றும் இதனைக் கூறலாம். இலக்கியம் கலை சார்ந்த விஷயத்தில் மட்டுமே அளவைகள் ஒன்றாக இருந்தாலும் அளப்பவர் வேறாக இருக்கிறவரையில் முடிவுகள் வேறாக வருகின்றன. ஒருவகையில் இந்தப் பிழையோடும் கூடியதுதான் இங்கே சாத்தியமாகவும் இருக்கிறது. கம்பன் கவிச்சக்கர

இறங்கி வந்த கடவுள்

(சிறுகதை) இறங்கி வந்த கடவுள் அவரது கையில் அந்த ஜன சமூகத்தின் மூலக்கனலின் பாத்திரம் இருந்தது. அவர்களது இறைச்சியைச் சுடுவதற்கான தீயை அவர்கள் அதிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள். கனலை உடைய அவர் தன்னைக் கடவுளென்றார். கையில் கனலும், தலையில் சடாமுடியுமாய் இருந்த அவரது ரூபம் பலபேரை ஆகர்ஷம் கொண்டது. பக்தர்கள் பெருகிவந்தவேளையில் ஜனசமூகமும் தனக்கான தீயை கடைகோல்களில் கடைந்தெடுக்க கற்றுக்கொண்டிருந்தது. ஆனாலும் காலகாலமாய் தன் கையில் மூலக்கனலேந்தி வாழ்வாதாரம் தந்தவரை நன்றியோடும், அவரது வல்லமையில் பெரும் நம்பிக்கையோடும் பாடிப் பரவசப்பட்டு நின்றது அது. ஒருநாள் உலகத்தின் மிகவுயரமான மலைச்சிகரத்தில் ஏறிய அந்தக் கடவுள் சூழவும் நோக்கினார். வேறு கடவுளெவரையும் அவரால் கண்டிருக்க முடியவில்லை. உடனே தானே முழுமுதற் கடவுளென பிரசித்தம் செய்தார். அவருக்கு நிறைய பக்த கோடிகள் இருந்தார்கள். வேண்டுபவர் வேண்டியதை ஈபவராக இருந்தாலும், பெரும்பாலும் அனைவரும் அவரையே வேண்டுபவர்களாக இருந்தார்கள். அது அந்தக் கடவுளுக்கு பேருவகையாக இருந்தது. அப்பேருவகையில் கனல்கொண்ட கையோடு அவர் நிருத்தம் செய்தார். அவரது தோற

காற்றின் தீராத பக்கங்கள்:

கருமையத்தின் அழகிய நிகழ்வு  கருமையத்தின் நான்காவது அரங்காடல் நிகழ்வு இம்மாதம் ( மே, 2008 ) 24 ஆம் மற்றும் 25 ஆம் தேதிகளில் யோர்க் வுட் தியேட்டரில் நடந்தேறியிருக்கிறது. ஒரு சூறைத்தனம் நிறைந்ததாய் குளிர் கொட்டி முடிந்த பனிக்காலத்தின் பின் வழக்கமாய் அரங்கேறும் நாடக அளிக்கைகளில் இவ்வாண்டு முதலாவதாக பார்வையாளர்களை ஒன்றுகூட வைத்தது இது. ‘வானவில்லின் விளிம்பில்’, ‘காற்றின் தீராத பக்கங்கள்’, ‘நத்தையும் ஆமையும்’ ஆகிய மூன்று நிகழ்வுகள் இதே அளிக்கை முறையில் வழங்கப்பட்டன. முந்தைய மூன்று ஆண்டுகளில் மிகவும் வலுக் குறைந்த பிரதிகளுடனும், பேசக்கூடிய விதமாக அமையாத தொழில்சார் திறமைகளுடனும் அரங்கம் வந்த பெண்கள் பட்டறையினர், இவ்வாண்டு ஒரு நல்ல பிரதியுடனும் கூடுதலான அரங்க திறமைகளுடனும் தம்மை வெளிப்படுத்தியிருந்தார்கள். அமெரிக்க கறுப்பினப் பெண்களின் வாழ்வியல் நிலைமையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்ததாகவும், எழுச்சி கொண்டதாகவும் அமைந்த நாடகம்தான் ‘For  Cloured  Girls Who have Considered Suicide\ When the Rainbow is Enuf. 1974 இல் இது அமெரிக்கா பிராட்வேயில் மேடையேற்றப்பட்டபொழுதே மிகவும் பேசப்பட்ட அரங்

தேவகாந்தன்நேர்காணல்- மூன்றாம் பகுதி

தேவகாந்தன்நேர்காணல் நேர்கண்டவர்: பதிவுகள் இணைய தளத்துக்காக வ.ந.கிரிதரன்   மூன்றாம் பகுதி 1.பதிவுகள் : அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் ' ஒரு கூர்வாளின் நிழலில் '.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம் . தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம் . இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம் . மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம் . இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா ? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் ' பதிவுகள் ' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா ? தேவகாந்தன் : தமிழ்நாட்டி