Posts

Showing posts from January, 2022

அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவல் குறித்து…

Image
  பேருவகையின் பெருந்தத்துவம்   1997இல் வெளிவந்த அருந்ததி ராயின்   The God of Small Things நாவலுக்கு இருபது வருஷங்களுக்குப் பின்னால் அவரது இரண்டாவது நாவலான The Ministry of Utmost Happiness 2017இல் வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற மகுடத்துடன் காலச்சுவடு பதிப்பாக ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் பெப். 2021இல் பிரசுரமானது. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இதை வாசித்திருந்தபோதும், ஏதோ சில தெளிவுகளுக்காக திரும்ப ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை வாசித்து, மறுபடி ‘பெருமகிழ்வின் பேரவை’க்குள் புகுந்து, மீண்ட பின்னாலும், நாவலின் ஆதாரக் கருத்துநிலை அவ்வளவு அச்சொட்டாய் பிடிபட்டிருக்கவில்லை. அதற்கான சிந்திப்பில் ஒரு நீண்ட காத்திருப்பு தொடர, ஒருபோது மங்கலாகவெனினும் கிடைத்த ஒரு வெளிப்பைத் தொடர்ந்து நூல்பற்றிய மதிப்பீட்டை இங்கு பதிவாக்க விழைகிறேன். தமிழ் மூல நாவல்களுக்குப்போல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வரும் நாவல்களுக்கு வரவேற்பிருந்தாலும் திறனாய்வு ரீதியிலானவோ ரசனை ரீதியிலானவோ விமர்சனங்களோ மதிப்பீடுகளோ குறைவாக வருவதையே என் அவதானித்திருக்கிறேன். தமிழவனின் தமிழ் மூல நாவலான ‘ஏற்கனவ