Posts

Showing posts with the label Unmaiyai Theduthal

உண்மையைத் தேடுதல் சாளரம்:4

கலகமும் முரணும் கண்டனமும் ‘கலக மானுடப் பிறவி’ என்கிறான் முதுவோன். ‘கலக மானுடரே கேளுங்கள்’ என்கிறான் ஒரு சித்தன்.  கலகக் குணம் மனிதருள் இயல்பாய் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். மதவழி மீறி இச்சைப்படி வாழ்தலை மேலே சொன்ன அடி குறித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இலக்கியக் கலகம் வேறானது. அதில் இரண்டு வகையான தன்மைகளை தெளிவாகவே காணமுடியும். ஒன்று, தன்னை இனங்காட்டவும் முன்னிலைப் படுத்தவுமாக. அடுத்தது, உண்மையில் தவறுகள் பிழைகளை இனங்கண்டு அவற்றை மறுதலிப்பதற்கான முனைப்பாக எடுக்கப்படுவது. இதில் பிந்திய கலக குணத்தையே இங்கு நான் சொல்ல முனைகிறேன். முன்புபோலவே இவ்வகைக் கலகம்பற்றி எனக்கு வேறு அபிப்பிராயமில்லை. கலகம் ஒரு விசாரணைக்கான அழைப்புத்தான். அதுவே நியாயத்தை உரைப்பதில்லையெனினும், அதிலிருந்து நியாயத்துக்கான ஒரு தீர்வு பிறக்கும் என்பதே அதை முன்னெடுப்பதற்கான காரணமும் ஆகும். முரணென்பது ஒரு நியாயத்தை முன்னிறுத்திக் கொள்ளப்படுவது. அதுவே முழுமையான நியாயமாக இல்லாதபோதும், அது நியாயத்தின் பெரும்பங்கை தன்னுள் கொண்டேயிருக்கும். இதுவரையான நவீன தமிழ் இலக்கியத்தின் நீண்ட பாதையைத் திரும்பிப் ப...

உண்மையைத் தேடுதல் 3

மனத்தில் அசரீரியாய் ஒலிக்கின்றது காலத்தின் சுருதிபேதம் (வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் இரு சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து…) ‘முதுசொமாய் ’ (2002), ‘தொலையும் பொக்கிஷங்கள்’ (2009) ஆகிய இரண்டு தொகுப்புகளும் ஏறக்குறைய இவ்வாண்டு மாசியிலேயே கிடைத்துவிட்டிருந்தபோதும், அவற்றினுள் பிரவேசிப்பதற்கான காலத்துக்காக சிறிது நான் காத்திருக்கவேண்டி நேர்ந்தது. பரிசுகளை அவ்வப்போது பெற்றிருக்கும் சில கதைகளை உள்ளடக்கியிருப்பினும் பரவலாகப் பேசப்படாதவை இத்தொகுப்புகள். கல்விப்புலம் சார்ந்த ஒருவரிடமிருந்து வந்த தொகுப்புகள் சாதாரண ஒரு வாசகனாய் என்னில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்ற ஆவலில் என் வாசிப்பு துவங்கியது. இரண்டு தொகுப்புகளிலும் இருபது சிறுகதைகள். அளவிலும் சிறிதான இந்தக் கதைகளினூடாக நான் அடைந்த தரிசனம் பிரமாண்டமானது. அவ்வாசிப்பின் அனுபவங்களையே இச்சாளரத்தினூடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். முதலாவது தொகுப்பான ‘முதுசொமாய்’ மிகச்சிறந்த கதைகளைக் கொண்டிருக்காதபோதிலும், அவற்றிலிருந்த உணர்வுவீச்சு இயல்பாய் அமைந்து கதைகளுக்கான வீர்யத்தை அளித்திருந்தது. 1993இலிருந்து 2002வரையான பத்து வருட காலப்பகுதியில் வெளி...

உண்மையைத் தேடுதல்…:2

உண்மையைத் தேடுதல்… Bhopal: A Prayer for Rain (போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை) போன வாரத்தில் ஒருநாள் முன்னதாக அறிய வந்திராத ‘போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை’ என்ற ஒரு வரலாற்றுப் புனைவு வகைச் சினிமாவை எதிர்பாராதவிதமாக பார்க்கிற சந்தர்ப்பமொன்று எனக்கு நேர்ந்தது. விருப்பத்தோடுதான் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த பெயரின் ஆதர்~ம், அந்தச் சினிமாவில் சம்பந்தப்பட்டிருந்த இந்தியக் கலைஞர்களின் ஆற்றல்பற்றிய முன்னறிகை, ஏனைய உலகக் கலைஞர்களின் பங்களிப்புகள் யாவும் அந்த விருப்பத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தன. அன்றைய எனது இரவின் பெரும்பொழுதையும் தூக்கமற்று கலங்கியிருக்கும்படி செய்துவிட்டது சினிமா. இந்தியாவின் மத்தியபிரதேசத்திலுள்ள போபால் என்ற இடத்தில் 1984 மார்கழி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் யூனியன் கார்பைட்டின் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால், அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் மரணம்பற்றியதும், இற்றையவரை ஒன்றரை லட்சம் மக்கள்வரை பாதிக்கப்பட்டிருப்பது பற்றியதுமான சினிமா அது. அச் சம்பவம் நடந்தபோது நான் இந்தியாவில் நின்றிர...