ஏற்புரை…இலக்கியத் தோட்ட நாவல் விருது
இலக்கியத் தோட்ட நாவல் விருதுக்கான 3 நிமிட ஏற்புரை… -தேவகாந்தன்- வணக்கம்! கனவுச்சிறை நாவலுக்கு 2014ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்தமைக்காக அவ்வமைப்பினைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், நடுவர்களுக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச அளவில் மிக முக்கியமான தமிழ் விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது ‘கனவுச் சிறை’ நாவலுக்கு கிடைத்தமைக்காக உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன். நாவல் கதைகொண்டிருக்கும் காலம் 1981 தொடங்கி 2001 வரையான இருபத்தோராண்டுகள். எனினும் அது விரிந்திருக்கும் வெளி இலங்கைச் சரித்திரத்திரத்தில் இருபத்தொரு நுர்ற்றாண்டுகள். அரசியல், மதம், கலையென அது விகாசம்கொண்டிருக்கும் தன்மை இதில் முக்கியமானது. நொடி என்று கால அளவையின் மிகச் சிறிய பகுதி தமிழில் குறிக்கப்படுகிறது. அதையும் உன்னல் கால், உறுத்தல் அரை, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்று என நான்காக வகுத்திருக்கிறது தொல்காப்பியம். ஆயிரம் பக்கங்கள்கொண்ட இந்த நாவலிலும், ஐந்து பாகங்கள், பதினொரு பகுதிகளென நுண்மையாக வகுக்கப்பெற்ற பல்வேறு பகுப்புக்கள். 1981, 1983, 1985 என...