Posts

Showing posts with the label நூல் vimarsanam

புனைவின் நிழல்

Image
ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும் ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த   கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில்     தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன. பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிர...

நூல் விமர்சனம் -10 ‘ஊழிக் காலம்’

Image
தமிழ்க்கவியின் ‘ஊழிக் காலம்’ (நாவல்) புவிக் கோளத்தில் எங்கெங்கோ, என்றென்றோ நடந்த பல்வேறு ஊழிகளினை நிகர்த்த வன்னிப் போரின் நேர் தரிசனப் பதிவுகளாக மட்டுமே இந்நூல் அடங்கிப் போயிருப்பினும், இதன் ஊடுகளில் அடங்கியிருக்கும் சொல்லப்படாத உண்மைகள்தான் இதை முக்கியமான நூலாக்குகின்றதன. ‘ஊழிக்காலம்’ நூலை வாசிக்க ஆரம்பித்தபோது அதில் இயல்பான வேகத்தில் செல்வது எனக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அது களங்கொண்டிருந்த மண் எனதுமாகும். விளையப் போகிறது என்றிருந்த சோகம் அனைத்தும் விழுந்து மூடிய மண். அதனாலேயே அப்பிய துயரத்தோடு பயணத்தை நின்று நிதானமாகவே செய்ய நேர்ந்தது. இலங்கையின் வடபகுதி பஸ்ஸிலும், ட்ராக்டரிலும், சைக்கிளிலும், நடையிலுமாய் நான் அலைந்து திரிந்து உள்வாங்கிய இடம். யுத்தத்திற்கு முன்னாலேதான். வன்னியின் குடியிருப்புகள் தெரிந்திருந்தன. குடியேற்றப் பகுதிகளின் நாற்சந்திகள் தெரிந்திருந்தன. அத் தெருக்களில் ஓடிய பஸ்களின் தட எண்கள், போக்குவரத்து நேரங்கள் தெரிந்திருந்தன. ஆனால் புதிதாக முழைத்த குடியிருப்புகளும், அவற்றின் விஸ்வரூபம்கொண்ட பெயர்களும் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பழகிய  ம...

நூல் விமர்சனம் 9 ‘கடல் கடந்தும்’

வெங்கட் சாமிநாதனின் ‘கடல் கடந்தும்’    புலம்பெயர்ந்தோர் இலக்கியம், இலக்கியவாதிகள், அவர்தம் வாழ்நிலையென ஆழமான பார்வையில் வெளிவந்திருக்கும் இந்நூல்போல் புலம்பெயர்ந்தோர் சூழலில்கூட ஒரு நூல் தோன்றிற்றென்று இத்தனை காலத்திலும்கூட கூறமுடியாதே இருக்கின்றது. 2014 அக்டோபர் நடுப்பகுதியில் திரு.வெங்கட் சாமிநாதனை கர்நாடகாவில் சிமோகா செல்லவிருந்த வழியில் பெங்களூருசென்று சந்திக்க  வாய்ப்புக் கிடைத்தது. 1990களிலிருந்து அவர் நேரடியாக எனக்கு அறிமுகமாகியிருப்பினும், அவரை அவரது ‘பாலையும் வாழையும்’  நூலை வாசித்த 1980களிலிருந்து அறிந்திருந்தேன். 2003வரை நான் சென்னையில் வசித்திருந்த காலத்தில், நாங்கள் தங்கியிருந்ததும் ஒரே இடமாக இருந்த காரணத்தால் ஓய்வு நேரங்களில் சந்தித்து கதைப்பதும், கூட்டங்களுக்குச் சேர்ந்து செல்வதுமென எமது பழக்கம் இறுக்கமாகியிருந்தது. அக்டோபரில் நிகழ்ந்த எமது சந்திப்பு ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரானது. நக்கலும், நளினமும், கிண்டலுமான அவரது விமர்சன முறைமை எனக்குப் பிடித்ததாயினும், அவருடைய சார்புநிலையற்ற விமர்சனமுறைமை எனக்கு மிகமிகப் பிடிக்கும்....

நூல் விமர்சனங்கள் 7 கொலம்பசின் வரைபடங்கள்

யோ.கர்ணனின் ‘கொலம்பசின் வரைபடங்கள்’ (குறுநாவல்) ஆயிரம் நாட்களின் ஈழ வரலாறு சென்றிருந்த சுவடுகள் பதிவாகியுள்ள இந்தப் பிரதி புனைவிலக்கிய வகைமையுள் எது சார்ந்தது என்ற வினா, இதன் கலாநேர்த்தியின் அளவைக் கணிக்க மிகமுக்கியமானது. ‘இப்போதுயுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் அதன் வலியும் வேதனையும் முடியவில்லை. அது ஏற்படுத்திய துயரம் தீரவில்லை. கர்ணனுடைய மனதில் இவற்றின் தீயும் நிழலும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன. 'முடிவற்றஆவேசத்துடன், சகிக்கமுடியாதவெம்மையோடு இந்தத் தீநடனம் அவருடைய  மனதில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த  நடனத்தைக் கர்ணன் விரும்பவில்லை. ஆனாலும் அது  அவரிடமிருந்து  விலகுவதாகவும் இல்லை’ என  யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’சிறுகதைத் தொகுப்புக்குமுன்னுரை எழுதிய  கருணாகரனின் வார்த்தைகள் மெய்யாக இருக்கக்கூடும். அடங்காத் தீயின் கருக்கும் வெம்மை ‘கொலம்பசின் வரைபடங்கள்’ முழுக்கக் காணக்கிடைக்கும். வரலாற்றினால் நிகழ்வுகளைப் பதிவுதான் செய்யமுடியும். இலக்கியம் மட்டுமே நிகழ்வுகள் சிந்திய உணர்வுகளை சிதறாமல் சேகரமாக்குகிறது. உலகமகாயுத்தங்களின் கொடுமைகளை...

இசையில்லாத இலையில்லை -- மதிப்புரை

இசையில்லாத இலையில்லை (கவிதைத் தொகுப்பு) தேன்மொழி ஐந்து சஞ்சிகைகளில் வெளியான ஏழே கவிதைகளையும், பிற எழுபது கவிதைகளையும் உள்ளடக்கிக்கொண்டு எழுபத்தேழு கவிதைகளுடனான ஒரு தொகுப்பாய் வெளிவந்திருக்கிறது ‘இசையில்லாத இலையில்லை’ என்கிற இக் கவிதை நூல். இதன் உள்ளடக்கத்தை ஒரு பிரதேசத்தின் பதிவு என்று பொதுவில் கொள்ளலாம். அவரவர் மண்ணை, அவரவர் பயிரை, அவரவர் மனிதரைப் பதிவுசெய்கிற விசயம் நல்லது. ஆனால் பதிவுசெய்வதற்குக் கையாளப்படும் ஊடக விசயத்திலிருந்துதான் பிரச்னை துவங்குகிறது. இந் நூலும் பிரச்னையைத் சந்திக்கிற இடம் இதுதான்.  ஊடக விசயத்தை இந்நூல் அலட்சியப்படுத்திவிட்டமை துலக்கமாயே தெரிகிறது. அதேவேளை ஒரேயடியாய் அப்படிக் கூளிவிடவும் முடியாதுதான். பாதிக்குப் பாதிஅளவில் கவிதையாய்த் தேறுவனவும், நல்ல கவிதைகள் ஆவன சிலவும், சிறந்த கவிதைகளாவன ஓரிரண்டும்கூட இதில் உண்டு. இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவுதான், தன் முதல் நூலைஅவசர அவசரமாக வெளியிட்டிருக்கிற ஒரு கவிஞருக்கு. கவிதைபற்றிச் சொல்ல, வரையறைகள் செய்ய நிறைய விசயங்களுண்டு. அவை விவகாரத்துக்கும் உரியன. அவற்றைவிட்டு ஒட்டுமொத்தமாய் ஒரு விசயத்தைத் தெளிவாக...

நூல் விமர்சனம் 5 ‘கானல் வரி’

தமிழ்நதியின் ‘கானல் வரி’ நாவல்,குறுநாவல்,சிறுகதைஎனஎந்தவடிவத்துள்ளும் அடங்காது தனக்கென பிறவடிவமொன்றெடுத்த படைப்பு கானல் வரியென்றதும் ஓர் இலக்கிய வாசகனின் ஞாபகத்தில் முன்வந்து நிற்பது சிலப்பதிகாரக் காப்பியம்தான். மாதவியுடனான பதினோராண்டுக் காதல் வாழ்க்கையை உதறியெறிந்து விட்டு,‘சலம் புணர் கொள்கைச் சலதி’யென மாதவியைத் தூற்றி கோவலன் அவளை நீங்கி மறுபடி கண்ணகியைச் சென்றுசேரக் காரணமாய் அமைந்தது அவள் பாடிய கானல் வரிப் பாடல். ஒருவகையில் அக் காப்பியத்தின் மையப் பகுதியாய் அமைந்து, பிற முக்கிய நிகழ்வுகளின் விளைவுகளுக்குக் காரணமாய் அமைவதும் இந்தப் பகுதிதான். அகநிலை வாழ்வின் முக்கோணமாய் அமைந்து கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோருக்கிடையிலான காதல், கற்பு என்ற இருநிலைகளில் காப்பியம் எடுத்தோதப்பட்டுள்ளது எனக் கொள்ளமுடியும். இதை யோசிக்கிறபோதே,‘கற்பின் கொழுந்தும்,காதல் கொழுந்தும்’ என்ற தலைப்பில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் மலேசியாவில் இரண்டு  மணி நேரத்துக்கு மேலாக ஆற்றிய உரைதான் நினைவுக்கு வருகிறது. கற்பு,காதல் ஆகியவற்றுக்கிடையிலான இந்த முக் கதாப...

நூல் விமர்சனம் 4 ம.தி.சாந்தனின் ‘13905’ சிறுகதைத் தொகுப்பு

13905 ‘தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே’என்கிறதுசங்கப் பாடலொன்று. ம.தி.சாந்தனின் ‘13905’சிறுகதைத் தொகுப்புஅந்தத் தொடர்ச்சியின் தற்காலமுன்னெடுப்பு. அதுசுட்டிநிற்கும் அம்சங்கள் தமிழிலக்கியத்தில் முக்கியமானவை. ம.தி.சாந்தன் என்றபெயரைப் பார்த்ததும் தெரிந்ததுபோலத் தோன்றாவிட்டால் சாந்தன் என்றுமட்டும் கொண்டுபாருங்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தமானவராகக் கருதப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரை அப்போது சுலபமாக ஞாபகங்கொள்ள முடியும்.  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் ஜனாதிபதியிடத்தில் சமர்ப்பித்திருந்த கருணை மனுவுக்கான பதிலின் காலதாமதத்தைக் காரணங்காட்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தீர்பாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து மூன்றுநாட்களில் அவர்களுடன் அவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த நளினி உட்பட்ட மற்ற நால்வரையும் விடுவிக்கப் போவதாக தமிழகஅரசு செய்த அறிவிப்பும்,  அதற்கு மத்தியஅரசு உயர்நீதிமன்றத்தில் தடைவாங்கியிருப்பதும் பரபரப்பான அண்மைக்காலச் செய்திகள்.  இதோ விடுதலை செய்யப்படப் போகிறோம...

நூல் விமர்சனம் 3

‘ஒலிக்காத இளவேனில்’ முரண்படுதலும்,கலகமுமாய் பெண் கவிதையின் செல்நெறிக்குஓரளவேனும் வலுசேர்க்கும் தொகுப்பு கவிதையில் பேசுவதென்பது சு யவனுபவங்களினதை மட்டுமே  சாத்தியமானது. இவை சுயமானவையென்றும் மெல்லிய சுயானுபவங்களின் சார்புபெற்ற பிறரது அனுபவங்களென்றும் ஆக முடியும். சுயானுபவங்கள்கூட காலகாலத்துக்கும் அனல் குறைந்துவிடாதபடி ஊதிஊதிப் பாதுகாக்கப்பட்டவையாய் இருக்கவேண்டும். கவிதையானது உணர்வின் வெளிப்பாட்டு ஊடகமெனப்பட்டது இதிலிருந்துதான்.  ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு அனுபவத்துக்குச் சமமானதுவென ஓர் அறிஞன் சொல்லியிருப்பதைக்கொண்டு எனக்கு முள் குத்தியிருக்கிறதுதானேயென காடளந்த கதைவிட  கவிதையில் இடமில்லை. அதனால்தான் கவிதையெனப்பட்ட சொல்லடுக்குகள்  காலத்தில் இருப்பின்றியே அழிந்துபட்டன. இத் தொகுப்பிலுள்ள பலதும் கவிதையாகாமல் சரிந்ததன் காரணம் இங்கே இருக்கிறது. பல்வேறு பெண் கவிஞைகளின் கவிதைத் தொகுப்புகளை அண்மையில் பார்க்க முடிந்திருக்கிறது. பெண் கவிஞைகளினதாய், புகலிடப் பெண் கவிஞைகளதாய், ஈழத்துப் பெண் கவிஞைகளதாய் என பல்வேறு தொகுப்புகள். உதாரணமாக ஊடறு வெளியீட்டின் ...