கலாபன் கதை 4
இந்தியாவே கடலால் விழுங்கப்பட்டதுபோல்.. கஷ்ரங்களின் ஒவ்வொரு முடுக்கிலும் அவள் புன்னகையுடன் நின்று அவனை பித்தேற்றிக்கொண்டிருந்தாள். அந்த அழகும், அளவுகளும், குறுஞ்சிரிப்பும் அவனடைந்த உடல் மன வாதைகளையெல்லாம் ஆவியாய்க் கரைய வைத்தன. அவளையே உரித்துக்கொண்டு பிறந்திருந்த குழந்தைவேறு அவனது தொடரும் வாழ்வுக்கான புதிய அர்த்தம் சொல்லி குமிழ்ந்தெழும் சிரிப்புகளுக்குள் அவனை கிறங்கி நடக்கவைத்துக் கொண்டிருந்தது. க~;ரமென்பது உறுதலில் அடையப்படுவதில்லை. அதற்கொரு உளவியல் இருக்கிறது. க~;ரத்தை க~;ரமாக நினைக்காவிட்டால், க~;ரமென்பது க~;ரமாகத் தெரியாது என்று சீனப் பெரு ஞானியான தாவோ சொல்வான். தாவோ கடவுளில்லை, மனிதனில்லை, ஒரு கருத்துருவம் என்கிறது நவீன சிந்தனை. ஓடுகிற ஓட்டத்தோடு எல்லாம் அறிந்துகொண்டு கலாபன் தாவோ ஞானத்தில் ஒரு வழிக்குட்பட்டதாய் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தான். க~;ரங்கள் அவனுக்குச் சுவைத்த விதம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. கலாபன் இரண்டாவது கப்பல் ஏறி ஓராண்டு ஆகிக்கொண்டிருந்தது. அந்த ஓராண்டில் நான்கு தடவைகள் நாற்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு முறை எண்பதாயிரமென்று ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாவு...