Posts

Showing posts from January, 2012

படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும்

படைப்பு, வாசிப்புகளின் பொது இயங்குதளமும் சமகால ஈழத்து இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் அல்லது தாக்கமின்மையும்: மொழிவெளியினூடான ஓர் அலசல் ஒரு படைப்பு முயற்சியில் வாசகப் பரப்பு கவனத்திலெடுக்கப்பட வேண்டியதில்லையென்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சரிதான். தீவிர படைப்பாளி ஒருவருக்கு அந்தக் கரிசனம் பெரும்பாலும் எழுவதில்லையென்பது பல்வேறு படைப்பாளிகளின் நேர்காணல்களில், நேர்ப் பேச்சுக்களில் வெளிப்பட்டிருக்கிற உண்மையும். நமது நவீன இலக்கிய வடிவங்கள் நம் தேயங்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியென்ற மெய்ம்மையிலிருந்து கவனமாகிறபோது, சமகால அய்ரோப்பிய, அமெரிக்க இலக்கிய உலகினைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியம் குறித்த விஷயத்தை நாம் அலசிவிட முடியாதென்பது வெளிப்படை. படைப்பு வாசிப்பு என்ற இந்த இரண்டு இயங்கு தளங்களுக்குமிடையே, பதிப்பு என்பது இக் கண்டங்களில் மிக்க வல்லபமான நிஜமாக இருந்துகொண்டிருக்கிறதைப் பார்க்க முடிகிறது. இதைத் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்ப்பதற்கு இன்றைக்கு வலுவான தேவையிருக்கிறது. நம் இலக்கிய முயற்சிகளை இதனோடு இனங்கண்டு நம்மைப் புரிவதன் அவசியத்தை அவசரமாக்குவதே என் முதன்முதலான பிரயாசை.

நேர்காணல்: தேவகாந்தன் 2

நேர்காணல்: தேவகாந்தன் சந்திப்பு: கற்சுறா உங்களது எழுத்தியக்கம் ஆரம்பமான காலங்கள் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன். சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் நான் அட்வான்ஸ்ட் லெவல் பாஸ் பண்ணின வருசம், அப்பதான் நான் நினைக்கிறன் பல்கலைக்கழகங்களில விகிதாசார அடிப்படையிலதான் பிரவேசிக்கேலும் எண்ட சட்டச் செயற்பாடு உறுதியாய் நடைமுறைக்கு வாற நேரமெண்டு, அதாலை கூடுதலான தமிழ் மாணவருக்கு கூடுதலான புள்ளிகள் தேவைப்பட்டுது. அதால அந்த வருஷம் பல்கலைக்கழகத்துக்குப் போற வாய்ப்பு எனக்குக் கிடைக்கேல்லை. திரும்ப சோதினை எடுத்து பாஸ்பண்ணி அடுத்த வருசம் போயிருக்கலாம்தான். அப்பிடித்தான் செய்யச்சொல்லி தெரிஞ்சாக்களும் சொந்தக்காறரும் சிநேகிதர்மாரும் சொல்லிச்சினம். ஆனா அப்பிடிச் செய்யிறதுக்கான மனநிலை வரேல்லை. அது ஒரு வீழ்ச்சியாய்ப் போச்சு. மனமொடிஞ்சு போச்சு. படிக்கிற காலத்திலையும் சோதினைக்காய்ப் படிக்கிற குணம் என்னிட்டை இருக்கேல்லை. அரசாங்க வேலையைவிடவும் வேற கூடுதலான கனவுகளோட படிப்பும், அதில்லாத வாசிப்புகளோடையும்தான் நான் அப்பவும் இருந்திருக்கிறன். கனவு எண்டுறது எதிர்காலத்தில எப்படி இருக்கவேணும், நிறைய சங்க, நவீன தம

கரக்கட்டான்

கரக்கட்டான் மனித அறிவினை பட்டறிவு, நூலறிவு என வகைப்படுத்தியுள்ளார்கள் முன்னோர். உலக அனுபவத்தினால் ஏற்படுவது பட்டறிவென்றும், நூல்களை வாசிப்பதனால் வருவது நூலறிவு என்றும் வரைவு சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது’ என்ற பழமொழியினை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதனுள் பொதிந்திருக்கும் அர்த்தம் கல்வியறிவினால் வாழ்க்கைக்கு நன்மை இல்லை என்பதுதான். ஒருவன் கல்வி கற்பதனால் எந்த நன்மையும் இல்லையென்ற பொதுக் கருத்தின் மேவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலவசக் கல்விக்கும், பெண் கல்விக்கும், சமமான சமூகக் கல்விக்குமாய் உழைத்த மகா மனிதர்களின் உயர்ந்த பிம்பங்கள் அந்த அதிர்ச்சியில் ஆட்டங் கண்டன. கல்வியினால் பயனே இல்லையா வாழ்க்கைக்கு? என் வீட்டுக்கு அண்மையிலுள்ள பல்கடைக் கூடம் (Mall) ஒன்றில் சிறிதுநேரம் காத்திருக்க நேர்ந்த தருணத்தில், அங்கிருந்த வாங்குகளில் சும்மா அமர்ந்திருந்த வேலையற்ற வயது மூத்த நான்கைந்து தமிழர்களின் உரையாடலைச் செவிமடுத்ததில் விளைந்தது இந்தக் கேள்வி. இதுபற்றி நான் சிந்தித்தே ஆகவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டேன். அந்தச் சிந்திப்பினை ‘தாய்வீடு’ வாசகர்க

ஊர்கூடித் தேரிழுப்போம்

ஊர்கூடித் தேர் இழுப்போம்! ஒரு கலை வடிவமானது ஒரு மக்களினத்திடையில் தோன்றுவதற்கான காரணங்கள் இருந்ததுபோல, அது புத்துயிராக்கப்படுவதற்கான முயற்சிகளின் பின்புலத்திலும் சில அக புறக் காரணிகள் இருக்கவே செய்யும். இதனடியாகப் பிறக்கிற இன்னோர் உண்மை, அந்தக் கலையடைந்திருந்த ஓர் உன்னத காலத்துக்குப் பின்னால் அதற்கொரு இறங்குமுகம் இருந்தது என்பதாகும். இந்த மூன்று நிலைகளின் காரணங்களையும் ஒரு பார்வையாளன் அறிந்திருக்கவேண்டும்தான் என்ற அவசியமில்லை. தோற்றக் காட்சிகளில் மனத்தை இலயிக்க விடக்கூடிய கால அவகாசமும், அது வெளிப்படுத்தும் உட்கிடை மெய்யனுபவங்களில் ஆழ்ச்சி கொள்ளக்கூடிய மன விலாசமும் இருந்துவிட்டால் ஒரு பார்வையாளனுக்கு ரசனை சாத்தியமாகிவிடும். ஆனால், ஒரு சமூக கலை இலக்கிய அக்கறையாளனுக்கோ, விமர்சகனுக்கோ இந்தக் காரணங்கள் முக்கியமானவை. ஒரு கலைப் புத்துயிராக்கமானது எங்கேயும், எப்போதும் விரும்பப்படக்கூடியதுதான். மத்திய காலத்துக்குப் பின்னால் புதிய தரைவழிப் பாதைத் திறவுகள் வர்த்தக விரிவுகளுக்கு மட்டும் ஆதாரமாக அமையவில்லை. கலைப் பரிமாற்றங்களும், இலக்கிய விரிவாக்கங்களும் அதனூடு ஏற்பட்டு அதுவரை கண்டிராத