Posts

Showing posts with the label Mathyputai 5

மதிப்புரை:: ‘மக்கத்துச் சால்வை’

Image
   எஸ்.எல்.எம்.ஹனீபாவின்  ‘மக்கத்துச் சால்வை’ 1967 தொடங்கி 1991வரை பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பதினைந்து சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாகத் தந்திருக்கிறார் அதன் ஆசிரியர் எஸ்.எல்.எம்.ஹனீபா. 1992இல் வெளிவந்திருக்கும் இந்நூல் ஈழத்தில் வெளியான சிறுகதைத் தொகுதிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒன்றென துணிந்து கூறலாம். ‘மக்கத்துச் சால்வை’ என்பது ஈழத்து வட்டாரச் சொல். மட்டக்கிளப்பில் முஸ்லீம் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இந்த தொகுப்பிலுள்ள ஒரு கதையின் தலைப்பையே நூலின் தலைப்பாக இட்டிருக்கிறார் ஆசிரியர். ‘இந்தப் பெயர் என் மரபையும் சம்பிரதாயங்களையும் பேணுவதாக அமையும்’ என்பதால் ஆசிரியர் நூற்பெயருக்கான சிறுகதையைத் தெரிந்திருப்பாரானால், அதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ‘மக்கத்துச் சால்வை’யை விட ‘வேலி’, ‘சலனம்’, ‘மருமக்கள்’, ‘நாயம்’, ‘மருத்துவம்’ போன்ற கதைகள் கலைநேர்த்தியும், சமுதாயப் பார்வைத் தீட்சண்யமும்  கூடியவை என்பதும், தலைப்புக்கதையாகச் சிறக்கக்கூடியவை என்பதுமே என்னளவிலான முடிவு. தமிழகத்தின் சிறந்த திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி. பா...

மகாகவியின் 3 நாடகங்கள்

மகாகவியின் 3 நாடகங்கள் தொகுப்பாசிரியர் : எம்.ஏ.நுஃமான் இன்றையகாலத் திருக்கும் மனிதர்கள் இன்றையகாலத் தியங்கும் நோக்குகள் இன்றையகாலத் திருப்புகள் எதிர்;ப்புகள் இன்றையகாலத் திக்கட்டுகள் …….’ (மகாகவி) இவையே அறுபதுகளிலிருந்து எண்பதுகள்வரை ஈழத்தில் கவிதை, நாடக ஆளுமையாகவிருந்த மகாகவி என்ற உருத்திரமூர்த்தியின் இலக்கியக் கருதுகோள்களாக இருந்திருக்கின்றன என்பதை அவரின் படைப்புகளின் மூலமும் நம்மால் தெளிவாகக் காணமுடிகிறது. ‘புதிய களங்கள் புதிய போர்கள் ,புதிய வெற்றிகள் இவைகளைப் புனையும் ,நாடகம் வேண்டி நம் மொழி கிடந்தது’ என்று அவரே கூறுவது போன்றிருந்த நிலைமையிலேதான் ‘கோடை’ நாடகத்தினூடாக மகாகவியின் நாடகப் பிரவேசம் நிகழ்கிறது. இவையெல்லாம் வெறும் பிரகடனங்கள் மட்டுமில்லை, செயற்பாட்டு வெற்றியையும் அடைந்திருக்கின்றன. அதை இப் பாநாடக நூல் தொகுப்பு பிசகில்லாமல் காட்டுகிறது. ‘எல்லாவிதமான கலை இலக்கிய வடிவங்களையும்விட ஈழத்தில் இன்றைக்கு உன்னதமான வளர்ச்சிபெற்றிருப்பது நாடகத் துறையே’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒருமுறை என்னிடம் கூறினார். ஈழத்தில் மட்டுமில்லை, தமிழகத்திலும் மேடைநாடகவாக்...