Posts

Showing posts from February, 2015

மதிப்புரை:விமர்சனத் தமிழ்

விமர்சனத் தமிழ் தி.க.சி. 1959-92 காலப் பகுதியில் தி.க.சி. அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய முப்பாத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு  இது. மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்து பத்திரிகைகளிலும், நூல்களிலும் இடம்பெற்ற ஆய்வுரைகளும் இதில் அடங்கும். நூல் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. அப்படி அது பேசவேண்டும். சுமார் கால் நூற்றாண்டுக் காலத்திய பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள், வேறுவேறு இலக்கியப் போக்குகள், இலக்கியவாதிகளின் மறைவுகள் யாவும் சமகால விமர்சகனின் பார்வையில் பட்டு தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்கக்கூடியதல்ல. செஸ்டார்டன் குறிப்பிட்ட ‘Good bad literature’ என்ற எழுத்துவகைகளையும், இன்னும் கீழ்த்தர எழுத்துக்களையும் நோக்கி தீவிரமான எதிர்ப்புக் கணைகளைச் செலுத்தும் தி.க.சி.யை நூலின் முற்பகுதிக் கட்டுரைகளில் காணமுடிகிறது. தி.மு.க.வின் பிரிவினை வாதம், அதன் இலக்கியப் போக்குகளுக்கு எதிராக காரமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் ஆசிரியர். ‘அறிஞர்-கலைஞர் கூட்டம் சிருஷ்டித்த இலக்கியங்கள் அனைத்தும் நச்சு இலக்கியங்களே’(பக்:35). ‘வேலைக்காரி’ சினிமாவுக்காக அண்ணா கல்கியில் பாராட்டப் பெற்றதைக்கூட கண்டிக

முதல் பிரசவம்:

முதல் பிரசவம் 1968 ம் ஆண்டு ‘ செய்தி ’ வார இதழில் வெளிவந்த ‘ குருடர்கள் ’ தான் எனது முதல் சிறுகதை . அப்போது எனக்கு வயது 21. வாழையடி வாழையாகத் தொடர்ந்த ஒரு பண்டித மரபில் வந்திருந்ததனால்போலும் பதினைந்து வயதுக்குள்ளாகவே சங்க இலக்கியங்களுடனான பரிச்சயமும் , ஈழத்து செய்யுள் இலக்கியங்களின் வாசிப்பும் எனக்குச் சித்தித்துவிட்டன . பாலைக்கலி முழுவதையும் அந்த வயதிலேயே படித்திருந்தேன் . நன்னூல் பெரும்பகுதியும் மனப்பாடமாயிருந்தது . தக்க ஓர் ஆசானுக்காக நான் காத்திருந்த காலமாக அதைச் சொல்லலாம் . புதுமைப்பித்தனையும் , ஜெயகாந்தனையும் , ஜானகிராமனையும் கல்லூரிப் பாடத் திட்டத்துக்கான தமிழிலக்கிய வரலாற்றில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு புதுமைப்பித்தனின் ‘ காஞ்சனை ’, ‘ ஆண்மை ’ போன்றனவற்றின் வாசிப்பு எதிர்பாராதவிதமாத்தான் ஏற்பட்டது . நான் அதுவரை அறியாத யதார்த்த உலகத்தின் திறவாக அது   இருந்தது . பழந்தமிழ் இலக்கியத்தின் சுவடு கண்டு , சத்தியம் , அன்பு , அகிம்சைபற்றிப்   பேசிய நாவல்களின்   ஒருவகைக் கற்பனோலயத்திலிருந்த என்னை அது முற்றிலுமா

மதிப்புரை:: ‘மக்கத்துச் சால்வை’

Image
   எஸ்.எல்.எம்.ஹனீபாவின்  ‘மக்கத்துச் சால்வை’ 1967 தொடங்கி 1991வரை பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பதினைந்து சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாகத் தந்திருக்கிறார் அதன் ஆசிரியர் எஸ்.எல்.எம்.ஹனீபா. 1992இல் வெளிவந்திருக்கும் இந்நூல் ஈழத்தில் வெளியான சிறுகதைத் தொகுதிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒன்றென துணிந்து கூறலாம். ‘மக்கத்துச் சால்வை’ என்பது ஈழத்து வட்டாரச் சொல். மட்டக்கிளப்பில் முஸ்லீம் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இந்த தொகுப்பிலுள்ள ஒரு கதையின் தலைப்பையே நூலின் தலைப்பாக இட்டிருக்கிறார் ஆசிரியர். ‘இந்தப் பெயர் என் மரபையும் சம்பிரதாயங்களையும் பேணுவதாக அமையும்’ என்பதால் ஆசிரியர் நூற்பெயருக்கான சிறுகதையைத் தெரிந்திருப்பாரானால், அதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ‘மக்கத்துச் சால்வை’யை விட ‘வேலி’, ‘சலனம்’, ‘மருமக்கள்’, ‘நாயம்’, ‘மருத்துவம்’ போன்ற கதைகள் கலைநேர்த்தியும், சமுதாயப் பார்வைத் தீட்சண்யமும்  கூடியவை என்பதும், தலைப்புக்கதையாகச் சிறக்கக்கூடியவை என்பதுமே என்னளவிலான முடிவு. தமிழகத்தின் சிறந்த திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி. பாணியில் கதைகளைத் தனி