Posts

Showing posts from August, 2015

மதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்

அரசியல், சமூக எதிர்ப்பு நிலைகளின்  இன்னொரு முகாம், பின் - காலனித்துவ இலக்கியம் காலச்சுவடு பதிப்பகத்தினரின் வெளியீடாய் அண்மையில் வெளிவந்திருக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே இதில் வெளியாகியுள்ள சில கட்டுரைகளை அவை சஞ்சிகைகளில் வெளியாகிய தருணங்களிலேயே நான் வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமான நூல் கொடுத்த பாதிப்பு அதிகம். முழுமையான மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ அன்றி, நூலின் ஒட்டுமொத்தமான செல்திசை நோக்கிய கருத்தினை அலசும் ஒரு கட்டுரையாகவும் இது அமைய நேர்வது நூல் விளைத்த பல்தளங்களிலான மனப்பாதிப்பின் தீவிரத்தினால்தான். இரண்டு விஷயங்களை முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. சமகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான நூல், ந.முருகேசபாண்டியனின் மொழியில் சொல்வதானால், தமிழ் அறிவுலகத்தின் அ-பிரக்ஞை குளத்தில் வீசப்பட்ட கல்லாக தடமழிந்து போவதற்குத் தோதான தலைப்போடு வெளியிடப்பட்டிருப்பதை முதலாவதாகச் சொல்லவேண்டும். ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்பது, ஏதோ மரபார்ந்த தமிழறிஞர்களது தமிழினத்தின் பண்பாடு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பான

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’  வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன. சென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன. தமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு. ஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன. இன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன். விலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண், அவ

பேராசிரியர் கா.சிவத்தம்பி அஞ்சலி

அஞ்சலியாய் ஓர் நினைவுப் பகிர்வு ஐயா, ‘பேராசிரியர் கா.சிவத்தம்பி மாரடைப்பால் காலமானார்’ என என் நண்பரொருவர் கூறியபோது அதிர்ந்துதான் போனேன். அந்த அதிர்வு அடங்கி ஒரு மாய இருட் போர்வையாக செய்தி மட்டும் மனத்தின்  ஒரு மூலையிலிருந்து மெல்ல மெல்ல வியாபகமாகி வந்தது. எந்த மதுவுக்கும்கூட கட்டுப்படாத ஆக்ரோஷம் கொண்டிருந்தது அந்தச் சோகம். ஈழத்துக் கல்விப் புலத்தின் பெருமைசால் ஆல விருட்சம் அடியோடு சாய்ந்ததான அறிஞர் கூட்டத்தின் பிரலாபிப்புகள் இணைய இதழ்களில், வார இதழ்களில் வந்தபடி இருந்தன. மனம் சலசலத்தது. உங்கள் மறைவு உண்மையில் ஈடுசெய்ய முடியாததுதான். ஆனால் இந்த அறிஞர் குழாம் எழுப்பும் கூறுகளினூடாக அல்ல, மாறாக அவரைப் புரிந்துகொண்ட கோணங்களினூடாக அந்த இழப்பினை நான் உள்வாங்குகிறேன். பேராசிரியர் சிவத்தம்பி இளகிய மனமும், சகஜமான குணபாவமும், சமூக அக்கறையம், சீரிய அறிவுத் திறனும் மிக்கவர் என கனடா எழுத்தாளர் இணையம் நடாத்திய அஞ்சலிக் கூட்டத்தில்கூட பலர் எடுத்துரைத்திருந்தார்கள்.  இத்தகைய உங்கள் குணநலன்களில் யாருக்குத்தான், என்ன மாறுபாடு இருந்துவிட முடியும்? நான் இலக்கியகாரன். அதனால் அது குறித்த விஷய

பக்க எழுத்துக்களும்

பக்க எழுத்துக்களும்  பக்க விளைவுகளும் எழுத்துக்களின் ஊற்றுக் கிணறுகளாக ‘பக்க எழுத்தாளர்க’ (columnists) ளைச் சொல்ல முடியும். ஆனாலும் தம் துறைசார்ந்த எழுத்துக்கான தேடலையும் பயணங்களையும் மேற்கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே நல்ல எழுத்துக்கள் பிறந்திருக்கின்றன. பாலியல், அரசியல், சமூகம், இலக்கியம் என பல்வேறு தளங்களில் இந்த பக்க எழுத்துக்களை நாம் காணமுடியும். என்னால் எந்த விஷயத்தைப்பற்றியும் எழுத முடியுமென்று எழுதப் புகுந்தவர்கள், பிழைப்புவாரிகளாகத் தேங்கிப் போனதும், தம் துறையை அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய வௌ;வேறு துறைகளைத் தேர்ந்து எழுதத் தொடங்கியவர்கள் உலகப் புகழ் வாய்ந்த பக்க எழுத்தாளர்களாக விளங்கியதுமே கடந்த கால எழுத்தின் வரலாறு நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தி. பாலியல் குறித்த பக்க எழுத்தில் பிரபலமான டான் சவேஜ், அரசியல் சமூகம் இலக்கியமென பல்வேறு தளங்களில் எழுதிப் பேர்பெற்ற சரஜிவோ நாட்டு பக்க எழுத்தாளர் அலெக்சாண்டர் ஹேமன், சமூக அக்கறையை வெளிப்படுத்த பல்வேறு கடத்தல் விவகாரங்களை எழுதிய மெக்ஸிக்கோ நாட்டு மிக்கேல் லொபேஸ் வெலங்கோ முதலியோர்போல் ஆழமான விஷயங்கள் குறித்து எழுதி ச

காலம் என்பது…

காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின்  பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்! நான் கருதுகிற காலம் அவையல்ல. இது நான்காவது பரிமாணம் எனப்படுவது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் ஆய்வில் முக்கிய வரைவிலக்கணம் பெற்றது. ஐன்ஸ்டீன் வரையறை செய்த காலமென்ற கருப்பொருளின் அறிதல் பரவசம் செய்வது. அவர் கண்டுபிடித்த பல்வேறு பௌதீக விஷயங்கள் இன்றைய விஞ்ஞானத்தை பாய்ச்சல் நிலைக்குத் தள்ளியபோது மனிதனின் வா

பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்

டவுண் ரவுணில் எனக்கு பொழுதுபோக்குவதற்கு உகந்த இடங்களாக ஐந்தாறு பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. அண்மையில் ஒரு மாலைநேர டவுண்ரவுண் பயணத்தில் பூமழை தூறி சனிக்கிழமையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது வழமைபோல ஒரு பழைய புத்தகக் கடையை நாடவே நேர்ந்தது. அங்கு பொறுக்கிய சிலவற்றில்  அண்மையில் வாசித்து முடித்த நூலொன்று சிலநாட்களாகவே என்னுள் சஞ்சலம் செய்துகொண்டிருந்தது. Voices in the Desert –An  Anthology of Arabic - Canadian Women  Writers  என்ற நூல்தான் அது. அது என் கைகளிலிருந்தபோதே அதன் கனதியை நான் உணர்ந்திருந்தேன். நூலின் கனதியென்பது அதன் கனபரிமாணத்தால் கிடைப்பதல்ல. மாறாக நூலின் கனதி, அது வியாபிக்கும் தளங்களும், தளங்களில் அர்த்தம் வியாபிக்கும் முறைமையுமே ஆகும். பெண்ணின் தனித்துவமான குரல்கள் உலக இலக்கியப் பரப்பில் ஒலிக்கத் தொடங்கி நீண்டநாட்கள். அராபிய-கனடாப் பெண்களின் குரலின் வீச்சை இலக்கியம் காணத் தொடங்கி அதிக காலமில்லை. கனடிய மண்ணில் அவர்களின் வருகை கவனிக்கக் கூடியவளவு தொடங்கியது அறுபது எழுபதுக்களில்தான். அதிலும் அதிகமானவர்கள் கியுபெக்கிலேயே குடியேறினார்கள். அதனால்தான் அதிகமான அரா

ஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ...

ஒருபால் புணர்ச்சியாளர் குறித்து ...  (திருத்தப்பட்ட  தாய்வீடு கட்டுரை ) கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், ஒருபால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களான விபசாரர்கள், குற்றவாளிகள், ஒருபால் புணர்ச்சியாளர், அரவாணிகள் மீதான விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருக்கிறது. அதனால் கூட்டத்துக்குச் செல்லமுடியாது போனமை எனக்கு வருத்தமே. கூட்டங்கள்பற்றிய அறிவிப்புகள் தெரிந்ததுமே, அந்தப் பொருளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்ததில், ‘தற்பாலியர்’பற்றிய விவகாரத்தையே மார்கழி மாத ‘தாய்வீ’ட்டுக்கு எழுவதற்கான விஷயமாக எடுத்துக்கொள்வதென்று எனக்குத் தீர்மானமாகியிருந்தது. நான் எழுதக்கூடிய விஷயம் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதுவிதத்திலாவது முரணாகிவி

நூல் விமர்சனம் :2 ‘கடவுளின் மரணம்’

‘கடவுளின் மரணம்’ (சிறுகதைத் தொகுப்பு) இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரினது மூலம் மற்றும் இயங்குவிதங்களும் பற்றியவையான ஒரு விசாரணை கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பு மிக்க கவனம்பெறவேண்டிய ஒரு படைப்பு என்று தோன்றுகிறது. அதன் வெளியீடும் கருத்தாடலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் கனடாவின் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற உடனடிப் பின்னால் ஒருமுறையும், அதன் நினைவுத் தாக்கத்தில் அண்மையில் மேலும் ஒருமுறையுமாக வாசித்த பின்னர் முதல் வாசிப்பில் அதன் மேலெழுந்திருந்த உணர்வுரீதியான மதிப்புகள் அடங்கி, ஏற்பட்டுள்ள விமர்சனரீதியான மனநிலையில் அதுபற்றி எழுதுவது அவசியமென்று பட்டது. பதினாறு கதைகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பின் முதலாவது கதையினதே மொத்தத் தொகுப்புக்குமான தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது, இதுவே இத்தொகுப்பின் சிறந்த கதையென்று அறுதியிட முடியாதபோதும். எந்த ஒரு தொகுப்பும்போலவே இதுவும் மிகச் சிறந்த, சிறந்த, மற்றும் சாதாரண கதைகளைக் கொண்டிருப்பினும், இதன் மிகச் சிறந்த கதைகள் கட்டவிழ்க்கும் அர்த்தங்கள் அலாதியானவை. இவற்றின் கட்டுடைப்பிலும் பல்வேற

நினைவேற்றம் 6

முனை 6 அறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லை. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது  அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன. ஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய்  விட்டிருக்கிறேன். எங்கே? வய

கலாபன் கதை: 2-8

  அலையும் கடல் -தேவகாந்தன்- தரையோடும் வாகனத்துக்குப்போல், கடலோடும் நாவாய்க்கும் காப்புறுதி அவசியம். அந்தக் காப்புறுதி அதன் கடலோடும் தகுதியின்மேலும், கப்பலிலிருப்போரின் பாதுபாப்புக்கான சகல உபகரணங்களினதும் கப்பல் பராமரிப்பினதும் பூரணப்படுகையின்மேலும் வழங்கப்படுகிறது. அவ்வாறான ஒரு காப்புறுதி இல்லாத அல்லது காலாவதியாகும் கப்பல் கடலோடும் தகுதியை இழந்துவிடும். அக் கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு ஏற்படும் சேதத்துக்கோ, கப்பலுக்கே சேதம் ஏற்படுமாயினும்கூட, காப்புறுதி ஸ்தாபனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. அந்தவகையில் கப்பலின் காப்புறுதி மிகமுக்கியமான அம்சம். அவ்வாறான தகுதியான காப்புறுதி இல்லாதவகையில் தனது கடலெல்லைக்குள் அணுகிய கப்பலை தடுத்துவைக்கவும், துறைமுகத்தில் நிற்கும்போது காப்புறுதியின் காலம் முடிந்தது தெரியவந்தால் அல்லது பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடு கண்டுகொள்ளப்பட்டால் அதை அங்கேயே நிறுத்திவைக்கவும் துறைமுக நிர்வாகத்துக்கு அதிகாரமுண்டு.  இவ்வாறான கப்பல்கள் சவப்பெட்டிக் கப்பல்கள் (Coffin Ships) என்று வழக்கில் குறிக்கப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகள் நாட்டுக்கு நாடு சற்று வித்தியாசப்படி

உண்மையைத் தேடுதல் 3

மனத்தில் அசரீரியாய் ஒலிக்கின்றது காலத்தின் சுருதிபேதம் (வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் இரு சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து…) ‘முதுசொமாய் ’ (2002), ‘தொலையும் பொக்கிஷங்கள்’ (2009) ஆகிய இரண்டு தொகுப்புகளும் ஏறக்குறைய இவ்வாண்டு மாசியிலேயே கிடைத்துவிட்டிருந்தபோதும், அவற்றினுள் பிரவேசிப்பதற்கான காலத்துக்காக சிறிது நான் காத்திருக்கவேண்டி நேர்ந்தது. பரிசுகளை அவ்வப்போது பெற்றிருக்கும் சில கதைகளை உள்ளடக்கியிருப்பினும் பரவலாகப் பேசப்படாதவை இத்தொகுப்புகள். கல்விப்புலம் சார்ந்த ஒருவரிடமிருந்து வந்த தொகுப்புகள் சாதாரண ஒரு வாசகனாய் என்னில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்ற ஆவலில் என் வாசிப்பு துவங்கியது. இரண்டு தொகுப்புகளிலும் இருபது சிறுகதைகள். அளவிலும் சிறிதான இந்தக் கதைகளினூடாக நான் அடைந்த தரிசனம் பிரமாண்டமானது. அவ்வாசிப்பின் அனுபவங்களையே இச்சாளரத்தினூடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். முதலாவது தொகுப்பான ‘முதுசொமாய்’ மிகச்சிறந்த கதைகளைக் கொண்டிருக்காதபோதிலும், அவற்றிலிருந்த உணர்வுவீச்சு இயல்பாய் அமைந்து கதைகளுக்கான வீர்யத்தை அளித்திருந்தது. 1993இலிருந்து 2002வரையான பத்து வருட காலப்பகுதியில் வெளிவந்த