Posts

Showing posts with the label நேர்காணல் 2

நேர்காணல்: தேவகாந்தன் இரண்டாம் பகுதி

நேர்காணல் : தேவகாந்தன் இரண்டாம் பகுதி  பதிவுகள் : இலங்கைத்தமிழ் இலக்கியத்தை பலவகை எழுத்துகள் பாதித்துள்ளன . தமிழகத்தின் வெகுசனப் படைப்புகள் , மணிக்கொடிப்படைப்புகள் , மார்க்சிய இலக்கியம் , மேனாட்டு இலக்கியம் எனப்பல்வகை எழுத்துகள் பாதித்தன . இலங்கையைப்பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் இரு கூடாரங்களில் ( சீன சார்பு மற்றும் ருஷ்ய சார்பு ) ஒதுங்கிக்கொண்டு இலக்கியம் படைத்தார்கள் . மார்க்சிய இலக்கியத்தின் தாக்கத்தினால் இலங்கைத்தமிழ் இலக்கியம் முற்போக்கிலக்கியம் என்னும் தத்துவம் சார்ந்த , போராட்டக்குணம் மிக்க இலக்கியமாக ஒரு காலத்தில் கோலோச்சியது . அதே சமயம் எஸ் . பொ . வின் நற்போக்கிலக்கியம் , மு . தளையசிங்கத்தின் யதார்த்தவாதம் , தமிழ்த்தேசியத்தை மையப்படுத்திய இலக்கியம் எனப்பிற பிரிவுகளும் தோன்றின . இவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளோம் . இவை தவிர வேறு தாக்கங்களும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையிலுள்ளதாகக் கருதுகின்றீர்களா ? தேவகாந்தன் : சோவியத் நூல்கள் மட்டுமில்லை. வங்கம் , மராத்தி   முலிய மொழிக...