Posts

Showing posts from 2026

நினைவுக் குளியல்… 5

  கறை படிந்த கைகள்   ‘தாயொடு செல்வம் போம், தந்தையொடு கல்வி போம்’ என ஒரு பழம் பாடல் சொல்கிறது. என் ஒன்பதாவது வயதில் என் தந்தையை நான் இழந்தபோதும், என் கல்விக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை. அதற்காக எந்தளவு சிரமத்தை என் தாய் உத்தரித்திருப்பார் என்று உணர்கிற வயதும் அப்போது எனக்கில்லை. ஆனால் வாழ்க்கைச் சாகரத்தில் நான் அடியெடுத்து வைத்த பிறகு, ஒவ்வொரு சிரமங்களையும்   சாதுர்யமாய்க் கடந்திருந்த காலங்களில், கல்வியின் அவசியத்தையும் அதை எனக்களித்த தெய்வம் அதற்காய்ப் பட்ட சிரமங்களையும் எண்ணிப்பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால் சமகாலத்தின் எந்தக் கரிசனமும் இல்லாமலேதான் அந்தக் காலம் கழிந்து சென்றதாக இப்போது படுகிறது.   மாணவ நிலையின் அந்தப் பருவம் முக்கியமானது. அது, படிப்பு கைகூடாவிட்டாலும்கூட, விளையாட்டு அல்லது சங்கீதம் அல்லது சித்திரமென ஏதோவொரு துறையில் தன்னை நன்கு பொருத்திக்கொண்டு தன்னை உயர்த்தும் சுயசிந்தனையின் உந்துதலின்றியே மேலே பறக்கக் கிளம்பிவிடுகிறது. இந்தத் துறைகளுக்குள் அமைக்க முடியாவிட்டாலும், அது இயன்றவொரு வெளியில் தன்னை நிறுவுவதில்   எத்தனம் செய்யத் தவற...

மாறும் கதை வடிவங்கள்:

  மாறும் கதை வடிவங்கள்: ‘திருப்புமுனை’, ‘குப்பி’ ஆகிய கதைகளினூடாக ஓர் அலசல்   நவீன இலக்கிய உருவாக்கத்தின் பின்னரும், இலக்கியத்தின் அரசி கவிதை என்பதாகவே வெகுகாலம் இருந்துவந்தது. புதுக்கவிதை தோற்றமாகிய பின்பும் அந்த நிலைமை மாற்றமடையவில்லை. இருபதாம் நூற்றாண்டு முடிகிறவரையில்கூட இந்தத் தாத்பரியம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அகவல், கலி, பரிபாட்டு ஆகியவற்றினூடாக நடந்து, வெண்பா, விருத்தம் ஆகிய பா வடிவங்களில் காவியத்துக்கான உச்சம்பெற்று, இன்று யாப்பற்ற வடிவமாக புதுக்கவிதை தோன்றியுள்ள நிலைமையிலும், அதன் அந்தஸ்து பெரிய வித்தியாசமின்றித் தக்கவைக்கப்பட்டே வந்தது. பல்வேறான மாற்றங்கள் ஏற்பட்டபோதும் சாத்தியமானவற்றை உள்வாங்கி உரம்பெற்றதே தவிர கவிதை தன்னிலை தளரவில்லை. இன்று நிலைமை அவ்வாறில்லை. இன்று கவிதையைப் பின்தள்ளி உரைநடை வடிவங்களான நாவல், குறுநாவல், சிறுகதை, நினைவுப் பதிவுகள் உருக்கொண்டுள்ளன. வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’, பி.ஆர். ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆகியன தோன்றிய காலத்து நாவலிலக்கணம்போல இன்றுள்ள நாவலிலக்கியத்தின் இலக்கணங்கள் இல்லை. இலக...

நினைவுக் குளியல் 4

  நினைவுக் குளியல்: 4   பழந்தமிழ் இலக்கிய ஆர்வம்   இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அக் காலத்திய அரசியல் மேடைகள் இலக்கியமும் பேசின. பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், கம்பன் பற்றியேல்லாம் நான் மேடைகளில்தான் முதன்முதலாக அறிந்தேன். அவர்களது தமிழ்ப் பற்று என் நெஞ்சிலும் மூண்டெழுந்தது. இளைஞனாக இருக்கும்போது சாவகச்சேரி சரஸ்வதி புத்தகசாலையில் நான் வாங்கிய புத்தகம் ‘பாரதியார் இன்கவித் திரட்டு’ என்கிற ராஜாஜி தொகுத்த புத்தகமாகும். அதில் எவ்வளவற்றைப் புரிந்துகொண்டேன் என்பதையெல்லாம் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் சுவையான விஷயம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தின் பெயர...

நினைவுக் குளியல் 3

  நினைவுக் குளியல்: 3 பஞ்சாங்க ஐயர்   அவரது பெயர் சுப்பிரமணிய ஐயர். ஆனால் அவரை பஞ்சாங்க ஐயரென்றுதான் ஊர் அறிந்திருந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தை ஆண்டுதோறும் உருவாக்கி, அச்சடித்து, வெளியிட்டவர் அவர். அதற்காக வீட்டிலே ரெடில் எனப்படுகிற கை அச்சு யந்திரமொன்றை வைத்திருந்தார். ஊரில் சகலருமே பஞ்சாங்க ஐயரைத் தெரிந்திருந்தவேளை, ஐயர் வெகுசிலரையே அங்கே தெரிந்திருந்தாரென்பது விசித்திரமானதல்ல. அவரின் போக்கு அப்படி. அவர் வெளிப் பிரக்ஞைகள் இல்லாதவராக, தானும் தன் திருக்கணிதத்துக்கான காலக் கணிப்பும் அதன் அச்சாக்க வேலைகளுமாகயிருந்தார். அவரது மனத்தை, மனிதர்களையும் தினசரிச் சம்பவங்களையும்விட, சூரியன் சந்திரன் ராகு கேது ஆகிய நவக்கிரகங்களே கூடுதலாக ஆக்ரமித்திருக்க முடியும். ஐயருக்கு அப்போது நாற்பது / நாற்பத்தைந்து வயதிருக்கலாம். போந்த பொலிந்த வெள்ளை உடம்பு அவருக்கு. அதில் ஆரோக்கியம் பளீரிட்டது. ஆயினும்   ஐயர் கலகலப்பாக இருந்ததை யாரும் கண்டதில்லை. அவர் மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாய் யாருமில்லைப்போல், அவரை மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாயும் அதிகம் பேர் இருக்கவில்லை. ஒருவித வெறுப்போடும், ...

'முதல் மூவர்' மதிப்புரை

      சொர்ணவேலின் ‘முதல் மூவர்’: ரசனையின் உச்சமேறி மொழிப் பிரவாகம்கொள்ளும் பனுவல்   1   பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராபேர்ட் ப்ரெஸ்ஸோன் (Robert Bresson 1901-1999), இஸ்பெயின் - மெக்ஸிக்கோவைச் சேர்ந்த லூயி புனுவல் (Luis Bunuel 1900-1983), மற்றும் ஜப்பான் நாட்டு யாசுஜிரோ ஓசு (Yasujiro Ozu 1903- 1963) ஆகியோர், பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் மூடிய தம் தீவிரமான செயற்பாட்டின் மூலம் எவ்வாறு வருங்கால சினிமாவின் பார்வை, ரசனை, மெய்ஞ்ஞானம் போன்றவற்றின் செல்நெறிகளை   ஒழுங்குபடுத்தினார்கள், ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை தீர்க்கமாய் முன்வைக்கிறது சொர்ணவேலின் இந்த ‘முதல் மூவர்: ப்ரெஸ்ஸோன், புனுவல், ஓசு’. அதை ஓர் அஞ்சலியாய் செய்துள்ளதாக படைப்பாளியின் ஒப்புமூலம். மீஇயற்பியல், கதையாடல், இழையோடும் உட்புணர்ப்புகளூடாக விவரண சினிமா, குறும்படம், முழு நீள சினிமா ஆகியவற்றில் அத் தாக்கம் எவ்வாறு விதிகளால், உள்ளடைவுகளால் விழுத்தப் பெறுகிறது என்பதை அதற்கான இறுக்கமான, காவிய மொழியில் விளக்குகிற பிரதி இது. தன் ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டிலும் வாசகனை நிறுத்திவ...