Posts

Showing posts from April, 2008

LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து

கப்ரியேல் கர்சியா மார்க்வெய்ஸின் LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து சமீபத்தில் நாவல்களை மூலக்கதைகளாகக் கொண்ட மூன்று சினிமாக்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இது வாய்ப்பானது ஓர் எதிர்பாராத அமைவில் ஏற்பட்டதுதான். முதலில் NO COUNTRY FOR OLD MEN. கொர்மாக் மக்கார்தியின் அதே தலைப்பிலான நாவலைச் சினிமாவாக்கியது. அடுத்தது கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸின் நாவலான LOVE IN THE TIME OF CHOLERA சினிமாவாகி வந்திருந்தது. மூன்றாவது ATONEMENT. இது இயன் மக்கீவானின் ATONEMENT நாவலைப் படமாக்கியது. இவை மூன்றும் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய மூன்று பெரும் நாடுகளை மய்யமாகக் கொண்டவை. மட்டுமில்லை, பெருவாரியான மற்றைய நாவல்கள் சினிமாவாகியபோது தலைப்பு மாற்றம் பெற்றதுபோலன்றி, இவை நாவலின் தலைப்புகளையே சினிமாவாக்கத்திலும் கொண்டிருந்தன. நாவலின் மூலத்திலிருந்து மிகவும் மாறுபட்டுவிடாதபடி இம் மூன்று சினிமாக்களும் எடுக்கப்பட்டிருந்ததை தலைப்புகள் சுட்டிநிற்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். ஒரு நாவலைப் படமாக்குவது எப்படியென்பதற்கு இம்மூன்றுமேகூட உதாரணமாகக் கூடியவை. ஆனாலும் மிகச் சமீப

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்…

மண்ணுக்கும் மனித மனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாய்க் காலங்காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. மண்ணின் வளம் பயிர்களுக்கு மட்டுமில்லை, மனங்களுக்கும் ஏற்படுமென்பதை சொல்லித் தெரியாமல் உணர்வதற்கான தருணம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதபடி நிகழும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று சொல்லப்பட்டது சும்மா இல்லை. உணர்ந்துதான். ஒரு தசாப்தத்துக்கும் மேலான ஆண்டுகளை நான் தமிழ்நாட்டிலே கழித்திருக்கிறேன். இந்திய உபகண்டத்தின் பல்வேறு நிலப் பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் தென்கோணம் தொடங்கி வடகோணம் ஈறாக, கீழ்த் திசையிலிருந்து மேற்றிசைவரை என் பயணம் பல தடவைகளில் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் திருநெல்வேலிபோலவும், கேரளாவில் தலைச்சேரி போலவும் மிக அரிதான இடங்கள்  சிலவற்றையே என்னால் பார்க்க முடிந்திருக்கிறது. திருநெல்வேலி எனக்குச் சின்ன வயதிலேயே பெயர்ப் பரிச்சயமான ஊர். திருநெல்வேலியிலேதான் பாஞ்சாலங்குறிச்சி இருக்கிறது. கட்டபொம்மனைப்பற்றிய சினிமா ஐம்பதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தபோது ஞாபகத்தில் விழுந்த சொல், பின் எப்போதும் என்

அதை அதுவாக 22

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 22 ‘அறிய அறிய அறியாமையே மிகுகிறது. அனுபவிக்க அனுபவிக்க காமமே வெகுக்கிறது.’ - தேவகாந்தன் - (52) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். (காமம், கனவு, குறிப்பறிதல் 5) குறள் 1095 குறிப்புப் புலப்படும்படி பார்க்க மட்டுமில்லை, திட்டமாய் அர்த்தம் தெரியும்படி அவள் கண்ணைச் சுழற்றிக் கொண்டு அமுக்கச் சிரிப்பும் செய்கிறாள். தமிழ் இலக்கியத்திலுள்ள களவியல் வாசிப்பு அற்புதமான சுகம் தருவது. அதன் முழு சாரத்தையும் பெரும்பாலும் திருக்குறளிலே காணமுடியும். மிகவும் திட்ப நுட்பமாக அதில் காதலுணர்வுகள், செய்கைகள், அசைவுகளெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கவியின் அனுபவ சாரலில் நனைகிற பேரின்பம் நவீன வாசகனையும் அதிசயப்பட வைக்கும். கூட்டத்தில் தோழியரோடு நிற்கிறாள் அந்தப் பெண். சிரித்துப் பேசி ஏகாங்கியராய் அவர்கள். தூரத்தில் தன் தோழரோடு அவன். அவனை அவள் அறிவாள். அவனது அவாவும் அறிந்தவள்தான். ஆனாலும் போய்ப் பேசிவிட முடியுமா? ஊர், உறவுகள் என்ன சொல்லும்? நாணம்தான் விட்டுவிடுமா? அவனோ அவள் சம்மதம் இல்லாவிட்டால் உயிர் தரிக்கல

அதை அதுவாக 21

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 21 ‘பெண்கவியாய் இருந்தால்தான் அவ்வாறெல்லாம் நினைத்திருக்க முடியுமோ?’ - தேவகாந்தன் - (51) கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். (காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல் 7) குறள் 1087 ஆண் மதயானையின் பார்வையை ஒடுங்க மறைக்கப் போடப்படும் முகபடாத்தினை நிகர்த்ததாய் இருக்கின்றது, மாதர்களின் நிமிர்ந்த முலைகளின் மேல் போடப்பட்ட துகில். ‘படாஅ முலை’ என்பதிலிருந்து நிமிர்ந்த முலை பெறப்பட்டது. மாதர் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்பட்டிருப்பினும், இளம் பெண்கள்பற்றிச் சொல்லப்பட்ட குறளாகவே இதைக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட ஒரு பெண்ணைத் தினமும் பார்த்துப் பார்த்து, அவள் மீதான காதலாய் அது வளர்ந்து வளர்ந்து ஆசை நிலையை அடைந்துவிட்ட ஒருவனின் ஒருவகைப் பிதற்றலாகவே இலக்கியம் இதுபோன்ற பாடல்களை வகைசெய்திருக்கிறது. படைப்பு, பாதிக்கப்பட்ட ஒருவனின் அனுபவத்தையே கூறுகிறதெனினும், அது ஒரு அறிதலாக ஆகிநிற்கிறது இங்கே. ஒருத்தியைப் பெயர் சுட்டிக் குறித்துவிடாத இந்த அவதானம் தமிழரின் மன நாகரிகத்தின் அடையாளம். இதையே அகத்திணையாய் வகைசெய்தனர் அ

அதை அதுவாக 20

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 20 ‘இரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர?’ - தேவகாந்தன் - (50) கரப்பிலா செஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏர் உடைத்து. (பொருள், குடி, இரவு 3) குறள் 1053 உள்ளதை ஒளித்து வைக்காததும், ஈவதை ஒரு கடமையாகவும் கொண்ட நெஞ்சமிருக்கிறவருக்கு முன்னே நின்று இரப்பதைக்கூட தன்மானம் இழக்காமல் செய்யமுடியும். ஏர் என்பதற்கு அழகு என்றே பலரும் பொருள் கொண்டு உரை செய்துள்ளனர். கலைஞர் மு.கருணாநிதி அதற்குப் பெருமையென்று சரியாகவே பொருள் கொண்டிருக்கிறார். இரந்து உயிர்வாழ்தலே பலராலும் செய்ய முடிந்திருந்த ஒரு சமுதாயத்தில், இரத்தலைச் செய்யக் கூச்சப்படக்கூடாதெனச் சொல்வது அக் காலகட்டத்துக்குத் தர்மம். சாதாரணர்களின் ஜீவனோபாயம் நிலத்தில் தொழில் புரிதல் என்றிருந்த நிலைமையில், அச் சமூகத்தில் பல்லாயிரம் பேர் வேலையற்றும், பசி பட்டினியோடும் அலைந்திருப்பர் என்பதைச் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்தச் சமூகத்தில் வாழ்ந்துவிட இரப்பதில் தவறில்லையென்பது கால அறம். ‘இன்பம் ஒருவருக்கு இரத்தல்’ என்று கூறுகிற குறளே இருக்கிறது. அதற்கு அடுத்துவரும் க

அதை அதுவாக 19

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 19 ‘உரைகாரரின் திரிப்புகள் பல குறள்களின் அர்த்தங்களையே மாற்றிவிட்டிருக்கின்றன.’ - தேவகாந்தன் - (48) தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. (பொருள், குடியியல், மானம் 4) குறள் 964 தன் நிலைமையிலிருந்து தாழ்ந்துவிட்ட மனிதனை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். தலையிலுள்ளபோதுதான் கூந்தல் அல்லது சிகை. இழிந்துவிட்டால் மயிர். கூந்தலைப் பேணலாம். மயிரைச் சீண்டுவார் இல்லை. அதுபோலத்தான் தம் நிலையில் மாறாதிருக்கும்வரையில்தான் ஒருதருக்கு மதிப்பு. நிலை பிறழ்ந்துவிட்டால் மதிப்பே இல்லை. இழிந்த என்ற சொல்தான் இங்கே முக்கியம். இழிதல் என்பது உதிர்தல். கெடுதல் என்ற அர்த்தமும் உண்டு. மேலேயுள்ள குறளிலுள்ள முதலாவது ‘இழிந்த’, உதிர்தல் என்ற அர்த்தமுடையது. இரண்டாவது ‘இழிந்த’, கெடுதல் என்று பொருள்படும். நிலைகெட்டவர் இந் நிலவுலகில் மதிக்கப்படுவதில்லையென்பது நிஜமேயானாலும், இங்கே சந்தர்ப்பவசத்தால் நிலை கெடலை வள்ளுவன் குறிக்கவில்லை. அப்போதுகூட நிலை சீண்டுவாரற்றதாகவே இருக்கும்தான். ஆனாலும் அவன் இங்கே குறிப்பது தகுதியில்லாதவற்றைச் செய்வதின் மூலம

அதை அதுவாக 18

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 18 ‘தனிமனிதனதும், அரசியலதும் நீதிகள் வௌ;வேறானவை.’ - தேவகாந்தன் - (46) வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா மேலியார்மேல் மேக பகை. (பொருள், நட்பு, பகைமாட்சி 1) குறள் 861 தன்னினும் வலியாரோடு மாறுபாடு கொள்ளுதலைத் தவிர்க்கவேண்டும். மெலியாரோடு மாறுபாடு கொள்ளுதலை ஓம்பவேண்டும். நட்பு இயலில், பகைமாட்சி அதிகாரத்தில் வரும் முதலாவது குறள் இது. நீதி, அறம் என்பதெல்லாம் எங்கும், என்றும், எல்லா வி~யங்களிலும் ஒன்றாய் இருப்பதில்லை. தனிமனித நீதியும், அரசு சார்ந்த நீதியும் ஒரே வி~யத்திலேயே பிரிந்து நின்றுதான் பேசும். யுத்தத்துக்கான நியதிகளும், யுத்த காலத்துக்கான நடைமுறை விதிகளும் பெரும்பாலும் சர்வாதிகார ஆட்சியை நிகர்த்துவிடும் ஜனநாயக நாடுகளில்கூட. இவை திருக்குறளின் காலத்திலிருந்தே நியாயப்படுத்தப்பட்டு வருவதுதான் விசித்திரம். அறத்துப் பாலில் அருளுடைமை என்கிற அதிகாரத்தில் வரும் கடைசிக் குறள் இது: ‘வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார் மேற்செல்லு மிடத்து.’ மெலியாரை வருத்த முன்செல்லும்போது தான் தன்னைவிட வலியார்முன் அஞ்சிநிற்கும் நிலையை

அதை அதுவாக 17

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 17 ‘மனிதாபிமானி ஒருவனுக்கு நாடு கனவுகளின் பரப்பாகிவிடாது.’ - தேவகாந்தன் - (44) அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். (பொருள், அங்கம், குறிப்பறிதல் 6) குறள் 706 துன்னை நெருங்கும் எப்பொருளையும் பளிங்கு பிரதிபலித்துக் காட்டிவிடும். ஒருவர் நெகிழ்ச்சியில் உருவாகும் உணர்வை முகம் காட்டிவிடும். இன்பத்துப் பாலில் களவியலில் ஒரு குறிப்பறிதல் (அதி. 110) வருகிறது. அது சொல்லும் குறிப்பறிதலின் அம்சங்கள் வேறு. ஆறிதல் முறையும் வேறு. இது பொருட்பாலின் அங்கவியலில் வருவது. ஆவ்வியலுக்கான அம்சங்களே இக் குறளில் இருக்கும். ஏவ்வளவுதான் கண்ணோட்டம்பற்றி, குறிப்பறிதல் பற்றிச் சொன்னாலும், அதில் எல்லோரும் வல்லவராய் ஆகிவிடுவதில்லை என்பதுதான் நிஜம். அது ஒரு தனி அவதானம். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று அவ்வை சொல்வது, உண்மையேயாயினும், மேலோட்டமானது. ‘பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்’(குறள் 709) என்று வள்ளுவன் சற்று ஆழமாய் இறங்குகிற குறளும் உண்டுதான். எனினும் 704 ஆம் குறள்தான் இந்தக் குறிப்பறிதல்பற்றி மிக்க விரிவாய்ப்

அதை அதுவாக 16

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 16 ‘கவிக் கனவுகளின்போது எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.’ - தேவகாந்தன் - (42) பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். (பொருள், அங்கவியல், அமைச்சு 9) குறள் 639 கேடு நினைக்கின்ற ஒரு மந்திரிக்கு எழுபது கோடி பகைவர் சமம். இங்கே என்னில் சுடர் விரிக்கும் சொல் ‘எழுபது கோடி’ என்பது. பாரதி காலத்தில் பாரதத்தின் ஜனத்; தொகையே முப்பது கோடிதான். ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்ற பாடலடி அதையே சொல்கிறது. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் ஜனத்தொகை சில லட்சங்களையே கொண்டிருத்தல் கூடும். இந்தச் சில லட்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் ‘எழுபது கோடி’ என்ற ஓர் எண்ணின் உச்சம் பிறந்திருக்கிறது வள்ளுவனுக்கு. இது ஒரு கனவு…எண் பற்றிய கனவு… எண் உச்சம். மகிமைப் படுத்தப்பட்டுள்ள சில ஏழுகள் நம்மிடையே உண்டு. ஏழு நிறங்கள், ஏழு சமுத்திரங்கள், எழு சுரங்கள், எழு பிறவிகள் என்பன உதாரணங்களாகக்கூடிய சில. ‘ஏரெழுபது’ என்று ஓர் இடைக்கால நூல் ஒட்டக்கூத்தர் பாடியதாக உண்டு. இவற்றோடு எவ்விதத்திலும் தொடர்புறாதது வள்ளுவனின் இந்த எழுபது. ‘எழுபது கோடி’யெ

அதை அதுவாக 15-1

உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 15-1 ‘தகுந்த மகிழ்ச்சியே எனினும் அளவாகத் திளைக்கவேண்டும்.’ - தேவகாந்தன் - (40) அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. (பொருள், அரசு, தெரிந்துதெளிதல் 3) குறள் 503 அரிய நூல்களைத் தெளிவாகக் கற்றவரிடத்திலும்கூட நன்கு கவனித்தால் சிறிது அறியாமை இருப்பது தெரியவரும். அவர்கள் அரிய நூல்களைக் கற்றவர்கள். அவற்றையும் நன்கு கற்றவர்கள். அப்படியானவர்களிடத்தில்கூட அரிதாகவேனும் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் இந்த வரையறைக்குள் அடங்கியவராகவே இருப்பர். இதை வேறொரு கோணத்தில் விளக்குகிறது அடுத்த குறள். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது அது. ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் தெரிந்து அவற்றுள் எது மிகையாக உள்ளதோ அவரை அத் தன்மைத்தவராய்த் தேரவேண்டும் அல்லது தள்ளவேண்டும். சொல்லப்போனால் இந்த இரண்டு குறள்களும் ஒரே அர்த்தத்தின் இரண்டு பகுதிகளே. இன்மை எவரில் இல்லை? அவரவரும் படிக்கும் படிப்பு, பழகும் பண்பு, மனத்தின் வலிமை அளவுக்கு அது அழிந்துகொண்டு வரும். மறைந்துவிட