Posts

Showing posts with the label சிதைவு

சிதைவும் கட்டமைப்பும்:9

-தேவகாந்தன் ‘மாத்ரு பூமி’ மலையாள இதழின் கோவை அலுவலகப் பொறுப்பாளர் திரு.விஜயகுமாரை ஒருமுறை ‘மாத்ரு பூமி’யின் கோவை அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. எழுத்துபற்றி, சிறுசஞ்சிகைகள்பற்றி, இலக்கியம் - குறிப்பாக ஈழத்து இலக்கியம் - பற்றி நிறையப் பேசினோம். ஏன் ‘கனவுச் சிறை’ நாவலைப்பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். அவர் எனது அடுத்த நூல்பற்றிக் கேட்டபோது ‘காலக் கனா’ சிறுதொகுப்பைச் சொன்னேன். ‘கனவு உங்கள் எழுத்தில் முக்கியமான அம்சமாகவிருக்குமோ?’ என்று தன் வியப்பைச் சொன்னார் விஜயகுமார். ‘அப்படி நினைத்து எழுதியதில்லை’ என்றேன் நான். ‘நினையாப்பிரகாரம் அவ்வாறு அமைய வாய்ப்பிருக்கிறது. நினையாமலே அவ்வாறு சிலருக்கு அமைய முடியும்’ என்று விஜயகுமார் பதில் சொன்னார். ஒருவகையில் அவர் சொன்னது சரிதானோவென்று இன்று நினைக்கத் தோன்றுகிறது. கனவுகளே இலக்கியம், கலை என எல்லாமுமாகின்றனவெனினும், இலக்கியத்தில் கனவு மய்யப்படும் எழுத்து ஒருவசீகரத்தையும், தனி அடையாளத்தையும் பெற்றுவிடுகிறதுதான். ‘வுpதி’ நாவல்பற்றி, அவருடனான இரண்டுமணி நேரப் பேச்சில் நான் ஒருமுறை குறிப்பிட நேர்ந்தது. ‘தலைப்பே நன்றாயிருக்கிறதே. மேலோட்டமாகக் கதையைச் ...

சிதைவும் கட்டமைப்பும்:7

தேவகாந்தன் 1996ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ‘இலக்கு’ சிறுசஞ்சிகையைக் கொண்டுவருவதென்று நான் தீர்மானித்திருந்த வேளையிலும் தமிழ்நாட்டில் எழுத்துக் கோர்த்து அச்சடிக்கும் மரபார்ந்த முறையே அச்சுத் தொழிலுலகில் அதிகமாக இருந்தது. என் அனுபவத்திலும் விசாரிப்பிலுமாய் காளிதாஸ் பிரஸ் என்ற அச்சகத்தைக் கண்டடைந்தேன். சிறுபத்திரிகையென்பதால், ஒரு கணிசமான குறைந்த தொகைக்கு இதழை அச்சடித்துத் தர இணங்கினார் அச்சக உரிமையாளர். வடக்குப் பகுதித் தமிழ்நாட்டிலிருந்து எப்பவோ ஒரு காலத்தில் அச்சு வேலையைக்கொண்டு வாழ்ந்துவிடலாமென்ற நம்பிக்கையோடு சென்னை வந்த ஒரு குடும்பம் அது. மிக வைதீகமானது. பிரித்தானியர் காலத்துப் பழைய அச்சு எந்திரமொன்றை வைத்துக்கொண்டு வாழப் போராடிக்கொண்டிருந்தது. குடும்பம் முழுவதும் அச்சகத்தில் வேலை செய்தது. அச்சடித்த தாளை மடித்தல், புத்தகம் கட்டுதல், அச்சடித்த பின் அச்சுப் பாரத்தைப் பிரித்தல் என்பனபோன்ற வேலைகளை வீட்டுப் பெண்களே செய்தார்கள். மீதியானதை பள்ளி முடிந்து வந்ததும் அந்த வீட்டுச் சிறுவர்கள் செய்தார்கள். அச்சுக் கோர்ப்பதற்கு மட்டும் ஓரிரு பெண் தொழிலாளிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர். பத்திரிக...

சிதைவும் கட்டமைப்பும்: 6

தேவகாந்தன் நூல் வேறு; பிரதி வேறு. நூல் கையால் தாங்கப்படுவது; புpரதி மொழியால் தாங்கப்படுவது. -ரோலன்ட் பார்த் (From Text to Book) நவீனத்துவ இலக்கியக் கருத்துக்களை வளர்த்ததில் ‘கல் குதிரை’க்கு ஒரு கணிசமான இடம் ஒதுக்கப்படவேண்டுமென நினைக்கிறேன். கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அந்த இதழ் அதிகமாகவும் மலர்களையே வெளியிட்டது. மார்க்வெய்ஸ், தாஸ்தாவ்ஸ்கி என்று பலவாறான மலர்கள். அதில் ஓரிரு இதழ்கள் ஜென்னி ராம் அச்சகத்தில் அச்சானதாக ஞாபகம். இத் தருணத்தில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற இதழையும் குறிப்பிடவேண்டும். ய+மா வாசுகி இதற்கு ஆசிரியர். மாரிமுத்து என்ற பெயரில் வனைந்து வந்த ஓவியரும் இவர்தான். இவையெல்லாம் வசதியாக வாசிக்கக்கிடைத்தன. மட்டுமில்லை. இவர்களோடான நேரடி அறிமுகமும் தொடர்பும்கூட எனக்கிருந்தது. மேலைத் தேயத்தில் வீச்சாக வளர்ந்திருந்த பின்நவீனத்துவ முகாம் தமிழகத்தில் பெரிதாக அறியப்படாதிருந்த காலமாக இதைக் கொள்ளமுடியும். தமிழவன், அ.மார்க்ஸ், நாகார்ஜுனன், ரவிக்குமார் ஆதியோர் பலபேரின் வாசிப்பில் மாற்றத்தை உருவாக்கிய முக்கியமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியோராவர். முன்னைய இருவர...

சிதைவும் கட்டமைப்பும்: 5

தேவகாந்தன் நா.பா.வின் எழுத்தை முதன்முதலாக என் பதினெட்டாவது வயதில் வாசித்ததாக ஞாபகம். விருப்பத்துக்கு வாசிக்கக் கிடைக்காத அக் காலத்தில், நூல் வைத்திருப்பவரின் கைவசத்துக்கே வாசிக்கும்படியான நிலைமை. ஒருநாள் புத்தகமேதும் இல்லையென்ற எனக்கு நூல் இரவல் தருபவர் ஒருவர், கல்கியிலிருந்து கட்டிய பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற தொடர்கதை இருக்கிறது, விருப்பமென்றால் கொண்டுபோய் வாசித்துவிட்டு அடுத்த கிழமையே தந்துவிடவேண்டும் என்றார். நைந்த அந்தப் புத்தகத்தை சற்றே விருப்பமின்மையுடன்தான் எடுத்துச்சென்றேன். வாசிக்க ஆரம்பித்த பிறகு புத்தகம் என்னை முற்றாகக் கவர்ந்து விட்டது. கவிதையின் போதையோடு வசனங்களில் வாசகனை இழுத்தாழ்த்தும் வலிமை நா.பா.வின் எழுத்துகளுக்கு இருந்தது. தனியார் பல்கலைக் கழகமொன்றில் தமிழ் விரிவுரையாளராகச் செல்லும் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்துக்கு, பல்கலைக் கழகத்திலேயும், அங்கத்தைய புறச் சூழலிலும் நடக்கும் நிர்வாக, வாழ்வியல்முறைச் சீர்கேடுகளின் தரிசிப்பினையும், அக் கொடுமைகளை எதிர்த்து தார்மீகக் கோபத்தோடு அது நடத்தும் போராட்டங்களையும் நா.பா. அத்தனை அழகோடும் விறுவிறுப்போடும் அதில் சொ...

சிதைவும் கட்டமைப்பும்:4

தேவகாந்தன் (நான்கு) எண்பதுகளின் பாதிக்குமேல் இலங்கையின் அரசியல் சார்ந்த இந்தியாவின் குழப்ப நிலைப்பாடு ஒரு தெளிவை அடைந்ததாக ஓரளவு சொல்ல முடியும். எண்பதுகள் வரை ‘இந்தியப் பொருட்களை வாங்கு, இந்தியனாக இரு’ என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்த இந்தியா, பின்னால் சர்வதேச நாடுகளிpன் சந்தைக் காடாக ஆக நேர்ந்தது. பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம், தவிர்க்க முடியாதபடி அரசியல் கருத்துநிலை மாற்றமாக உருவெடுக்கும். தன் அரசியலின் அம் மாற்றத்தை அது சத்தமின்றிப் பிரதிபலித்தது. ஒரு படையெடுப்பாக அமைதி காக்கச் சென்ற படையொன்று மாறியதென்பது மிகப்பெரும் கொடுமை. உலக சரித்திரம் இதுவரை இதுபோன்றவொரு சம்பவத்தை அறிந்ததில்லை. இலங்கைத் தமிழர்மேலான யுத்தம், அதன் உள்ளீட்டு மாற்றத்தின் விளைவாகும். ஆனாலும் இத்தகு நிலைப்பாட்டிற்கு முன்னால் அது மேலும் கலங்கியே தெளியவேண்டியிருந்தது. தெளிவு சட்டெனப்போல துருத்திக்கொண்டு வெளியே தெரிந்தமை நிஜமே எனினும், அதற்காக அது காத்திருந்ததென்பதும் மெய்யே. அது குடிமக்கள் அகதிகள் என்று அனைவரையும் பாதித்தது. இவ்வளவு கலகங்களுக்கும் மேலேதான் தீவிர இலக்கியம் சார்ந்த ...

சிதைவும் கட்டமைப்பும்:3

(மூன்று) அவிக்க முடியா ஆசைகொண்டவர்களாகவே பெரும்பாலும் மனிதர்களின் மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறதென்பது நிஜம். இம் மனிதர்களை நோக்கித்தான் ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்ற ஹிதோபதேசம் பிறந்திருக்க முடியும். தம் மனத்தினை வெல்பவர்களாய்ச் சிலர் தேறவும் அவ்வப்போது செய்திருக்கிறார்கள்தான்;. ஆனால் வாசிப்புத் தீவிரம் கொண்டலைபவனுக்கு ஹிதோபதேசங்கள் அவனிடமிருந்தே பிறக்கின்றன. அவை வாசிப்புக்கெதிரானவையாகத்தான் அமைவதில்லையென்பதே இதிலுள்ள விசே~ம். வாசிப்பில் தீவிர வெறிகொண்டமை என் சிறுவயதிலேயே என்னிடத்தில நிகழ்ந்துவிட்டிருந்தது. வுhசிப்பென்றால் அப்படியொரு வாசிப்பு. மண்ணெண்ணெய் விளக்கினைத் தலைமாட்டில் எரிய வைத்துக்கொண்டு நடுச் சாமம் கடந்தும் படுத்தபடி வாசிப்பு. என் தாய் நான் விளக்கை ஊதி நூர்த்துவிட்டு நித்திரை கொள்ளும்வரை தான் நித்திரைகொள்ளாமல் எனக்காகக் காத்திருப்பதை இப்போது நன்றியோடும், கருணையோடும் நினைத்துக் கொள்ளுகிறேன். வுhசிப்பதற்கான நூல்கள் பெற்றுக்கொள்வதும் கடினமானதாகவே இருந்த காலம் அது. இந்திய நூல்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் பேனா நண்பர்களை ஏற்படுத்...

சிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை)

தேவகாந்தன் (1) இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எனது ‘கதா காலம்’ என்னும் மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளிவந்ததிலிருந்து, அதை வாசித்த என் நண்பர்களும் வாசகர்களும், ‘கதா காலம்’ இதுவரை வெளிவந்த, குறிப்பாக கதாகாலத்துக்கு முன் வெளிவந்த ‘யுத்தத்தின் முதலாம் அதிகார’த்தைவிடவும்கூட, தன் நடை போக்குகள் போன்றனவற்றிலிருந்து வெகுவான மாற்றம் கொண்டிருப்பதாகச் சுட்டிக் கூறிவருகின்றனர். அது மெய்யெனவே இப்போது நினைக்க எனக்கும் தோன்றுகிறது. சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் காலஞ்சென்ற செம்பியன்செல்வன் தலைமையில் காலஞ்சென்ற நந்தி உட்பட அ.யேசுராசா, சட்டநாதன் போன்றோர் கலந்துகொண்ட எனது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் விமர்சனக் கூட்டத்தில், அந் நாவல் ஈழத் தமிழ் நாவல் வரலாற்றில் கொண்டிருக்கும் அதிகாரம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஆளப்பட்டிருந்த சொல்லின் செறிவுபற்றியும், நடையின் வீச்சுப் பற்றியும், அதன் மய்யமழிந்த கதைகூறும்; பண்பு பற்றியும் யாழ். கூட்டத்தில் சட்டநாதன் உட்பட, கொழும்பு ராமகிரு~;ண மண்டபத்தில் அதன் வெளியீட்டாளர்கள் பூபாலசிங்...