சிதைவும் கட்டமைப்பும்:3

(மூன்று)



அவிக்க முடியா ஆசைகொண்டவர்களாகவே பெரும்பாலும் மனிதர்களின் மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறதென்பது நிஜம். இம் மனிதர்களை நோக்கித்தான் ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்ற ஹிதோபதேசம் பிறந்திருக்க முடியும். தம் மனத்தினை வெல்பவர்களாய்ச் சிலர் தேறவும் அவ்வப்போது செய்திருக்கிறார்கள்தான்;. ஆனால் வாசிப்புத் தீவிரம் கொண்டலைபவனுக்கு ஹிதோபதேசங்கள் அவனிடமிருந்தே பிறக்கின்றன. அவை வாசிப்புக்கெதிரானவையாகத்தான் அமைவதில்லையென்பதே இதிலுள்ள விசே~ம்.

வாசிப்பில் தீவிர வெறிகொண்டமை என் சிறுவயதிலேயே என்னிடத்தில நிகழ்ந்துவிட்டிருந்தது. வுhசிப்பென்றால் அப்படியொரு வாசிப்பு. மண்ணெண்ணெய் விளக்கினைத் தலைமாட்டில் எரிய வைத்துக்கொண்டு நடுச் சாமம் கடந்தும் படுத்தபடி வாசிப்பு. என் தாய் நான் விளக்கை ஊதி நூர்த்துவிட்டு நித்திரை கொள்ளும்வரை தான் நித்திரைகொள்ளாமல் எனக்காகக் காத்திருப்பதை இப்போது நன்றியோடும், கருணையோடும் நினைத்துக் கொள்ளுகிறேன்.

வுhசிப்பதற்கான நூல்கள் பெற்றுக்கொள்வதும் கடினமானதாகவே இருந்த காலம் அது. இந்திய நூல்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் பேனா நண்பர்களை ஏற்படுத்தியே கணையாழி, எழுத்து, தாமரை போன்ற சஞ்சிகைகளை
சஞ்சிகைப் பரிமாற்றத்தில் பெற்றுக்கொண்டிருந்தோம். புத்தகங்கள் இன்னும் பெறல் கடினமானதாகவே இருந்தது. இவற்றையும் வளர்ந்த பெரியவர்களிடமே இரவல்பெற முடிந்திருந்தது. இதற்கான அலைச்சலே மிக உபத்திரவமானதாயிருக்கும். யாழ்ப்பாண நூலகம் திறக்கப்படுகிறவரையில் இந்த உபத்திரவமும் இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

என் எழுத்து முயற்சிகளுக்கெல்லாம் சிறிது முந்தியது இந்த வாசிப்பு. அதற்கு ஆதாரமானது என்றும்கூடச் சொல்லமுடியும். ஆனால் தமிழ்நாட்டில் என் வாசிப்பு வேட்கைக்கு நிறையத் தீனி கிடைத்தது. சமூகத்தின் பிற இயங்குதளங்களில் நடமாட்டம் அறும் அளவுக்கே வாசிப்பு என்னை ஆக்கிரமித்துவிட்டிருந்தது என்றுகூடச் சொல்லுவேன். ‘நிலாவரை’ சிற்றிதழ் நின்றுபோன பிறகு எனக்கும் பெரிதாக எழுதவும் அலையவும் வேண்டியிருக்கவில்லை. சொந்தமாக வாங்கியும், இரவலெடுத்தும், வாடகைக்கெடுத்துமாய் என் வாசிப்புத் தொடர்ந்துகொண்டிருந்தது. தமிழகத்துப் பழைய நூல்; கடைகள்; வாசகர்களுக்குப் பெரிய கொடை. இந்த இடத்தில் நான் தந்தை பெரியார் நூலகத்தையும், சென்னை கன்னிமாரா நூலகத்தையும் குறி;ப்பிட்டேயாகவேண்டும். இலங்கையில் பல்கலைக் கழகத் துறையினருக்குமட்டுமே வாசிக்க வாய்த்திருக்கக் கூடிய நூல்களையெல்லாம் நான் வாசித்தேன். பல நூல்கள் அவை பிரசுரமான கதி குறையுமுன்னமே என் கைவசமாகின. அவற்றைக் காசு கொடுத்து வாங்கியே நான் வாசிக்கவேண்டியிருந்தது. ஏன் அன்றாட வாழ்வியக்கத்தின்; ஆதாரத்தை அது அசைக்கிறவளவுக்குப் போய்விடும் சிலவேளைகளில். அவை ஒரு தீவிர வாசகனை எந்த விதத்திலும் பின்வாங்கச்; செய்துவிடுவதில்லை.

கலவி போல்தான் வாசிப்பும். அந்த வெறி அடங்குவதில்லை. என்றும்தான். வெறுமனேயான ஒரு பரந்துபடும் வாசிப்பு நாளடைவில் ஒரு தீவிர வாசிப்பாக மாறும். அப்படி அது மாறவேண்டும். தீவிர வாசிப்பாக அது மாறுகிறவளவில் துறை சார்ந்ததாக ஆகியிருக்கும். அந்த வாசிப்பில் ஒரு நுட்பம் சேர்ந்திருக்கும். படைப்புச் சார்ந்த நூல்களில் நீர்த்த ஒரு நடையை அது ஒதுக்கித் தள்ளுகிறது. பிற துறைகளில் அதுஅதற்கான நடையை இச்சிக்கிறது. நூல்களை இவ்விதமாகத் தன் ரசனைக்கேற்பவும், தரத்துக்கேற்பவுமே ஒருவன் எதிர்பார்க்கிறான். தீவிர வாசிப்பின் மனம் நாளடைவில் வெகுஜன இலக்கியத்திலிருந்து பிரிந்துகொண்டு சிறுபத்திரிகைகளை நோக்கி நகர்வதின் சூக்குமம் இதுதான். கல்கி, நா.பா.,அகிலன் போன்றோரது எழுத்துக்களின் ஆதர்~த்திலிருந்து புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் போன்றோரது படைப்புகளுள் நான் நுழைந்ததை இப்படித்தான் விளங்கிக்கொள்ள என்னால் முடிகிறது. சாண்டில்யனை நா.பா. வின் வாசிப்பின்போதே நிராகரித்துவிட்டாயிற்று. ஏன் அடுத்தகட்ட வாசிப்பு மௌனி, நாகராஜன், சுந்தர ராமசாமி, கி;.ராஜநாராயணன், லா.ச.ரா. என்று விரிந்ததுக்கும் இந்த விதி பொருந்தும்.

இந்த நிலையிலேதான் ‘புதிய மனிதன்’ சிற்றிதழாளரோடு எனக்குத் தொடர்பு ஏற்படுகிறது. இதழை ஆசிரியராக இருந்து நடத்தியவர் சி;.மதிவாணன் என்ற நண்பர். இன்குலாப் சிலகாலம் சிறப்பாசிரியராக இருந்தது இந்த இதழிலேதான். பல இடதுசாரித் தோழர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் இன்குலாப்பும், அக்னிபுத்திரனுமே நீண்டநாட்களாய்; நட்பைத் தொடர்ந்தவர்கள். ‘மனஓசை’ ஏன்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரின் இதழ் அப்போது வெளிவந்துகொண்டிருந்தது. பா.செயப்பிரகாசத்தை அந்த இதழில்தான் அறிமுகமானேன்.

இந்தத் தொடர்பில் இலக்கிய இதழாக என்னிடம் வந்துசேர்ந்தது ‘முன்றி;ல்’. இந்தத் தருணத்தில்தான் க.நா.சு.வின் இரண்டாம் கட்ட ‘ஞானரதம்’ வெளிவந்தது என்று நினைக்கிறேன். தமிழ்நாடு பூராவிலுமே ஒரு சிற்றிதழ் அலை அடித்துக்கொண்டிருந்த காலமாகவும் அதைச் சொல்லலாம். சென்னை தியாகராய நகரில் முன்றில் புத்தக மையம் படைப்பாளிகளின் சங்கம ஸ்தானமாகியிருந்தது. விக்கிரமாதித்யன், சி.மோகன் , பிரமிள், மா.அரங்கநாதன்,அ.ராமசாமி போன்றோரை அங்குதான் அறிமுகமானேன். முன்றில் புத்தக மையம் என் வாசிப்பின் கச்சாப் பொருளைக் கொண்டிருந்ததெனின், அது ஏற்பாடு செய்திருந்த எண்பதுகளில் கலை இலக்கியம் என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் இன்னும் பெரிய இலக்கிய வாசலை எனக்குத் திறந்துவிட்டதெனலாம். நாகார்ஜுனன், சாரு நிவேதிதா, லதா ராமகிரு~;ணன், கோபி கிரு~;ணன், ராஜமார்த்தாண்டன், சுகுமாரன் என்றும், இன்னும் பல தீவிரமற்ற எழுத்தாளர் பலரையும்கூட நான் அறிமுகமானேன். என் வாசிப்பின் திசை திரும்பல் முற்றுமுழுதாய் நிர்ணயமாகிறது. இக் காலத்தில் காத்திராப்பிரகாரமாகவே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு இவையெல்லாம் நடந்தேறுகின்றன என்பது முக்கியம்.

இது பின்நவீனத்துவம் பேசப்படுகிற காலமாக இருந்தது. நாகார்ஜுனன் நிறைய அது குறித்து எழுதினார். சாரு நிவேதிதாவின் ‘பேன்சி பெனியன்’ நாவல் அப்போதுதான் வெளிவந்திருந்தது. பின்நவீனத்துவப் படைப்பாக்க அலை பெரிதாகவில்லையெனினும் தமிழ்ச் சூழலில் அது அடிக்கத் துவங்கிய காலமாக அதைச் சொல்லமுடியும்.

நான் தொடர்ந்தும் சிறிதாகவேனும் எழுதிக்கொண்டே இருந்தேன். என் மாற்றத்தின் வாசிப்பு என் எழுத்திலும் மாற்றத்தை விளைவித்திருத்தல் சாத்தியமே. அது ஒருவரால் திட்டமிட்டுச் செய்யப்படுவதில்லையென்றாலும், மாற்றம் தவிர்க்;கப்பட முடியாதது. என் எழுத்தைப் படித்த வேறுபேர் சொல்லவேண்டிய வி~யமிது. ஆனாலும் என் எழுத்தில் அப்போது பெரிய மாற்றமேதும் நிகழ்ந்திருந்ததாக என்னால் சொல்லமுடியாதுதான் இருக்கிறது.

கலவியின் நுணுக்கங்களைத் திருக்குறளின் காமத்துப் பால் தன் இருபத்தைந்து அதிகாரங்களில் அற்புதமாக விளக்கும். வாசிப்பிலும் காம நுட்பம்போல் உண்டு. அது ஐம்புலன்களினால் அடையப்படாவிட்டாலும் ஒரு சுகத்தை மனமும் புத்தியும் அடையவே செய்கிறது. உச்சஸ்தானத்தின் பின் காம உணர்ச்சி வடிந்துவிடுகிறது. ஆனால் வாசிப்பின் சுகம் உச்சஸ்தானமடையினும் வடிந்துவிடுவதில்லை. அது மனத்தையும் அந்த உச்சத்துக்கு உயர்த்தி வைத்துக்கொண்டிருக்கும். காலவரையறையற்ற காமத்தில் களைப்பு மீதியாகிறது. அவ்வாறு, வுhசிப்பின் உச்சஸ்;தானத்துக்குப் பிறகும் ஒரு களைப்பு மனத்தில் ஏற்படவே செய்கிறது. அது தேங்கித் தேங்கி ஒரு கனதியாய் என்னுள் உறைந்துபோகும் ஒரு காலகட்டத்தில் நான் செய்வது காணாமல் போய்விடுகிறதுதான். ஏன்னிலிருந்துமே காணாமல் போய்விடுவேன்.

தன்னிலிருந்தும் காணாமல் போய்விடுதல் என்பது விசித்திரமான ஒரு மனநிலையை விளக்க நான் பயன்படுத்துகிற வார்த்தை. ஓவ்வொருவருக்கும் ஒரு மறுமுகமிருக்கிறது. புடைப்பாளிகள் வி~யத்தில், பொதுவாகக் கலைஞர்கள் வி~யத்ததில், இந்த முகம் சற்றுத் தெளிவாகத் தெரியலாமெனவே எண்ணுகிறேன். சமூகத்தின் சட்ட திட்டங்கள், நடைமுறைகள், ஒழுகலாற்று வி~யங்களுக்கு அடங்கியதானது ஒரு முகம். இவைகளை மீறுவதாய் மற்ற முகம். நான் கற்றவைகளின் சுமை பெரிதாகிக் காணாமல்போகும் நாளில் இந்த என் மறுமுகமே என் முகமாய் விலாசம் காட்டிக்கொண்டிருந்திருக்கிறது. சமூக மனிதனாயிருந்து கடைப்பிடிக்கும் ஒழுகலாற்று வி~யங்களை மனம் முற்றாகக் கைவிட்டிருக்கும் அந் நிலையில். சித்தன் போக்காய் அலைபவனாக இல்லாமல் மறுமுகம் கொண்டு நான் ஒழுக்க கலகக்காரனாவது அப்போது நிகழ்கிறது. ஏங்கோ ஒரு இடத்தில், மக்கள் செறிவற்று விரிந்த வெளியும் காற்றும் வானமும் கொண்ட ஒதுங்குப் புறத்தில் குடியும், புதிய குடித்தனமுமாய் என் காலம் கழியும். என்றோ ஒருநாள் என் சுயம் மறுபிறப்படைய இவ் அஞ்ஞாதவாசத்திலிருந்து நான் சமூகம் திரும்புவேன். என் எழுத்து என் அனுபவங்களின் விளைச்சலானது இவ்வண்ணமே நிகழ்ந்தது. புதிய குடித்தனத்தோடான உறைவு செய்த சுகங்கள் நினைக்கவும் சுகம் செய்வன. அப்படியான ஒரு உறவின் பிரிவில் எவ்வளவு வேதனையை ஒருவர் உணர்ந்திருக்கவேண்டும்! ஆனால் ஒரு அழுகை, ஒரு கண்ணீர் இல்லாமல் இயல்பின் நிகழ்வாயே அப் பிரிவுகளிருந்ததை வியக்காமல் எண்ண இப்போதும் முடியவில்லை என்னால். மறுபக்கம்1, மறுபக்கம்2, தீர்ப்பு, திசைகள் எட்டும் போன்ற சிறுகதைகள் இந்த என் அனுபவத்தின் விளைச்சலே. ‘யுத்தத்தின் முதலாம் அதிகார’த்தில் ராஜனுக்கும் அவனது மாமன் மனைவிக்கும் இடையில் மிக அநாயாசமாக ஏற்படும் புணர்ச்சியும், மறுநாளில் பழைய உறவுமுறைகளோடு பழகி இயல்பாய்ப் பிரிவதும் நடைமுறையின் ஆதாரமற்றவையல்ல.

சமூகத்தோடு இயைந்தவனாயிருந்து அச் சமூகத்துக்குப் பொருத்தமான கலகங்களை நான் எழுத்தில் விழுத்த இந்தக் காணாமல் போகும் காலம்தான் காரணமாய் இருந்திருக்கிறதென்பதை இப்போது நான் புரிகிறேன். என் சமூக அக்கறையின் தாத்பர்யம் இப்படியேதான் இருந்திருக்கிறது. இருந்துகொண்டுமிருக்கிறது.

ஒரு பெரும் காலத்துக்கு நான் எழுதாமல் மட்டுமில்லை, வாசிக்காதவனாயும் இருந்திருப்பினும், என்னைத் தொலைத்திருந்துவிட்டுத் திரும்பிய பிறகு நான் முன்னிலும் மூர்க்கங்கொண்டு வாசிப்பில் இறங்குவேன்.

இந்நிலையில் 1987 வருகிறது. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாதத்தாகிறது. இந்தியப் படை இலங்கை செல்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்குமிடையே யுத்தம் தொடங்குகிறது. தமிழகத்தில் அகதிகளின் சூழ்நிலையில் பெரிய மாற்றம். அகதிப் பதிவுகள், பொலிஸ் கெடுபிடிகள் வெகுக்கின்றன. தமிழக மக்கள் ஒருபகுதியினரின் மனோபாவம் தளும்பு நிலைக்குச் செல்கிறது. தமிழக மக்களின் ஈழமக்கள் மீதான அனுதாப அலை வற்றத்துவங்கிய காலப் புள்ளி இந்த இடத்தில்தான் விழுகிறது.

ஈழத்தில் இந்தியப் படைகளின் வெறியாட்டத்தைக் காதுகொண்டு கேட்கமுடியாதிருந்தது. இந்தியப் பத்திரிகைகள் அங்கு நடைபெறும் அக்கிரமங்களையெல்லாம் ராஜவிசுவாசத்தோடு மூடிமறைத்தே எழுதின. மனது கொதித்துக்கொண்டிருந்தது. தாயக நிலபரத்தைத் தொடர்ந்தும் சகிக்கமுடீயாதிருந்தும் என்ன செய்வதென்றும் தெரியாதிருந்தது. புகல் தந்த பூமிக்கு எதிராகப் பேச, எழுத மனவுறுத்தலாயிருந்தது. அதைச் செய்வதெனில் அம் மண்ணைவிட்டு நீங்கிய பிறகே செய்தல் அறம். அதை உடனடியாகச் செய்யமுடியாத வசதியீனங்களின் வாழ்வு. என்ன செய்ய? அந்த நிலையில் எழுதத்தான் முடிந்தது. கவிதையாய் எழுதினேன். அதையும் பிரசுரிக்காது ஒருபக்கத்தில் போட்டே வைத்தேன். அவ்வாறிருந்து நெடுங்காலத்தின் பின் சில திருத்தங்களுடன் அக் கவிதை என் ‘கனவுச் சிறை’ மகாநாவலின் மூன்றாம் பாகமான ‘அக்னி திரவ’த்தில்; ராகினி என்கிற பாத்திரமூடாக வெளிவந்தது. அது இது:


கறுத்த மேகம்
திரண்டு வந்து
மெல்லக் கவிந்தது
இடியும் மின்னலும்
ஆர்க்கத் துவங்கின

ஓவ்வொரு இடியிலும்
மாதிரம் குலுங்கிற்று
பெருமழைக் குறிகளை
மின்னல் காட்டிற்று

சிப்பி வாய் விரித்தது
விடாய் பெருத்த மண்
கரும் சின்னம் கண்டதும்
புழுதியைக் கிளப்பிற்று
காற்று கொண்டோடிற்று

பச்சைகள் சிலிர்த்தன
சுழன்றடித்தன மரம் செடி
மானுட நெஞ்சங்கள்
துக்கம் உதிர்த்தன
முகங்களில் விகாசம்
நாளை ஓர் பொழுதுக்குள்
நல்மழை வருமென்ற
நம்பிக்கை விரிந்தது
அடங்கிக் கிடந்த வேட்கை
சிறகைச் சிலிர்த்தது
சுகத்தினின் சங்கீதம்
காற்றிலுதம் இழைந்தது

திடீரென
அகண்ட வெளியில்
பொலபொல ஓசைகள்

மக்கள் எழுந்தனர்
மழைய்…எனக் கூவினர்
ஓடினர்
வெளியினை அண்ணாந்து பார்த்தனர்
வுhனக் கூரையில்
கறுத்த மேகம் அசைவது நின்று
கரையத் துவங்குதல்
தெற்றெனத் தெரிந்தது

ஆரவாரங்கள் நொடியினில் அடங்கி
ஓவ்வொரு துளியிலும்
அவர்
அதிர்ந்து குலைந்தனர்
‘துமி…ஏன் இப்பிடி
தணலாய்ச் சுடுகுது
மழை…ஏன் தசையினைத்
தீயாய் எரிக்குது’

மரண ஓலம் எங்கும் எழுந்தது
மனித நாசம் காட்சி விரித்தது
சிப்பிகள் நீரில் செத்தழிந்தன
நிமிர்ந்த நம்பிக்கைகள்
உடைந்து சிதறின
நாளையென்பது பாலையாய்
நீண்டு கிடந்தது

வானக் கூரையில்
கறுத்த மேகம்
அசைந்துகொண்டிருந்தது


இது தமிழ் மக்களின் நம்பிக்கை சிதறிய கதையை, அவர்கள் பட்ட வதையைச் சொல்லிற்று. நான் என்; நெஞ்சின் நோவு தணிந்த விதம் இதுதான்.

காலம் நகர்ந்துகொண்டிருந்தது. வாழ்க்கையே தேங்கிக் கிடந்த நிலையில் வாசிப்புத் தேக்கம், எழுத்துத் தேக்கம் எல்லாம் தவிர்க்கப்பட முடியாதவையே. இந்த நிலையில் எண்பதுகளின் அந்த இறுதி கழிந்து தொண்ணூறுகள் பிறக்கிறது.

(தொடர்வேன்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்