Posts

Showing posts from October, 2015

உண்மையைத் தேடுதல் சாளரம்:4

கலகமும் முரணும் கண்டனமும் ‘கலக மானுடப் பிறவி’ என்கிறான் முதுவோன். ‘கலக மானுடரே கேளுங்கள்’ என்கிறான் ஒரு சித்தன்.  கலகக் குணம் மனிதருள் இயல்பாய் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். மதவழி மீறி இச்சைப்படி வாழ்தலை மேலே சொன்ன அடி குறித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இலக்கியக் கலகம் வேறானது. அதில் இரண்டு வகையான தன்மைகளை தெளிவாகவே காணமுடியும். ஒன்று, தன்னை இனங்காட்டவும் முன்னிலைப் படுத்தவுமாக. அடுத்தது, உண்மையில் தவறுகள் பிழைகளை இனங்கண்டு அவற்றை மறுதலிப்பதற்கான முனைப்பாக எடுக்கப்படுவது. இதில் பிந்திய கலக குணத்தையே இங்கு நான் சொல்ல முனைகிறேன். முன்புபோலவே இவ்வகைக் கலகம்பற்றி எனக்கு வேறு அபிப்பிராயமில்லை. கலகம் ஒரு விசாரணைக்கான அழைப்புத்தான். அதுவே நியாயத்தை உரைப்பதில்லையெனினும், அதிலிருந்து நியாயத்துக்கான ஒரு தீர்வு பிறக்கும் என்பதே அதை முன்னெடுப்பதற்கான காரணமும் ஆகும். முரணென்பது ஒரு நியாயத்தை முன்னிறுத்திக் கொள்ளப்படுவது. அதுவே முழுமையான நியாயமாக இல்லாதபோதும், அது நியாயத்தின் பெரும்பங்கை தன்னுள் கொண்டேயிருக்கும். இதுவரையான நவீன தமிழ் இலக்கியத்தின் நீண்ட பாதையைத் திரும்பிப் பார்ப

கலாபன் கதை: 2-10

மனதில் நங்கூரமிட்ட நினைவு 1984ஆம் ஆண்டின் ஒரு ஆடி மாதம் துபாயிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய கலாபனை கூட்டிவர சிவபாலன் சென்றிருந்தான். சிவபாலன் தொழில்புரியுமிடம் மட்டக்கிளப்பானாலும் அவனுக்கு கொழும்பையும் நன்கு தெரிந்திருந்தது. அவன் பல கொழும்பு நண்பர்களையும் தெரிந்திருந்தான். அன்று ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு மறுநாள் காலையில் பருத்தித்துறைக்கு பஸ் எடுப்பதே அவர்களின் திட்டமாகவிருந்து. மாலையில் சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென வெளியே சென்றிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக கொச்சிக்கடை அந்தோனியார் சேர்ச்சுக்கு முன்னால் தன் நீண்டநாள் கப்பல் நண்பன் அத்துளவை கலாபன் கண்டான். தான் அப்போது இலங்கையில் பாட்டா கம்பெனியில் வேலைசெய்வதாகக் கூறிய அவன் ஞானக்கோன் ஏஜன்ஸி உடனடியாக ஒரு கப்பல் என்ஜினியரை தேடிக்கொண்டிருக்கிறதாகவும், கொழும்பு துறைமுகத்தில் தடுக்கப்பட்டிருக்கும் ஒரு கப்பலின் சரக்கை அதை அனுப்பியவர்கள் நீதிமன்ற அனுமதிபெற்று வேறொரு கப்பலில் ஏற்றுகிறவரைக்குமான காலத்துக்கு சுமார் ஒரு மாதம் வரையுமே வேலை செய்யவேண்டியிருக்குமெனவும் தெரிவித்து, கலாபனுக்கு அது விருப்பமா என்றும் கேட்