Posts

Showing posts from August, 2014

தமிழ் நாவல் இலக்கியம்

தமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பூரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர்த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது. இவ்வுரைக்கட்டு அல்லது உரை உங்கள் மனத்தில் தமிழ் நாவல் குறித்த எதாவது சிந்தனையை  அல்லது விவாதத் தளத்துக்கான கேள்விகளை எழுப்புமானால் அதையே இந்த உரைக்கட்டின் வெற்றியாக நான் பாவித்துக்கொள்வேன். அந்த நோக்கத்தோடேயே இதுவும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். அதனால்தான் பல்கலை நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுமுறைப் போக்கிலன்றி ஒரு தீவிர வாசகனின் பார்வையில் ஆய்வுமுறைகளை மறுத்தும், சில ஆய்வு முடிவுகளை மறுதலித்தும் இவ்வுரைக்கட்டு அமைய நேர்ந்திருக்கிறது. பல்கலைக் கழகங்கள்மீது எனக்குக் கோபமொன்றுமில்லை. அவ

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என்றோ, உலகத்தரம் வாய்ந்தது என்றோ சொல்லும்படிக்கு நாவலேதும் ஈழத்தில் தோன்றியதுமில்லை. இப்படிச் சொல்லுகிறபோது வாசகர்களும், நண்பர்களும் முணுமுணப்புக் காட்டுகிறார்கள். நாவலிலக்கியத்தின் வளமான வளர்ச்சிக்கான சூழ்நிலைமைகள் ஈழத்தில் நன்கமைந்திராததைக்கொண்டு இந்த முடிவுக்குத்தான் ஓர் அவதானியால் வந்துசேர முடியும்.      நாவல் இலக்கியத்துக்கான சூழ்நிலைமைகள் குறித்து இலக்கியவரலாறு தெளிவாகவே பேசுகிறது. அச்சு யந்திர வசதி, வாசகர்களாய் அமையக்கூடிய பரந்துபட்ட மத்தியதர வர்க்கம் போன்றவை, நாவலிலக்கியத்தின் தோற்றத்துக்குப்போலவே வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை தமிழகத்தில்போல் ஈழத்தில் வாய்க்கவில்லையென்பது பெரிய நிஜம். அதனால் சில நல்ல நாவல்கள், சுமாரான நாவல்கள், குறிப்பிடத் தகுந்த நாவல்கள் என்கிற அளவில் குறுகியதுதான் ஈழத்தின் நாவலிலக்கியப் பரப்பு. அதன் வீச்சான காலம் இனிமேல்தான் தோன்றவேண்டும். அதற்கான அறிகுறியை இவ்வியாசத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.      ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றை தோற்ற காலம், மறுமலர்ச்சிக் காலம், தேசியவாதக் காலம்,

நூல் விமர்சனங்கள் 7 கொலம்பசின் வரைபடங்கள்

யோ.கர்ணனின் ‘கொலம்பசின் வரைபடங்கள்’ (குறுநாவல்) ஆயிரம் நாட்களின் ஈழ வரலாறு சென்றிருந்த சுவடுகள் பதிவாகியுள்ள இந்தப் பிரதி புனைவிலக்கிய வகைமையுள் எது சார்ந்தது என்ற வினா, இதன் கலாநேர்த்தியின் அளவைக் கணிக்க மிகமுக்கியமானது. ‘இப்போதுயுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் அதன் வலியும் வேதனையும் முடியவில்லை. அது ஏற்படுத்திய துயரம் தீரவில்லை. கர்ணனுடைய மனதில் இவற்றின் தீயும் நிழலும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன. 'முடிவற்றஆவேசத்துடன், சகிக்கமுடியாதவெம்மையோடு இந்தத் தீநடனம் அவருடைய  மனதில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த  நடனத்தைக் கர்ணன் விரும்பவில்லை. ஆனாலும் அது  அவரிடமிருந்து  விலகுவதாகவும் இல்லை’ என  யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’சிறுகதைத் தொகுப்புக்குமுன்னுரை எழுதிய  கருணாகரனின் வார்த்தைகள் மெய்யாக இருக்கக்கூடும். அடங்காத் தீயின் கருக்கும் வெம்மை ‘கொலம்பசின் வரைபடங்கள்’ முழுக்கக் காணக்கிடைக்கும். வரலாற்றினால் நிகழ்வுகளைப் பதிவுதான் செய்யமுடியும். இலக்கியம் மட்டுமே நிகழ்வுகள் சிந்திய உணர்வுகளை சிதறாமல் சேகரமாக்குகிறது. உலகமகாயுத்தங்களின் கொடுமைகளை வரலாற்றினால் அறிந்துள்ள

இலக்கியமும் அதன் பயனும்

இலக்கியமும் அதன் பயனும் ஒரு சமூகத்தினது நாகரிகத்தின் அடையாளம்தான் அந்த மொழியிலுள்ள இலக்கியம். கல்வெட்டுக்கள், பாண்டங்கள், ஆயுதங்கள்போன்ற அகச் சான்றுகளால் நிரப்பப்பட முடியாதுபோகிற சரித்திரத்தின் இடைவெளிகளை இலக்கியமே நிரப்புகிறது. ஆயினும் இலக்கியத்தின் பயன் இதுமட்டுமேயில்லை. உணர்வுகளுக்கான பயிற்சி அளிப்பதும் அதன் நோக்கம்தான். தீட்டித் தீட்டி தன் மொழியின் தத்துவம், விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய துறைகளுக்குச் சொற்களைப் பாவனைக்காய் வழங்குவதும் இலக்கியத்தின் பயனே. எனினும் அதன் உணர்வுப் பயிற்சியையே முதன்மையானதாகக் கூறமுடியும். ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களாக இந்த நம்பிக்கையே என் எழுத்தின் ஆதாரமாக இருந்துவருகிறது. அக் கருத்து என் மனத்தில் முளைவிட்ட தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 1965ஆம் ஆண்டு அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் இலக்கிய யாத்திரையாக இலங்கை வந்திருந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், பின் எனது ஊரான சாவகச்சேரிக்கும்கூட அந்த யாத்திரை நீண்டது. சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் கம்பராமாயணம் குறித்து ஏதோ ஒரு தலைப்பில் அன்று அவர் உரை நிகழ்த்தினார். அப

தேவகாந்தன் நேர்காணல் 4

(என் குறிப்பு: இது எனது மொழியில்லை. அம்பலம் இணைய தளத்துக்காக என்னை நேர்கண்ட நிருபரின் மொழி. எமக்கிடையிலான உரையாடலிலிருந்து இந்த நேர்காணலை அவர் வடிவமைத்திருக்கிறார். கடந்த எனது தமிழகத்து பயணத்தின்போது (ஆனி 2014) களஞ்சியம்.காம் பகுதியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதி  என் பார்வையில் தட்டுப்பட்டது. இதைப் பதிவாக்கவேண்டுமா என்று முதலில் யோசித்தேனாயினும், இதிலுள்ள இலக்கியம், அரசியல் சார்ந்த கருத்துக்கள் சிலவற்றின் முக்கியத்துவம்; கருதி பதிவேற்ற முடிவு செய்தேன். இது ஒரு நேர்த்தி குறைந்த நேர்காணல் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இல்லை. இது வெளிவந்த காலமும் படியிலிருந்து கண்டுபிடிக்க முடியாதிருந்தது. சுமாராக 1999 அல்லது 2000 ஆண்டளவில் வெளிவந்திருக்கலாம்.   -தேவகாந்தன்) ‘புலம்பெயர்ந்த இலக்கியத்தில் பெரிதான வித்தியாசமில்லை’ தேவகாந்தன் நேர்காணல் நேர்கண்டவர்: ஆர்.டி. பாஸ்கர் (இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் வெகுவாக மாறுபட்டது. இலங்கையில் இனப் பிரச்னை கிளம்பியதில், அங்கிருந்து பெரும்பாலோர் புலம்பெயர்வதற்கு முன்பு தமிழக இலக்கியச் சூழல் வேறுமாதிரி இருந்தது.இன்று பல்வேறு நாடுகளில் இருந்த

சிலுவையில் தொங்கும் சாத்தான் -- மதிப்புரை

  சிலுவையில் தொங்கும் சாத்தான் (ஆப்பிரிக்கநாவல்,மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பு: அமரந்தா,சிங்கராயர் கடந்த ஒரு தசாப்த காலமாகத்தான் மூன்றாம்  உலக இலக்கியங்களின், குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியத்தின், வருகை தமிழில் தீவிரமாகியிருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியம் இருண்டகண்ட இலக்கியமாக இருந்த நிலைமை இனியில்லை. அதன் அறிமுக ஆரம்ப முயற்சிகளைச் செய்துவைத்தோரில் முதல் நினைப்புக்கு வருபவர் இந்திரன். அவரது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ (1982) அதன் உள்ளோடியிருந்த சில குறைபாடுகளோடும்கூட முக்கியமான மொழியாக்கமாய் இருந்தது. இந்த நிலையில் அண்மையில் மூன்று ஆப்பிரிக்க நாவல்களின் மொழியாக்கங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முதலாவதாக என்.கே.மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பிலான சின்னுவா ஆச்சிபியின் ‘சிதைவுகள்’(1998), இரண்டாவது எஸ்.பொ. மொழிபெயர்த்து வந்துள்ள செம்பென் ஒஸ்மானின் ‘ஹால’ (1999),  மூன்றாவதாக அமரந்தா-சிங்கராயர் மொழிபெயர்த்த கூகிவாதியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’(2000). மூன்று நாவல்களுமே வேறுவேறு ஆப்பிரிக் மொழிகளை மூலமொழிகாய்க் கொண்டவை. சிதைவுகள்  நைஜீரிய மொழியிலும்,  ஹால செனகல் மொழியிலும்

இசையில்லாத இலையில்லை -- மதிப்புரை

இசையில்லாத இலையில்லை (கவிதைத் தொகுப்பு) தேன்மொழி ஐந்து சஞ்சிகைகளில் வெளியான ஏழே கவிதைகளையும், பிற எழுபது கவிதைகளையும் உள்ளடக்கிக்கொண்டு எழுபத்தேழு கவிதைகளுடனான ஒரு தொகுப்பாய் வெளிவந்திருக்கிறது ‘இசையில்லாத இலையில்லை’ என்கிற இக் கவிதை நூல். இதன் உள்ளடக்கத்தை ஒரு பிரதேசத்தின் பதிவு என்று பொதுவில் கொள்ளலாம். அவரவர் மண்ணை, அவரவர் பயிரை, அவரவர் மனிதரைப் பதிவுசெய்கிற விசயம் நல்லது. ஆனால் பதிவுசெய்வதற்குக் கையாளப்படும் ஊடக விசயத்திலிருந்துதான் பிரச்னை துவங்குகிறது. இந் நூலும் பிரச்னையைத் சந்திக்கிற இடம் இதுதான்.  ஊடக விசயத்தை இந்நூல் அலட்சியப்படுத்திவிட்டமை துலக்கமாயே தெரிகிறது. அதேவேளை ஒரேயடியாய் அப்படிக் கூளிவிடவும் முடியாதுதான். பாதிக்குப் பாதிஅளவில் கவிதையாய்த் தேறுவனவும், நல்ல கவிதைகள் ஆவன சிலவும், சிறந்த கவிதைகளாவன ஓரிரண்டும்கூட இதில் உண்டு. இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவுதான், தன் முதல் நூலைஅவசர அவசரமாக வெளியிட்டிருக்கிற ஒரு கவிஞருக்கு. கவிதைபற்றிச் சொல்ல, வரையறைகள் செய்ய நிறைய விசயங்களுண்டு. அவை விவகாரத்துக்கும் உரியன. அவற்றைவிட்டு ஒட்டுமொத்தமாய் ஒரு விசயத்தைத் தெளிவாக இங்