Posts

Showing posts from March, 2022

வீரபாண்டியன் மனைவி

Image
  : வரலாற்று நாவல்களின் வரையறைகளை பெருமளவு உடைத்த தமிழின் முன்னுதாரணம்   1 ஆள்பவரையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும், உயர்குடிப் பிறந்தோரையும் கதாபாத்திரங்களாய் புனைவுப் பரப்பில் ஆரம்பத்தில் கொண்டுவந்த நாவல்கள், பொதுமனிதனைப் பேசுபொருளாய்க் கொள்வதற்கு நீண்டகாலம் சென்றது. விசேஷித்த குணவியல்புகளும், அதிமானுடத் திறமைகளும், வித்தியாசமான சம்பவங்களும் பேசப்படுவதிலிருந்து விலக அவை பஞ்சிப்பட்டிருந்தன. அந்த நிலையை உருவாக்குவதற்கு காலத்தோடு முரணிக்கொண்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நாவலாசிரியர்கள் எங்கும் எப்போதும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மறக்கப்பட முடியாதவர்கள். கல்விப் பரம்பலும், மத்தியதர சமூகமொன்றின் உருவாக்கமும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் பத்திரிகை சஞ்சிகைகளின் வளர்ச்சியை உந்தியபோது, எழுத்துற்பத்தி நாளடைவில் அவசியமாகிப் போனது. நடப்பிலிருந்த இலக்கியக் கோட்பாடுகளுக்குத் தக அரசர்களின் வரலாறுகளும், வரலாற்றின் மேலான புனைந்துருவாக்கங்களும், வரலாற்று மீளுருவாக்கங்களும் நிறைந்திருந்த சூழலுக்குள் புதிய இலக்கிய வகையினமான நாவலும் சிக்கிக்கொண்டது. எழுத்துருவ, மேடையாக்க நாடக