Posts

Showing posts from June, 2015

உண்மையைத் தேடுதல்….

உண்மையைத் தேடுதல்…. -தேவகாந்தன் உண்மையைத் தேடுதலென்பது அகம் சார்ந்த வி~யமாக காலகாலமாகப் பார்க்கப்பட்டு வந்ததென்பiதைத்தான், இதுவரையான மனித குல சிந்தனை வரலாறு தெரிவிக்கின்றது. அந்த உண்மையைக் கண்டடைவதற்கான ஞானம் தனிதனிதனின் இருப்பும், வாழ்வும், மறைவும், மறைவின் பின்னான வாழ்வுமென்ற தளங்களில் தேடப்பட்டதை மதம் சார்ந்த ஞானிகளில் வெளிப்பட்ட கருத்துக்கள் தெளிவாகக் சொல்லிநிற்கின்றன. சத்தியத்தைக் காண காந்தியடிகள் நடத்திய ஒரு பெரும்வாழ்வு சத்திய சோதனையாக அறியப்பட்டது. ஷஅஹம் பிரஹ்மாம் அஸ்மி’ என்ற வாக்கியத்தின் அடிச்சிந்தனையாய்த் தொடர்ந்த தேடல் அது. தனிமனித உண்மையன்றியும் ஒரு உண்மை இருப்பதனை கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ சமூக உண்மையாக முன்வைத்தது. சாதாரணன் இப்போது குழம்புகிறான், உண்மை என்பது எதுவென. உண்மை எப்போதும் ஒவ்வொருகாலத்தின் தேவைக்குமேற்ப கட்டமைக்கப்பட்டு வந்ததென்பதே சமூக விஞ்ஞானத்தின் அறிகை. நேற்றைய சமூகத்தின் உண்மையல்ல, இன்றைய சமூகத்தில் இருப்பது. வரலாறானது எவ்வாறு அதிகாரத்தினால் எழுதப்பட்டதோ, அதுபோல் அதிகாரத்தை விரும்பிய குழுக்கான உண்மைகளையே அவை கட்டமைத்தன. மதம் முடியைவிட அதிகார

ஏற்புரை…இலக்கியத் தோட்ட நாவல் விருது

இலக்கியத் தோட்ட நாவல் விருதுக்கான 3  நிமிட ஏற்புரை… -தேவகாந்தன்- வணக்கம்! கனவுச்சிறை நாவலுக்கு 2014ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்தமைக்காக  அவ்வமைப்பினைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், நடுவர்களுக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச அளவில் மிக முக்கியமான தமிழ் விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது ‘கனவுச் சிறை’ நாவலுக்கு கிடைத்தமைக்காக உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன். நாவல் கதைகொண்டிருக்கும் காலம் 1981 தொடங்கி 2001 வரையான இருபத்தோராண்டுகள். எனினும் அது விரிந்திருக்கும் வெளி இலங்கைச் சரித்திரத்திரத்தில் இருபத்தொரு நுர்ற்றாண்டுகள். அரசியல், மதம், கலையென அது விகாசம்கொண்டிருக்கும் தன்மை இதில் முக்கியமானது. நொடி என்று கால அளவையின் மிகச் சிறிய பகுதி தமிழில் குறிக்கப்படுகிறது. அதையும் உன்னல் கால், உறுத்தல் அரை, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்று என நான்காக வகுத்திருக்கிறது தொல்காப்பியம். ஆயிரம் பக்கங்கள்கொண்ட இந்த நாவலிலும், ஐந்து பாகங்கள், பதினொரு பகுதிகளென நுண்மையாக வகுக்கப்பெற்ற பல்வேறு பகுப்புக்கள். 1981, 1983, 1985 என இருபத்தோ

கலாபன் கதை 2-6

தேவதைகளின் கூண்டும் பிசாசுகளின் வெளியும் ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் ஆரம்பம் அது. தைப்பொங்கல் முடிய வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தவனுக்கு ஞானக்கோன் ஏஜன்ஸியில் கப்பல் பொறியியலாளனாய்ப் பதிய சிரமமிருந்தாலும், முடிந்திருந்தது. முன்புபோல் இந்தியா சென்று கப்பலெடுக்கிற எண்ணத்தை, முந்திய கப்பலைவிட்டு விலகி வீடு வரும்போதே அவன் திரஸ்காரம் செய்திருந்தான். வத்தளையில் அவனூர் நண்பர்கள் சிலர் வீடொன்று எடுத்து தங்கியிருந்தார்கள். அவர்கள் அதிகமும் அரச நிறுவனங்களிலும், சிலர் பெயர்பெற்ற தனியார் நிறுவனங்களிலும் வேலைசெய்தனர். அவர்களோடு பெரும்பாலும் தன்னால் ஒத்துப்போக முடியுமென்று நம்பியவன் அங்கேசென்று அவர்களோடு தங்கினான். வாடகை, சமையல் உட்பட்ட செலவுகளை ஏழாக பகிர்ந்துகொள்வது என்பது தீர்மானம். ஊர் நண்பர்கள் அதிமாய் இருந்தது ஒருவிதத்தில் கலாபனுக்கு அனுசரணையாக இருந்தது என்றே கூறவேண்டும். லேசாக குடிப்பதற்கு மட்டுமே அவனால் அங்கே முடிந்திருந்தது. வேறு தேடல்கள், ஒருமாதமாகிவிட்டிருந்த அளவில் முளைகொள்ளப் பார்த்தபோதும், நண்பர்களுக்காகவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அவன் காத்திருக்கவேண்டியத

(கி.பி.அரவிந்தன் நினைவுக் கட்டுரை)

கனவின் மீதியைக் கொண்டலைந்த பயணத்தின் முடிவு தொடர்ந்தேர்ச்சியான சில முக்கிய ஆளுமைகளின் மரணங்களை கடந்த சில காலமாக இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்துவருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 08, 2015இல் நிகழ்ந்த கி.பி.அரவிந்தனின் மரணமும் இதன் முக்கியமானதொரு இழப்பாகக் கருதப்பட முடியும். இழப்புகள் ஏற்படுத்தும் கனிவுகளில் இறந்தவர்களின் தகைமைகள் ஒளிவட்டங்களாய்க் கீறப்படும் சூழலில், கி.பி.அரவிந்தனின் மறைவு நியாயமான அதிர்வுகளைக்கூட இலங்கைத் தமிழ்ச் சமூகத்திடையே ஏற்படுத்தவில்லையென்பது ஆச்சரியமான விஷயமல்ல. 1970களில் தொடங்கி 2009இல் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற இலங்கையின் இனப் போராட்டம்பற்றி கி.பி.அரவிந்தனின் அவதானங்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் அச் சமூகத்தில் பரவசங்களை உருவாக்கக்கூடியவையாய் இருக்கவில்லையென்பது இதன் காரணமாய் இருக்கக்கூடும். அவர் வரலாற்றைக் கணிக்கும் நீரோட்டமாய் இருந்தாரென்பது, இனிமேலும் பரவசங்களை உருவாக்காமல் போக  வாய்ப்பிருக்குமென்றாலும், அவர்பற்றிய உண்;மை அதிலேதான் இருக்;கிறது. கி.பி.அரவிந்தனின் மரணம் எதிர்பார்த்திராத திடீர் மரணமல்ல. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்

கலாபன் கதை(2) 5

கொழும்புத் துறைமுகத்தில் சரிந்து நிமிர்ந்த கனவு -தேவகாந்தன்- சிங்கப்பூரை அடைந்த கப்பல் இரண்டு நாட்கள் தங்கிற்று துறைமுகத்தில். நாட்டை, குறைந்தபட்சம் நகரை, சுற்றிப்பார்க்க புதிய கடலோடிகளுக்கு குறைந்தபட்ச நேரம்கூடக் கிடைக்கவில்லை. அடையாளமாக ஒரு முன்தொகையாக இருபது வெள்ளிகள் ஆளுக்கு கிடைத்தன. அதைக்கொண்டு செய்துவிட சிங்கப்பூர்போன்ற நாட்டில் பெரிதாக எதுவுமில்லை. கலாபனின் கணக்குப்படி அது அவனது ஆறாவது சிங்கப்பூர் வருகை. தவனங்கள் பெரும்பாலும் அடங்கியிருக்கச் சம்மதித்தன. மூன்றாம் நாள் அதிகாலையில் என்ஜின் புறப்பட தயார்நிலையில் வைக்கப்பட்டது. எட்டு மணியளவில் அது எடுத்துவந்து கல்லணை வாயில் கடந்து கடலில் விடப்பட்டது. அவ்வளவு மர்மமான ஒரு பயணத்தை கலாபன் அத்தனை வரு~ கால அனுபவத்தில் எதிர்கொண்டதில்லை. கப்பல் எங்கே போகிறது? அதனுடைய அடுத்த துறைமுகம் எது? ஆசியாவா, ஐரோப்பாவா, ஆபிரிக்காவா, அமெரிக்காவா? பூடகத்துள் பயணம் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில் ஒருநாள் எதிர்ப்பட்ட றேடியோ அலுவலரை கலாபன் அடுத்த துறைமுகம் எது என விசாரித்தான். அம்மாதிரி வி~யங்கள் வெளியே தெரியவேண்டாமென சிலவேளைகளில் றேடியோ அலுவலர்களிட