அதை அதுவாக 22
உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 22 ‘அறிய அறிய அறியாமையே மிகுகிறது. அனுபவிக்க அனுபவிக்க காமமே வெகுக்கிறது.’ - தேவகாந்தன் - (52) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். (காமம், கனவு, குறிப்பறிதல் 5) குறள் 1095 குறிப்புப் புலப்படும்படி பார்க்க மட்டுமில்லை, திட்டமாய் அர்த்தம் தெரியும்படி அவள் கண்ணைச் சுழற்றிக் கொண்டு அமுக்கச் சிரிப்பும் செய்கிறாள். தமிழ் இலக்கியத்திலுள்ள களவியல் வாசிப்பு அற்புதமான சுகம் தருவது. அதன் முழு சாரத்தையும் பெரும்பாலும் திருக்குறளிலே காணமுடியும். மிகவும் திட்ப நுட்பமாக அதில் காதலுணர்வுகள், செய்கைகள், அசைவுகளெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கவியின் அனுபவ சாரலில் நனைகிற பேரின்பம் நவீன வாசகனையும் அதிசயப்பட வைக்கும். கூட்டத்தில் தோழியரோடு நிற்கிறாள் அந்தப் பெண். சிரித்துப் பேசி ஏகாங்கியராய் அவர்கள். தூரத்தில் தன் தோழரோடு அவன். அவனை அவள் அறிவாள். அவனது அவாவும் அறிந்தவள்தான். ஆனாலும் போய்ப் பேசிவிட முடியுமா? ஊர், உறவுகள் என்ன சொல்லும்? நாணம்தான் விட்டுவிடுமா? அவனோ அவள் சம்மதம் இல்லாவிட்டால் உயிர் தரிக்கல...