Posts

Showing posts from November, 2026

அகம் தோய்தல் 6

                                                                                                      கனவுகளும்   மாறிய நிஜங்களும் கிராமச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு, பள்ளிக்கூட வசதிகள் ஏற்பட்டு அவர்களது குழந்தைகள் படிக்க நேரிட்ட காலத்திலும், அவர்கள் டொக்டராகவோ என்ஜினியராகவோ எக்கவுண்டனாகவோ வரவேண்டுமென்ற ஆசைகள் பெற்றோரிடம் பிறப்பதில்லை. குறைந்தபட்சம் கச்சேரியில் ஒரு எழுதுவினைஞர் வேலையோ, பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் ஒரு உபாத்தியார் வேலையோதான் கனவாக வரும். பெண்கள் மேலாக அதுகூட ஏற்படுவதில்லையென்றுதான் நினைக்கிறேன். எழுதவும், கூட்டிக் கழித்துப் பார்க்க ஏதோ கொஞ்சம் கணக்கும் படித்திருந்தால் போதுமென்பதுதான் கிராமத்தில் கல்வியால் எதிர்பார்க்கப்பட்டதின் உச்சபட்ச எல்லை. அந்த எல்லைகள் அ...