நேர்காணல்: தேவகாந்தன்- முதலாம் பகுதி
நேர்காணல் : தேவகாந்தன் சந்திப்பு : வ . ந . கிரிதரன் ( பதிவுகள் இணையதளத்துக்காக ) அதை ஒரு அரசியல் சித்தாந்தமாக மட்டும்தான் நான் பார்த்திருந்தேன் 1. பதிவுகள் : வணக்கம், தேவகாந்தன் . அண்மையில்தான் நீங்கள் உங்களது நீண்ட பயணத்திலிருந்து திரும்பியிருக்கின்றீர்கள் . இந்தியா , இலங்கை , இங்கிலாந்து என்று உங்களது இலக்கியப் பயணம் இனிதே முடிந்து திரும்பியிருக்கின்றீகள் . மேற்படி நாடுகளில் உங்களது ' கனவுச்சிறை ' நாவலுக்கான வெளியீட்டு நிகழ்வுகள் , விமர்சனக் கூட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன . ' கனவுச்சிறை ' நாவல் சிறப்பான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிகின்றோம் . உங்களது வெற்றிகரமான இந்த இலக்கியப்பயணத்தைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள் ? ' பதிவுகள் ' வாசகர்களுடன் அவற்றைச்சிறிது பகிர்ந்து கொள்ள முடியுமா ? தேவகாந்தன் : வணக்கம், கிரி. ஏறக்குறைய அய்ந்தரை மாதங்களாக நீடித்திருந்த இந்தப் பயணத்தின் நோக்கமே அதுவாக இருக்கவில்லை . குடும்ப காரணம் முதன்மையாக இருந்தது. அ...