Posts

Showing posts with the label நேர்காணல்

இலக்கியச் சந்திப்பு: 2

      இலக்கியச் சந்திப்பு :       இலங்கை எழுத்தாளர் செங்கை ஆழியான்   (இலங்கையின் நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான செங்கை ஆழியான் (கந்தையா குணராசா) நாற்பது வரையான நூல்களின் ஆசிரியர். அவற்றில் முப்பத்தைந்து நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு ஆய்வு சம்பந்தமான சரித்திர நூல்கள். தேசிய அளவிலும் சாஹித்ய மண்டல பரிசினை எட்டு தடவைகள் பெற்றிருக்கிறார். இவரது‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாக வந்தது. ‘மரணங்கள் மலிந்த பூமி’ நாவலுக்குக் கிடைத்த பரிசினை ஏற்கும்பொருட்டு தமிழகம் வந்த இவரை சென்னையில் சந்திக்க முடிந்தது. யுத்தத்தை, மனிதாயத சிதைவை வெறுக்கும் இந்தப் படைப்பாளி ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடனான சந்திப்பிலிருந்து..) சந்திப்பு: தேவகாந்தன் தேவகாந்தன் :அண்மைக் காலத்தில் தீவிரமாக நடந்த யுத்தங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கிறது? செங்கைஆழியான் : அழிவுதான். யாழ்ப்பாணம் மரங்களற்ற வெறுமையும், இடிந்த கட்டிட சிதிலங்களும், நிறைந்த மரணங்களுமாய் இருக்கிறது. முந்திய பதினேழு ஆண்டுக் காலத்தில் ஏற்படாத அழிவு, கடந்...

இலக்கியச் சந்திப்பு:1

இலக்கியச் சந்திப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தமிழ்த் துறை, யாழ். பல்கலைக் கழகம் சந்திப்பு: தேவகாந்தன் (இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் 1942இல் பிறந்த பேராசிரியர் நா.சுப்பிரமணியன் பல்கலைக் கழக கற்பித்தல் துறையில் சுமார் முப்பதாண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். தற்பொழுது யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருக்கிறார். ‘இந்தியச் சிந்தனை மரபு’ என்கிற புகழ்மிக்க தமிழ்நூலின் இணை ஆசிரியர்களில் ஒருவர். அண்மையில் சென்னை வந்திருந்த சமயத்தில் இவ்விலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது.) தேவகாந்தன்: சுமார் இருபதாண்டுக் கால யுத்த நிகழ்களமான இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில், இலக்கிய வாசிப்பின் நிலைமை எவ்வாறு இருக்கிறது? நா.சுப்பிரமணியன்: இந்தக் கேள்விக்கு, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை என்னால் துல்லியமான பதில் சொல்ல ஏலும். ஏனென்றால், யாழ்ப்பாணத்துச் சூழலோடு இக் காலகட்டத்தில் நான் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். இலக்கியமும், இலக்கியம் சம்பந்தப்பட்டதுமான வாசிப்பும் இக்காலத்தில் தக்க வளர்ச்சி பெற்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். பல்கலைக் கழகமும், இன்னும் ...