Posts

Showing posts from December, 2010

காவல் கோட்டம்:

காவல் கோட்டம்: மறைக்கப்பட்ட வரலாற்றை கண்டடைய முனைந்த நாவல் 1 ‘காவல் கோட்ட’த்தின் மீதான சார்பு, எதிர் விமர்சனங்கள் வீச்சாக எழுந்துகொண்டிருந்த காலத்தில் நூல் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் வாசிப்பை அவ் விமர்சன வீச்சுக்கள் தள்ளிப்போட வைத்துவிட, மனம் தடுதாளியில்லாத ஒரு சமநிலைக்கு வர நான் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வந்தும், 2008 டிசம்பரில் வெளிவந்த சு.வெங்கடேசனின் 1048 பக்க இந் நாவலை வாசிக்க ஓர் ஆலைத் தொழிலாளியாக இருக்கும் எனக்கு மூன்று மாதங்கள் பிடித்தன. வாசிப்பு மிக மெதுவாகவே சாத்தியமாகியிருந்தது. ஆயினும் வாசிப்பைக் கைவிடுகிற அளவுக்கும் அது சுவாரஸ்யமற்று இருக்கவில்லை. மேலே செல்லச் செல்ல நாவல் அதன் கட்டுமானத்திலும், வெளிப்பாட்டு முறையிலும் ஏறிய உச்சம் ஒரு பரவச நிலைக்கே என்னை நகர்த்தியது என்று சொல்லவேண்டும். என் நண்பர்களிடம் நாவல்பற்றி நான் நிறையக் கூறியிருந்தேன். ஆனால் நாவல்பற்றிய என் அபிப்பிராயத்தை எழுத்தாக்க எண்ணியவேளை, அதுபற்றிய குறிப்புக்களை வாசிப்பின்போது நான் எடுக்கத் தவறி விட்டிருந்தமை தடையாகப் போயிற்று. அவ்வாறு எழுதுவதற்காக நாவலின் வாசிப்பை மீண்டுமொரு முறை

தேவகாந்தன் பக்கம் 2

தற்பாலியர் கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், தன்பால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களான விபசாரர்கள், குற்றவாளிகள், தன்பால் புணர்ச்சியாளர், அரவாணிகள் மீதான விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருக்கிறது. அதனால் கூட்டத்துக்குச் செல்லமுடியாது போனமை எனக்கு வருத்தமே. கூட்டங்கள்பற்றிய அறிவிப்புகள் தெரிந்ததுமே, அந்தப் பொருளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்ததில், ‘தற்பாலியர்’பற்றிய விவகாரத்தையே மார்கழி மாத ‘தாய்வீ’ட்டுக்கு எழுவதற்கான விஷயமாக எடுத்துக்கொள்வதென்று எனக்குத் தீர்மானமாகியிருந்தது. நான் எழுதக்கூடிய விஷயம் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதுவிதத்திலாவது முரணாகிவிடுமோ என ஆரம்பத்தில் எனக்கு எழுதத் தயக்கம். இது கருத்து மாறுபாட

தேவகாந்தன் பக்கம் 1

‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’ வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன. சென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன. தமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு. ஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன. இன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன். விலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண், அவர்கள் குறித்து நான் கௌரவமாக எழ