மதிப்புரை: ஈழத்துக் கவிதைக் கனிகள்
ஈழத்துக் கவிதைக் கனிகள் -சிலோன் விஜயேந்திரன் தற்கால தமிழிலக்கிய வளர்ச்சியில் சிங்கப்பூர், மலேஷியா போன்று ஈழத்தின் பங்கும் கணிசமானதாகும். தமிழிலக்கியத்தின் வேறெந்தத் துறையையும்விட கவிதைத் துறையில் அதன் பங்கு பெரியது. இதை எளிதில் இனங்காணப் பேருதவி செய்யும்வகையில், சுமார் அரை நூற்றாண்டுக் கவிதைகளில் எண்பத்திரண்டு கவிஞர்களின் நூற்று இருபத்தேழு கவிதைகளை இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் டாக்டர் சிலோன் விஜயேந்திரன். இதுமாதிரி அரசியல் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் அரை நூற்றாண்டு ஈழத்துக் கவிதைகளைத் தொகுப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அதையும் தனியொரு மனிதனாகவே முன்னின்று தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஈழத்துக் கவிதைகளில் சிறிதேனும் பரிச்சயம் இருப்பவர்களுக்கு, இத் தொகுப்பு நூல் மிகவும் அவதானத்துடன், பக்கம் சாரா மனநிலையுடன் தொகுத்திருப்பது தெளிவாகும். தொகுப்பாசிரியர் தன் முழு முனைப்பையும், இதய சுத்தியான முழு ஆர்வத்தையும் இந்நூலில் காட்டியிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ரசிகமணி கனக-செந்திநாதனின் ‘ஈழத்துக் கவிமலர்கள்’ போன்று, வேறு சில தொகுப்பு நூல்கள் அவ்வப்போது வெளிவந்திருக்கின்ற...