Posts

Showing posts with the label Mathyputai 4

தீனிப் போர் (நாடகப்பிரதி)

 தீனிப் போர் (நாடகப்பிரதி)  இளையபத்மநாதன் ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இப்பொழுது அக்கறையாகப் பேசப்படும் துறைகள் இரண்டு. ஒன்று ,நவீன நாடகங்கள். இரண்டு, புலம்பெயர் சினிமா. சமகால கலைச் சினிமா வரலாற்றில் பாரிய தாக்கங்களை புலம்பெயர் சினிமா ஏற்படுத்துமென்று பலமாக நம்பக்கூடியவகையில் புதிதுபுதிதாக ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். காட்சி, மொழி, இசையென்று இரண்டுக்குமே பொதுமையான அம்சங்கள் உள்ளபோதும், இவை வேறுவேறான கலைக் கட்டுமானமுடையவை. அரங்கில் நாடகத்தை முழுக் காட்சிப் படிமமாகத்தான் பார்வையாளனுக்குத் தரமுடியும். சினிமாவிலோ குளோஸ்-அப் முறையில் கவனத்தைக் குவிப்பிக்க வழி இருக்கிறது. ஆனாலும் வேறு உத்திகளில் கவனம் குவிக்கப்படவேண்டிய பகுதிகளில் கவனத்தைக் குவிக்கச் செய்ய நாடகத்தினாலும் முடியும். பொதுஅம்சங்களோடு இவை நவீனத்தை நோக்கி நகர்கின்றன. அது மகிழ்சியாகவிருக்கிறது. இவ்வாறான தமிழ்க் கலைகளின் வளர்நிலைக் காலகட்டத்தில் நம் மரபு சார்ந்த கலைக்கூறுகள் மகாகவனிப்புப் பெற்றுவருகின்றன. அவை வீர்யமுடன் காப்பாற்றப்படவேண்டியவை ஆகும். இதற்கு அழுத்தம் கொடுக்கவே...