Posts

Showing posts with the label உரைக்கட்டு

இமையத்தின் படைப்புகள் குறித்து...

Image
விளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து... புனைவுசார்ந்த எழுத்துக்களில் நாவல், குறுநாவல், நெடுங்கதை, சிறுகதை ஆகிய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால பகுப்புகள் இன்று அவ்வளவு வீச்சான ப ரிசோதனையில் இல்லை. நாவல், சிறுகதை என்கிற இரண்டு கூறுகளில்   இன்றைய வாசிப்பின் தளம் இவற்றை பொதுவாக உள்ளடக்கிவிடுகிறது. ஆக, ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை விமர்சிக்க வரும் இன்றைய ஒரு விமர்சகனுக்கு நிச்சயமாக இவற்றின் பகுப்புபற்றி ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இமையத்தின் படைப்புகள்பற்றிய ஒரு அறிமுக வியாசம்கூட   இச் சிக்கலை எதிர்கொண்டே தீரும். பதிப்பக பகுப்புகளின் ஊடாகவன்றி தனியான ஒரு பகுப்பில் தன் பயணத்தை   மேற்கொள்வது இந்தவகையில்   சிரமமாகுமென்ற புரிதலுடன்தான் இவ்வாண்டு (2019) கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் இமையத்தின் படைப்புகள்பற்றி ஒரு அறிமுக வியாசத்தை இங்கு பதிவாக்க    முனைகிறேன். இமையத்தின் கோவேறு கழுதைகள் ( நாவல்-1994)...

'தென்னாசியக் கவிதைகள்' குறித்து…

Image
'மொழிபெயர்ப்பெனத் தெரியாதபடி கவிதைகளுள் ஆழ வாசகனால் முடிந்திருந்தது'. 'தென்னாசியக் கவிதைகள்' குறித்து… கவிஞர் சோ.பத்மநாதனின் தொகுப்பிலும் மொழிபெயர்ப்பிலும் வெளிவந்துள்ள 'தென்னாசியக் கவிதைகள்' என்ற இந்த நூலே அகண்ட பிராந்தியம் சம்பந்தமாக வெளிவந்த முதல் தமிழ் நூலாக இருக்கமுடியுமெனத் தோன்றுகிறது. அந்த வகையில் இதுபற்றி சரியான ஒரு மதிப்பீட்டைக் கொள்ளுதல் தொடர்ந்தேர்ச்சியான இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒழுங்கமைந்த வழிகாட்டியாக இருக்கமுடியும்.       SAARC என சுருக்கமாக அழைக்கப்படும் South Asian Association for Regional Cooporation என்ற இந்த அமைப்பு 1985ஆம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பூட்டான், நேப்பாளம், மாலைதீவுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைமையகம் நேப்பாளின் காத்மண்டுவில் இருக்கிறது. வர்த்தகத்துக்கான முன்னுரிமைகளைக் கருத்தில்கொண்ட அமைப்பாகத்  தொடங்கப்பட்டாலும், அதற்கும் மேலான இணக்கப்பாடுகளை இலக்கியமூடாக உள்வாங்கும்படியாக ஆரம்ப காலம்தொட்டே இதன் நடைமுறைகள் இருந்துவருகின்றன. ...

கனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…

பிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்கிறது. தான் அலைவுற்ற வழிநெடுகிலும் கண்ட துன்ப துயரங்களின் வடிகாலாக அது எழுத்தையே கதியென நினைக்கிறது. பிறந்த நாட்டில் இனவழிப்பு மூர்க்கமாகச் செயற்படுத்தப்படும்போது உயிரபயம் கேட்டுவரும் அச் சமூகம், குடிபுகுந்த மண்ணில் தம் வாழ்விருப்பை உறுதிப்படுத்தும் அவசியம் நேர்கிறபோது அது தனக்கான ஒரு அரசியலையும், அதற்கான கருத்துநிலைகளையும், சமூக கட்டமைப்புக்கான வழிமுறைகளையும் எழுத்தின்மூலமே வகுத்துக்கொள்வதுதான் காலகாலமாக புலம்பெயர் சமூகங்களின் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. அது தன்னை உரசிப் பார்க்க ஒரு தளம் வேண்டியிருக்கிறது. அது எழுத்தூடகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளாக இருக்கிறது. அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் தம்மிருப்பை எழுத்தூடகமான பத்திரிகை சஞ்சிகைகளில் அது பயில்வு செய்யும்போது, பத்திரிகை சஞ்சிகைகளுக்கு  சொந்த மண்ணிலிருந்த பொறுப்பையும் தேவையையும்விட மிகக்கூடுதலான பங்காற்றுவது தவிர்க்கமுடியாதது. இலங்கைத் தமிழ் மக்களின் புலப்பெயர்வு 1983இன்...

புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்:

  புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு (இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன்.) பகுதி ஒன்று புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் , சிங்கள , ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும் , ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ் , சிங்கள , முஸ்லிம் , மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.          புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு   நிச்சயமாக தவிர்க்...