Posts

Showing posts from April, 2021

‘நீர்வழிப்படூஉம்’ நாவல்

Image
  தேவிபாரதியின் நிலமொழியில் இயன்ற ‘நீர்வழிப்படூஉம்’ நாவல்   ‘தனிமையின் நிழல்’, ‘நட்ராஜ் மகராஜ்’ ஆகிய நாவல்களுக்குப் பிறகு மூன்றாவதாக வெளிவந்திருக்கிற தேவிபாரதியின்    அளபெடைத் தலைப்புக்கொண்ட நாவல் ‘நீர்வழிப்படூஉம்’. நாவலின் மதிப்பீட்டைச் செய்வதற்கு முன்பாக ‘நீர்வழிப்படூஉம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்துகொள்வது அதன் புரிதலை இலகுவாக்கும்படிக்கான ஒரு ஊடுவழியினைத் திறந்துவிடுமென நம்பலாம். ஏனெனில் முதன்மையாய் ஒரு கதையைச் சொல்கிற நாவலாகவன்றி, உறவு மனங்களின் இறுகும் கனிவுகொள்ளும் தன்மையின் மூலத்தைப் பேசவந்த நாவலாக இது இருப்பதில், தலைப்பின் பொருளை ஒரு மர்மம்போல் இறுதிவரை காப்பாற்றிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமில்லை.   கார்ட்டுகளெல்லாம் விரித்துப்போட்டு விளையாடும் ஒரு விளையாட்டாக இதை மாற்றிக்கொள்ளலாம். பள்ளம் கண்ட இடமெல்லாம் பாய்ந்தோடும் இயல்பு நீருக்குண்டு. நீர்வழிப்படூஉம் என்பது, நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பதுமாகும். மனிதர்கள் நீர்வழிப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். மனித இயல்பு அதுதான். இந் நாவலில் வரும் மனிதர்களும் தத்தம் பூர்வீக ஊர்களிலிருந்து வாழ்வின் நிமித்தம் ஓடிக