Posts

Showing posts from May, 2022

சாம்பரில் திரண்ட சொற்கள் (நாவல்)

Image
  1 சோபாவில்   இருந்தபடி கண்ணயர்ந்துபோன நடனசுந்தரம், ஒருபொழுதில் தன் அயர்வு தெறித்து விழித்தபோது, கூடம் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டார். நேரம்பார்க்க, பழக்கத்தில் முன் சுவர்ப்புறம் நிமிர்ந்தபோது இருளின் குறைந்த அந்த வெளிச்சத்திலும், வெள்ளையில் கறுப்புக் கம்பிகளைக் கொண்டிருந்த சுவர்க் கடிகாரம் 01.16ஐக் காட்டியபடியிருப்பது அவதானமாகியது. 01.16? அவர் அந்தப் பொழுதறியா மயக்கத்துக்கு ஒரு கணம் வசமாகிப்போனார். கடந்த சில நாட்களாகவே அது அவ்வாறுதான் நின்றுகொண்டிருக்கிறது என்பதையுணர விநாடிகள் பிடித்தன. கடிகாரத்தைப் பார்க்கும்போது AA சைஸ் பற்றறிகள் இரண்டு வாங்கவேண்டுமென்றெழும் நினைவு, கடையில் நிற்கிற சமயங்களில் எப்படியோ மறந்துவிடுகிறது. தனிமனிதராக எவ்வளவற்றையென்று அவர் செய்துவிடுவது?   அதுவும் இந்த வயதில்? சிவயோகமலர், அவளின் அப்போதைய நிலையில் எதிலும் கணக்கில்லை. நிழற்சாலைபோல் இருமருங்கிலும் வரிசைபட்டு நின்ற வீதி மரங்களில் நானாவித பறவைக் கூட்டங்களின் கலகல… சடசடப்புகள் இன்னும் ஓய்ந்து போகாததில் நேரம் அப்போது ஏழு மணிக்கு மேல் இருக்காதென்று கணிக்க அவரால் முடிந்தது.   ஆயினும் கடிகார முள