Posts

Showing posts with the label சினிமா vimarsanam

தேவதைக் கதைபோல

இந்தியக் களத்தில் ஒரு சினிமா: ஸ்லம்டோக் மில்லியனெர் (Slumdog Millionaire) குறித்து…  கடந்த ஓரிரு மாதங்களாகவே ‘ஸ்லம்டோக் மில்லியனர்’ சினிமாபற்றி பத்திரிகை, சஞ்சிகை, இணைய தளங்கள் மூலமாக சிற்சில கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருந்தும், சினிமாவைப் பார்க்கும்வரை எந்தவோர் அபிப்பிராயத்தையும் கொள்வதில்லையென்று பிடிவாதத்தோடிருந்தேன். எல்லா நல்ல சினிமாக்கள் குறித்தும் இதுவே என் வழிமுறையாக இருப்பினும், இந்தச் சினிமாவைப் பார்ப்பதற்கான ஆவல் ஓர் அவதியாக என் மனத்தில் அலைந்துகொண்டிருந்தது. ஆனாலும் ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நல்ல பிரதியொன்று கிடைத்து இதைப் பார்க்க முடிந்திருந்தது. இது என்னுள் எழுப்பிய கேள்விகள், உணர்வுகளையே தாய்வீடு வாசகர்களோடு இங்கு பகிரந்துகொள்ளப் போகின்றேன். ஒரு சிறந்த சினிமாவைப் பார்த்த முழு அனுபவமாய் அது இருந்தது. ஆனாலும் சினிமா முடிந்த பின்னர் மனத்தில் அடங்க மறுத்து அலையலையாய் எழுந்த உணர்வுகள், இன்னும் உள்ளத்தில் கிளர்ந்து மனத்தை பரவசநிலையடைய வைத்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் நல்ல சினிமா குறித்து உரையாடுவதற்கு அரிதாகவேனும் சில நல்ல படைப்பார்த்தமான...

கனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்னடைவுகளும்

பரந்தவெளித் தேசமான கனடாவில் தமிழ்ப் பட உலகத்துக்கான வெளி மிக விசாலமானது. ஒரு நிலைமாற்றுக் கால தமிழ்த் தலைமுறையினரின் சமூக, பொருளாதார, உளவியல் நிலைப்பாட்டுத் தளங்களிலிருந்து பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட முடியும். அதன் புலப்பெயர்வும், மண்ணின் ஞாபகங்களும், மனவடுக்களும், உறவுகளின் தொடர்பாடலும், அவர்களது துன்ப துயரங்களும் பல பெருங்கதையாடல்களுக்கான ஊற்றுக்களைக் கொண்டவை. ஆனால் அது ஒரு வரட்சியில் கிடப்பதே காணக்கூடியதாக உள்ளது. இதன் முக்கிய காரணிகளை மேலெழுந்தவாரியாகவேனும் அலசுவதே இக் கட்டுரையின் நோக்கம். அரங்க ஆட்டத்திலிருந்து ஒரு பாய்ச்சலாக சினிமா உருவெடுத்து வந்திருப்பினும், அதன் பல கூறுகளைச் சினிமாக் கலை நிராகரித்துவிட்டே தன் பாதையில் தொடர்ந்திருக்கிறது. 1885இல் பிரான்ஸிலும், ஜேர்மனியிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சினிமாவுக்கான கமெரா, புரொஜெக்டர் ஆகிய உபகரணங்கள் இருபதாம் நூற்றாண்டுக்கான பாய்ச்சலைத் தொடங்க அன்றே வழியைத் திறந்துவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் தமிழில் விரிந்தெழுந்ததுதான் திரைப்படத் துறை. அது இந்தியச் சினிமாவாக ம...

சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம்

சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம் கடந்த இரண்டாயிரமாண்டுச் சரித்திரம் பல்வேறு புதைபொருள் ஆய்வுகள், மற்றும் நவீன அறிவியல் ரீதியிலான அறிமுறைகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து எமக்கு இக்காலகட்டத்திய அண்ணளவான வரலாறு கிடைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இதன் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கு உரியதாயினும், சொல்லப்பட்ட அந்த வரலாற்றினடியாகவே இச் சந்தேகங்கள் தோற்றமெடுக்கின்றன என்பதும் கவனம் கொள்ளப்படவேண்டும். உண்மையின் தவிர்க்கவியலா அழுத்தம் காரணமாய் இவ்வரலாறுகள் மாற்றியெழுதப்பட்டும் வருகின்றன. இல்லையெனில் மாற்றுவரலாறாய் விஸ்வரூபமெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரலாறு முழுக்க அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிற நன்மைகளும், நல்லவர்களும் அழிக்கப்பட்ட சோகங்கள்தான் விரவிக்கிடக்கின்றன. வரலாறு அறிந்துள்ள முதல் புரட்சியாளன் யேசுநாதர்தான். அந்த மரிப்பு – கொலைப்பாடு – தாங்கொணாத் துக்கம். கொடுமையின் உச்சம். அதைச் சினிமா மொழியில் வெளிக்கொண்டுவந்தது ‘THE PASSION OF CHRIST’. மனித இனம் இன்றும் யேசுநாதர் சிலுவையையே கடவுளாய் வணங்கி ஆன்ம வேதனை தணிகிறது. அன்றைய கத்தோலிக்க மதத்துக்க...

சமூகமும் கலையும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கட்டுரைக்கான எதிர்வினை -தேவகாந்தன் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின்  கட்டுரையானபடியாலேயே சிவாஜி படம் குறித்த வைகறையில்  வெளிவந்த  மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு இந்த எதிர்வினையை எழுதவேண்டி நேர்ந்தது. நான் சிவாஜி படம் இதுவரை பாரக்கவில்லை. தமிழ்ப்படங்களை திரையரங்கு சென்று பார்த்து வெகுகாலம். பார்த்த சிலவும் புலம்பெயர்ந்தவர் படங்களே. சிவாஜி படத்தைப் பார்க்காமலேகூட பாண்டியனின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினையை எவராலும் ஆற்றிவிட முடியும். ஏனெனில் அது சமூகமும் சினிமாவும் என்ற தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கட்டுரை. சிவாஜி படம் பார்த்ததில் மிகவும் பரவசப்பட்டுப்போய் பாண்டியன் எழுதியிருக்கிற கட்டுரை அது. ஏதோ, ரஜினி கோயில் வீதியில் அல்லது தெருவில் கூத்தோ தெருநாடகமோ போட்டமாதிரியும், அதை மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ரசித்த மாதிரியும் அளந்துகொட்டியிருக்கிறார். சொல்லப்போனால் அதை ஷங்கர் படம் என்றுகூடச் சொல்லலாம். இன்னும் ஏவிஎம்’மின் படம் என்று சொன்னாலும் தகும். இதற்கெல்லாம் ஒரு எதிர்வினையை ஆற்றவேண்டியது துரதிர்ஷ்டமேயானாலும், இதுமாதிரிக் கட்டுரைகளும், இதுமாதிரி மொ...

மறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும் வெளியாகும் விவகாரங்களும் மீதான

சுயாதீன கலைப் பட இயக்கத்தினரின் ஐந்தாவது தமிழ்க் குறுந்திரைப்பட விழா அண்மையில் கனடா, ரொறன்ரோ ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. பதினாறு படங்கள் திரையிடப்பட்டன. நெறியாளர்கள் சந்திப்பு உட்பட சுமார் எட்டு மணி நேரமும், பின்னால் பரிசு அறிவிப்புக்கள், பரிசளித்தல்கள், உரை நிகழ்வுகளென்று சுமார் இரண்டு மணி நேரமுமாக ஒரு நீண்ட வெளியில் நடந்து குறுந்திரைப்பட விழா முடிந்துள்ளது. நல்லது. பத்து மணிநேர அவ் விழாவில் பார்வையாளன் பெற்றதென்ன? இக் கேள்வி மிக முக்கியமானது. ஏனெனில் இது விழா அமைப்பாளர்களின் செயற்பாட்டுத் திறன் முந்திய போதுகளைவிட பெருகியிருந்தும் பார்வையாளன் பலனற்றுப் போனான் என்பது சிந்திக்கவேண்டிய விஷயம். கனடாவிலிருந்து அதிகமான குறுந்திரைப்படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. போட்டிக்காகத் தயாரிக்கப்பெற்று அவசர அவசரமாக கொட்டுண்ட குறும்படங்கள் அவையென்பது கடந்த சில விழாக்களையேனும் உன்னிப்பாய்க் கவனித்திருபோருக்குப் புலப்பட்டிருக்க முடியும். கமரா தொழில்நுட்பம் தவிர்ந்து வேறெந்த துறையிலும் ஒரு முன்னேற்றத்தையும் பார்வையாளன் கண்டிருக்க வாய்ப்பில்லை. என்னளவில் சென்ற ஆண்டைவிட தரம்குறைந்த படங்...

‘துயருறுத்தற் பொருட்டன்று…’

ஆறாவது சர்வதேச குறுந் திரைப்பட விழா 2007, ரொறன்ரோ -தேவகாந்தன் கடந்த ஐப்பசி மாதம் 20 ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது, ரொறன்ரோ 6வது சர்வதேச குறுந் திரைப்பட விழா. ‘எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்’ என்ற கோஷத்தோடு கடந்த ஆறு ஆண்டுகளாய் விடாமுயற்சியோடு செயலாற்றி வரும் சுயாதீன கலைப்பட இயக்கத்தினருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்கொள்ள வேண்டும். இனியும் அவர்களது முயற்சி தொடர வாழ்த்துக்களோடு குறுந்திரைப்பட விழாவில் திரையிடப்பெற்ற படங்களின் தாரதம்மியத்தைப் பார்க்க இனி முற்படுகின்றேன். குடைஅ Cinema என்ற ஆங்கில வார்த்தைக்கான பதமாக திரைப்படம் என்ற சொல் தமிழில் வழக்கத்தில் இருக்கின்றது. அதேவேளை சினிமா என்ற சொல்லும் புழக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் போலத்தான். காமம் என்ற சொல் அதீத சுகவிழைச்சலை மய்யப்படுத்தும் அர்த்தவாக்கம் வழக்கத்தில் இருந்தாலும், ‘மலரினும் மெல்லிது காமம்’ என்ற குறளடியில் வரும் சொல்லுக்கான அர்த்தத்தை உன்னதமாகக் கொள்ளும் புரிதலும் நம்மிடம் உண்டு. இந்த இரண்டு காமங்களையும் யாரும் குழப்பிக்கொள்வதில்லை. இந்த அறிதல் திரைப்படத்தையும், சினிமாவையும் புரிந்துகொள்ள மிக்க அவசி...