Posts

Showing posts from June, 2008

என் நினைவில் சுஜாதா

என் நினைவில் சுஜாதா ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை. சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது. சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவ

இயல் விருது

இயல் விருது 1. எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்ளூர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தெள்ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது. புலிச்சர் (Pulitzer ), புக்கர், க்ரொஸ் வேர்ட் என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(Gilles- Corbei) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

கொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன். புதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அப்போது தோன்றிற்று. உலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெள

இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......

இம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள்  கொழும்பிலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள். முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன, சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகொண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே 'ஓம் நமசிவாய' என்ற  ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று. மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவித்துக்கொண்ட

இரண்டாம் புலப் பெயர்ச்சி

மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது. யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான். இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன? ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன்? என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும். எவ்வளவு இலக்கிய நண்பர்கள்! எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள்! எவ்வளவு வாசகர்கள்! தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை. பின்னர் மெல்ல வலி ச

நிமிர்ந்தே திரிந்தவர்

சென்ற மாதம் சு.சமுத்திரமவர்கள் ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தி எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஓர் இழப்பின் பாரிய தாக்கம். 'கடிதோச்சி மெல்ல எறி'கிற நண்பராக இருந்தார் அவர். அவர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடனான என் அறிமுகம் ஒரு கலகத்திலேதான் ஆரம்பித்தது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வைரவிழா நிகழ்வில் அவரது நாவல்கள் பற்றி மதிப்பிட்டு கட்டுரை வாசித்த நான் , இடதுசாரி எழுத்தாளர்களின் நூல்களை என் தேர்வில் சேர்த்துக்கொள்ளவில்லையென ஓங்கிக் குரலெடுத்தார் அவர். சேர்ப்பதும் சேர்க்காததும் என் வாசிப்புச் சார்ந்த சுதந்திரங்களென நான் வாதாட அடங்கி என் நண்பரானவர். 'தேவகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு சண்டையில் ஆரம்பித்தது' என்று எல்லோரிடமும்லொரு குழந்தைபோல் சொல்லிக்கொண்டிருந்தார். உயர்ந்த, சற்று தடித்த, உடல்ரீதியான தாக்குதலுக்கும் தயங்காதவர்போல் எப்போதும் நிமிர்ந்தே திரிந்த அவர் இப்போது இல்லை. ஓர் வீறு தமிழிலக்கையத்தில் எங்கோ அழிந்துபோனதுபோல் உணர்கிறேன். கொடிது கொடிது , மரணம் கொடிது. 000

எதிர்க் குரல்கள்

எதிர்க் குரல்கள் காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன்: சாசுவத உண்மைகள்மீது தீவிரமாக எழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்கு தக தம் இருத்தலை நெகிழ்வித்து/ மாற்றி வந்திருக்கின்றன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவே சாத்தியமாக இருந்திருக்கின்றன. கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா. அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்ட சமூக காலத்திலும் அவை வெவ்வேறு தளங்களிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அவ்வக் கால சமூகம் வேறு எந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டிராது. ஒரு காலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அது தன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தை மட்டுமே சொல்லும். பின்- நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப் படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின்

ஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்

இது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த 'பாப் கார்ன்'சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்கிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது. ஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முட

ஒரு நாடக விமர்சனம்

23-01-2003 இன் முன் மாலை, சென்னைப் பல்கலை மரீனா வளாகத்தில் உள்ள பவள விழா நினைவுக் கருத்தரங்க மண்டபத்தில் அ.மங்கையின் நெறியாள்கையில் உருவான தனி நபர் நாடகமான 'பனித் தீ' நிகழ்த்திக் காட்டப்பட்டது. மகாபரதத்திலுள்ள உப கதையொன்றின் மறுவாசிப்பே இது. மறுவாசிப்பு என்ற பதத்துக்கான அகல ஆழ்வுகளூடு இதிகாச கால பெண்ணின் கொடுமைகள் காட்சியாக்கப் பட்டதோடு , தான் அடக்கப்படும்போதும், கொடுமைகள் புரியப்பெறும்போதும் பெண்ணுள்ளிருந்து வீறிட்டுக் கிளம்பும் வெறி கோபம் ஆகிய உணர்வுகள் 'பனித் தீ'யாய் உணரவைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொருத்தமான பாத்திரம்தான் சிகண்டி. பீஷ்மரைக் கொல்வதற்காகவே பால் பேதங்கடந்து பிறந்த பிறவி. அம்புப் படுக்கையில் குரு§க்ஷத்திரப் போர்முனையில் வீழ்ந்து கிடக்கிறார் பிஷ்மர்.இந்த அம்புகள் அர்ச்சுனனுடையவைதானே என்று முணுமுணுக்கிறார். அது அறிந்து சிகண்டி ஏளனம் பொங்கச் சிரிப்பதுடன் காட்சிகள் விரிவு பெறுகின்றன. சிகண்டி பீஷ்மரைக் கொவதற்கென்றே பிறந்த ஜென்மம்.பிறவி பெண்ணாகக் காணப்பட , பால் நிலை கடந்து ஆணாக வளர்வது ஒரு வைராக்கியத்தில் நிகழ்கிறது. அஸ்திரப் பயிற்சி , வலிமை, அடங்கா வெறி

துக்கத்தின் வடிவம்

இதுவரை இருந்த ஈழத்தின் யுத்த நிறுத்தமும் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சம்பந்தமான பத்திரிகைப் பரபரப்புகள் ஓரளவு இங்கே - இந்தியாவில்- ஓய்ந்துவிட்டிருக்கின்றனபோல்தான் தெரிகின்றன. ஈழ அரசியலைவிட கிரிக்கெட் நல்ல வியாபாரம்தான். இந்துத்துவாவுக்கான அபரிமித ஆளும் வர்க்கத்தின் ஊக்குவிப்பு, எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்குமே ஆப்பு வைப்பதாய் அமையக் கூடுமென்ற பயம் மனிதாயத நலம்விரும்பிகள் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் பத்திரிகைகளுக்கு இரண்டாம் பட்சம்தான். முன்பெல்லாம் , 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்கிற வாதம் மேற்கொள்ளப்படும். பிறரின் சரிகளை - அதாவது பெரும்பான்மையின் சரிகளை - ஒப்புக்கொள்ள மறுக்கும் விவாதம் அது. 'தான் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள்' என்பதே இப்போது கவனமாகிற விவாதம். ஆட்சியாளர்கள் இதையே செய்கிறார்கள். அமெரிக்காவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும், இஸ்ரேலிலும் , ஏன் , ஆப்கானத்திலும் ஈராக்கிலும்கூட,  ஆட்சியாளர்கள் 'தாம் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள் ' என்ற மாதிரியிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். இது இன

சம்பூர்ண நிராகரணம்: 2

விசாரணை 2. இறுதிப் பகுதி இந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த்.பக்.33). இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த. (7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் அடியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கிய

சம்பூர்ண நிராகரணம்: 1

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மதிப்பீடு பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை குறித்தான விசாரணை. விசாரணை 1 பகுதி 1: 1) காலம் இதழ் 15இல் வெளியான எம்.வேதசகாயகுமாரின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை' பற்றிய கட்டுரை எனக்கு 2001 மார்கழியிலேயே வாசிக்கக் கிடைத்து விட்டது. அதன் மறு வாசிப்பு சிந்தனைகளுக்கும், அவசியமான தொகுப்புகளினதும், விமர்சனக் கட்டுரைகளின் மீள் வாசிப்பு யோசனைகளுக்குமாக இத்தனை கால விரயம் அவசியமாயிற்று. இப்போது ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் ஒருங்கே வைத்துப் பார்க்கிறபோது ஒன்று துலக்கமாகத் தெரிகிறது. கிடைத்த தொகுப்புகளையும், சொல்லப்பட்ட தகவல்களையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த்மான ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய மதிப்பீட்டுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதே அது. அது ஈழத் தமிழ்ப் பரப்புக்குச் செய்யும் சகாயமாக நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. முன் முடிவுகளை நோக்கிய வாசிப்பு, ய்வுமுறைச் செலுத்துகைகள் அறிவுலகத் துரோகமாகவே கணிக்கப் படும். தான் பயிலாத கவசதாரியான துரியோதனன் யுத்த களத்தில் பட்ட அவஸ்தையும், அவமானமும் பற்றி வியாசர் அழகாக எழுதியிருப்பார்.கருத்தளவிலும் கவசதாரிகள் இருக

மு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும்...

ஏறக்குறைய மூன்றரை மாதங்களாகிவிட்டன மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு ஊட்டியில் நடைபெற்று. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு கட்டுரை அவசியமா என்றுகூட ஒரு யோசனை என்னிடத்தில் தோன்றியதுதான். ஆனால் காலச்சுவடு- 43 இல் வெளியான நாஞ்சில்நாடனின் கட்டுரைக்கான ஆசிரியர் குறிப்பும், வாலாக நீண்ட செய்திகளும் இன்னும் விவாதத்துக்கும் ஆய்வுக்கும் இவ் விஷயம் இடமளிப்பதைத் தெரிவிப்பதால் இக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். முதலிலேயே நான் எழுதியிருக்கவேண்டும். தவறிப்போய்விட்டது. கூட்டம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்தான் அங்கு நடைபெற்ற விசயங்கள் குறித்தான கட்டுரைகளும் கடிதங்களும் வெளிவரத் தொடங்கின என்பது ஒன்று. எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் முடிந்ததே தவிர அதுபற்றி எழுத எனக்கு அவகாசமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது இனொன்றாக என் கருத்தைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இந்த அவகாசத்தை நான் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவசியமானது. இது ஒருவகையில் ராஜநாயகத்துக்கானதுதான்.சும்மா கிடந்த சங்கை....என்று ஏதோ சொல்வார்களே, அதைச் செய்ததே ராஜநாயகம்தானே? ராஜநாயகத்தை முதன்முதலாக ஊட்ட