Posts

Showing posts from December, 2023

முப்பது ஆண்டுகள் பிந்தி பெய்த மழை

  கூடத்துள் பாய் விரித்துப் படுத்திருந்த அல்லிராணியின் ஜன்னலூடு பாய்ந்த பார்வையில் வௌி கருமை திணிந்து கிடந்தது தெரிந்தது. ஒரு வெள்ளிகூட வானில் பூத்ததாய்க் காணக்கிடக்கவில்லை. முதல்நாள் தன் வீட்டு முற்றத்திலிருந்து அவள் பார்க்க நேர்ந்த இரவு, அதன் பாதியளவும் இருண்மை கொண்டிருக்கவில்லை என்பது ஞாபகமாக அவளுக்கு அதிசயம் பிறந்தது. மாலையில்கூட பார்த்தாளே, அம் மாதிரி இருண்ட பாதிக் கோளமாகும் முன் அறிகுறியேதும் அப்போதும் கண்டிருக்கவில்லைத்தான். பதினொரு மணிபோல் சாப்பிட்டுவிட்டு சிவம் தூங்கச் சென்ற அறையுள்ளிருந்து வெளிமூச்சில் எழுந்த மெல்லிய கீரொலி கேட்டது. தூங்கியிருப்பாரென எண்ணிக்கொண்டாள். மாலையில் விமானநிலையத்திலிருந்து வானில் வந்திறங்கியது கண்டபோதே கொஞ்சம் வயதாகிவிட்டார்போலவே சிவம் அவளுக்குத் தென்பட்டார். ஆயினும் தளர்ந்துபோனாரென்று சொல்லமுடியாதபடியே உடல்வாகு இருந்தது. கடைசியாக அவள் பார்த்திருந்தமாதிரி அல்லவென்றாலும், அதே சிரிப்பும் பேச்சும் கண்வெட்டுமாகத்தான் சிவம் இருந்தார். டென்மார்க்கிலிருந்து அவரின் மகள் கலாவதிதான், ‘வயது போயிட்டுதெல்லோ, ரண்டு மாசத்துக்கு முன்னால இஞ்ச பாத் றூமில சறுக்