Posts

Showing posts with the label chirukathai

சிறுகதை:: கறுப்புப் பூனை

கறுப்புப் பூனை வெளியையும், வெளிச்சத்தையும், மனித நடமாட்டத்தின் அசைவையும், சத்தத்தையும்  தேடுபவர்போல் தன்னின் பெருமளவு நேரத்தையும் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்னர் தன் தேடலின் ஏமாற்றத்தில் ஓடும் வாகனங்களைப் பார்த்துவிட்டு ஒரு வெறுமையான மனநிலையுடன் வீட்டுக்குள் திரும்புகிறார். கனடாவுக்கு வதிவுரிமைபெற்று வந்த கடந்த ஆறு மாத காலத்தையும் குருசாமி அவ்வாறுதான் அல்லாடிக் கழித்துக்கொண்டிருக்கிறார்.  அந்த வீட்டின்மேல் மௌனமாயும், தனிமையாயும் தொங்கிக்கொண்டிருந்த இருண்மைகள் பகலிலுமே நிலைத்துக் கிடப்பனவாய்ப்பட்டது அவருக்கு. அங்கிங்கொன்றாக இருந்த வீடுகளும், ரொறன்ரோ ஏரியில் கலக்கவோடிய செந்நதியுடன் சேர விரைந்த சிற்றாற்றினையொட்டிக் கிடந்த செடிகளும், மரங்களும் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்தினவா அல்லது அந்த வீடே இயல்பில் மௌனத்துக்கும் தனிமைக்குமாய் விதிக்கப்பட்டதாவென யோசித்தவேளைகளிலும் அவருக்குப் புரிபடாதிருந்தது. ஒரேயொரு முனைச் சிந்திப்பில் அதற்கான பதிலை அவர் கண்டடைந்திருக்க முடியும். அவர் விட்டுவந்த புலம் ஜன சத்தங்களாலும், அசைவுகளாலும் நள்ளிரவு வரையி...

யுத்தம் (சிறுகதை)

Image
யுத்தம் (சிறுகதை) கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது. முதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நிலை, ஒரு பிரதான சம்பவத்தின் ஏத...

பேரணங்கு (சிறுகதை)

பேரணங்கு (சிறுகதை) குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான். பெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை. அதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது. அவளுக்கருகே ஆற...