Posts

Showing posts from September, 2023

தேவிபாரதியின் ‘நொய்யல்’: மதிப்புரை

Image
  தேவிபாரதியின் ‘நொய்யல்’: ‘மொழியின் வேட்டைக் காடு’ -தேவகாந்தன்-   தன்னறம் அமைப்பின் வெளியீடாக ஓகஸ்ற் 2022இல் வெளிவந்திருக்கிறது தேவிபாரதியின் ‘நொய்யல்’ புதினம். ‘நிழலின் தனிமை’ (டிச. 2011), ‘நட்ராஜ் மகராஜ்’ (மே 2016), ‘நீர் வழிப்படூஉம்’ (2020) ஆகியவற்றின் பின் வந்த அவரின் நான்காவது   புதினமான இது, இடையிடையிட்ட புகைப்படங்களையும், நான்கு பகுதிகளையும், 630 பக்கங்களையும் கொண்ட பெரும் படைப்பு. ‘கரைகொள்ளாமல் பொங்கிச் சீறும் நொய்யலின் ஹோவென்ற பேரிரைச்சலைத் தவிர வேறு ஓசைகளில்லை’ என பக்கம் 31இல் தொடங்கி, ‘இமைக்காத விழிகளுள் சடலம் உறைந்துநின்றது. அப்படியே கைகளில் அவளை ஏந்தினான். தழுவினான். பிறகு அது மூழ்கத் தொடங்கியது. அடியாழம்வரை சென்றது. பிறகு என்றென்றைக்குமாக இல்லாமல் போனது’ என பக்கம் 630இல் புதினம் முடிவடைகிறது. இவ்வாறாமைந்த இப் பிரதி, ஏறக்குறைய இருபத்தெட்டு ஆண்டுகளாய் படைப்பாளியின் மனத்துள் கிடந்து தன்னை உருவாக்கியபடியும், சிறிது சிறிதாய் வடிவங்கொண்டு எழுத்தில் வந்தபடியுமிருந்த பிரதியென அறியமுடிகிறது. இக்காலத்தில் தனக்கான ஒரு நடையை உள்வாங்கி, ஆயிரம் பக்கங்களிலிருந்து அறுநூறு